ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2016

கடுமையாக உழைப்பவர் சுவாசிக்கும் உணர்வும் ஒரு ஆபீசர் சுவாசிக்கும் உணர்வும் இதே காற்றிலிருந்துதான்...!

பீஸில் வேலைக்குப் போகிறவர்கள் - உட்கார்ந்து வேலை செய்பவர்கள் ஒரு ஐந்து நிமிஷம் வெளியில் மண் வெட்டி எடுத்து வெட்டினால் சோர்வடைந்து விடுகின்றார்கள், களைப்படைந்து விடுகின்றார்கள்.

ஆனால், தன் உணவுக்காக வேண்டி விவசாயத்திற்காக உழைப்பவர்கள் கஷ்டப்பட்டு அவர்கள் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.

இதைப் பெறவேண்டும்
என்று ஏங்கி அவர்கள் சுவாசிக்கும் உணர்வுகள்
எல்லா நரம்புகளுக்கும் அந்த வலிமை ஊட்டும் உணர்வுகளாக அமைந்து அது உமிழ்நீராக மாறுகின்றது.

உமிழ்நீராக மாறி அவர்களுடைய உணவுக்குள் ந்த வீரிய உணர்வுகள் உருவாக்கப்பட்டு அவர்களுடைய இரத்த நாளங்களில் கலக்கப்படும்போது அந்த நல்ல அணுக்களுக்கு அந்த வீரியச் சத்து கிடைக்கின்றது.

அப்பொழுது அவருடைய உழைப்புகள் அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர். அவர் மூச்சு வாங்குவதில்லை.

நம்மால் இரண்டு நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் பலவீனம் அடைகிறது.

ஆனால், அவர்களும் நம் முன்னாடி இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத்தான் வளர்கின்றனர்.

அவர்களுடைய எண்ணமோ, இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையான நிலையில் செயல் படுத்தப்படும்போது
அந்த எண்ணத்தின் வலிமையை அவர் சுவாசித்து
அவர் ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

வசதியுள்ளவர்கள் வசதி குறையும் போது ஒரு சிலர் அந்த மாதிரி முடியாத நிலைகள் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக சோற்றுக்காக எப்படியோ இந்த மண்ணைத் தூக்கி சுமக்கலாம் என்ற எண்ணத்தில் வேலைக்குப் போவார்கள்

வசதி இருந்து வசதி குறைந்தபின் தான் வேலை செய்யப்படும் போது வலுவான எண்ணம் வருவதில்லை.

ப்பொழுது இந்த வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்குக் கடுமையான நோய் வந்து விடுகின்றது. 

வசதியுடன் வாழ்ந்து வசதியற்ற நிலைக்குப் போகும் போது இந்த நோய் வருகின்றது.

எப்படியும் நாம் தொழில் செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த உணர்வுகள் வருகின்றது.
ஆகவே, நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ
அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது.

கடினமா வேலை செய்கிறவர்களிடம் போய் வேறு யாராவது கவலையுடன் சொன்னால் என்ன சொல்வார்கள்?

அட.., போ, அவர்கள் விதி இப்படியிருக்கின்றது, அவரவர்களுக்கு எப்படியோ அப்படி நடக்கின்றார்கள் என்பார்கள்.

ந்தக் கவலையை அவர்கள் நுகர்வது இல்லை. அவர்கள் சொல்லக்கூடிய கஷ்டத்தையோ வேதனையையோ எடுத்துக் கொள்வதில்லை.

ஆக மொத்தம் அவர்கள் படும் உணர்வுகள் அவர்களுக்குள் வருவது இல்லை. இயற்கையில் சந்தர்ப்பங்கள் அவரவர் நுகர்ந்த உணர்வை வைத்துத்தான் அவர்கள் செயலாக்கம்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.