நம் உடலுக்குள் எண்ணிலடங்காத
உணர்வுகள் உண்டு. காலையிலிருந்து
இரவு வரையிலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும் நமது உயிர் இயக்கிக்
காட்டுகிறது,
உணரச் செய்கிறது, அந்த
உணர்வின் வழியில் நம்மை இயக்குகிறது.
ஆனாலும்,
நமது உடலில்
ஏற்கனவே நமக்குள் எந்தெந்த ஆசைகளை நாம் உணர்வாகக்
கவர்ந்து
பதிவாக்கி வைத்துள்ளோமோ அந்தந்த குணங்களின் தன்மை கொண்டு அதன் உணர்வுகள்
தன்னை வளர்த்துக் கொள்ள
விரும்புகிறது என்பதனை நாம் அறிந்து கொள்வதற்கு அதைக்
“கௌரவர்கள்" என்று காரணப்பெயர் வைக்கின்றனர்.
உதாரணமாக ஒரு மரத்தை எடுத்துக் கொள்வோம். வேப்பமரமோ
மாமரமோ எதனை அவைகள் கவர்ந்துக் கொண்டதோ அதனதன் உணர்வைத் தவிர
வேறு எதுவும் எடுப்பதில்லை. இதைப்
போன்று
நாம் எதைப் பெறவேண்டும்?
எதைச் செயல்படுத்த வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்? என்ற உணர்வை
நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து
நுகர்ந்து
நம் உடலிலே பதிவாக்கிக்
கொள்கின்றோம்.
அந்தப்
பதிவின் உணர்வுகளை
மீண்டும் அதன் உணர்வுகளைப் பெறும் உணர்ச்சிகளை நாம்
தூண்டி அதையே பெறச் செய்கின்றது.
எதைப் பெறச்செய்ய வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்குகின்றமோ மீண்டும்
அதையே உருவாக்குகின்றது.
அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்
போது நாம்
எண்ணிய உணர்வுகள் மீண்டும் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளாக நம்மைச்
செயல்படுத்துகின்றது
உதாரணமாக நாம் எந்தெந்த
உணவுகளை உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த உணவும் அதன் உணர்வும் நமக்குள் அது
சுவையாகின்றது.
சிலர் பாகற்காயை விரும்பிச்
சாப்பிடுவர்.
சிலர் பாகற்காயைக்
கண்டவுடன்
வெறுப்பர்.
ஏனென்றால், சிலர் கசப்பின் சுவையை விரும்புவர்
சிலர் கசப்பை விரும்புவதில்லை.
சிலர் இனிப்பை விரும்புவர்.
சிலர் இனிப்பை விரும்புவதில்லை.
இன்று நீக்ரோ
நாடுகளில் எடுத்துக்கொண்டால் அவர்கள் உப்பே சேர்த்துக் கொள்வதில்லை. நாம் சாதாரணமாக
பசை ஒட்டுவதற்கு
எப்படி மைதா மாவைக் கிளறி ஒட்ட வைக்கிறோமோ
அதே மாதிரி வெறும் தண்ணீரையும் இதையும் போட்டு களியாக
உருவாக்குகின்றனர்.
அதிலே கருவாடோ
மற்ற உணவுகளை ரசம் மாதிரி வைத்து அந்த வாசனை வைத்து அதை அந்த வாடையில் துவட்டி அதை
உட்கொள்கின்றனர். உப்பே போடுவதில்லை.
நாம் இங்கே தமிழ் நாட்டில்
அறுசுவை
கொண்டு உணவை உருவாக்குகின்றோம். அறுசுவை
கொண்டு உணவை நாம் உட்கொண்டாலும் அவர்களுக்கு (நீக்ரோ) இந்தச் சுவை பிடிப்பதில்லை. வெறுக்கின்றனர்.
நாம் எவ்வளவு சுவையாக வைத்தாலும்
அவர்கள் பதிவு செய்த எந்த அணுவின் அவர்
உடலுக்குள் பெற்றுள்ளதோ
அதைத்தான் அது விரும்புகின்றது.
அதன் உணர்வை இரத்தமாக்கி
அவன் உணர்வுக்கொப்ப அதைச்
சேர்க்கப்படும்போது
அது அவனுக்குள்
ஒத்துக்கொள்கிறது.
அப்பொழுது
அவன் உடலிலே
வளர்த்துக்கொண்டது கௌரவர்கள் தான்.
இன்று நாம் தமிழ்நாட்டில்
சன்ன அரிசியை உணவாக உட்கொள்கிறோம். அதே சமயத்தில் கேரளாவில் உமியை
மட்டும் நீக்கிவிட்டு
அது மேல் உள்ள சத்துடன்
அவர்கள் சாப்பிடுகின்றனர்.
அந்த அரிசியைப் பார்த்தால்
இதை
எவன் சாப்பிடுவான்?
என்று நாம்
சொல்வோம்.
நாம் சாப்பிடும் அந்தச்
சன்ன அரிசியைக்
கண்டவுடன்
இதை நாங்கள் எப்படிச் சாப்பிடுவோம்? என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஏனென்றால்,
அவரவர்கள் எடுத்துக் கொண்ட சுவைக்கொப்ப அதனதன் உணர்வுகளும்
அணுக்களும் பழகி விடுகின்றது. நாக்கும் அந்தச்
சுவையை மாற்றிவிடுகின்றது.
இப்படி நாம் எதை எதை எண்ணி
நம் உடல்களிலே எடுத்துக் கொள்கின்றமோ அதுவும் அந்த மணத்தைக்
கண்டதும் ஏற்றுக்கொள்வதில்லை. இதுவும் கௌரவர்கள்தான்.
நல்ல சுவைகொண்ட உணவை நாம்
கொடுத்தோம் என்றால் கேரளாவிலிருந்து வந்தவர்கள் அந்த
அரிசியைச் சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்ச நாள்
பழக்கப்படுத்துகின்ற வரையிலும் மனது சங்கடமாகத்தான்
சாப்பிடுவார்கள்.
அவர்கள் சாப்பிடுகின்ற
அரிசியை நாம் சாப்பிடும்போது நாமும்
சங்கடமாகத்தான்
சாப்பிடுவோம்.
எப்படி
இதைச்
சாப்பிடுவது என்று சொல்லிக் கொண்டு, ஜெயிலில் இருந்து விடுபட்ட மாதிரி கேரளாவுக்குள் போய்விட்டு
எல்லோருடைய வீட்டிலேயும் இதைத்தான்
கொடுப்பார்கள் என்ற நிலையில் எப்பொழுது நம் ஊருக்குப்
போவோம் என்ற நிலை வரும்.
ஏனென்றால், நாம்
எடுத்துக்கொண்ட உணர்வின்
அணுக்களின்
வேலைதான். இவை
உயிரிலே பட்டு இந்த
உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அது இயக்கப்படும்போது நம் உயிர் குருவாக இருக்கிறது.
எதை எடுத்து நாம் பழக்கப்பட்டோமோ அதைக் காக்கும்
திறன் தான் நம் உயிருக்கு உண்டு.
இதைப்போல நாம் எதை எதை
விரும்பி அந்த விருப்பத்தின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கியுள்ளமோ அது அணுவாக மாறுகின்றது. அப்பொழுது
அந்த குணங்களுக்கு
அத்தகைய உணர்வுதான் உணவாகத் தேவைப்படும்.
ஒருவரை நாம்
திட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். .அவரைப்
பாரத்தவுடனே
திட்ட வேண்டும் என்று தான் உணர்வுகள் வரும்.
அவரை
ஏன்
இந்த மாதிரித்
திட்டுகிறீர்கள்..,? என்று
யாராவது சொன்னால் என்ன சொல்வோம்.
உங்களுக்குத் தெரியாது,
அவர்
அப்படித்தான்
இருப்பார் அதனால் தான் இப்படி
என்போம். அதே
உணர்வு நமக்குள் அணுவாக வரப்படும்போது அந்த அணுவுக்கு இந்த
ஆகாரம் தேவை. அந்த
உணர்ச்சிகள் உடலிலே படும்
அவனைப்பற்றி வெறுப்பான உணர்வுகள் வைத்தால்
அது கௌரவர்கள், நல்லதை
எடுக்க விடாது.
இப்படி தன் உடலிலே வரக்கூடிய
உணர்வும் எதை எடுத்தோமோ உயிரும் குருவாக இருக்கின்றது. எந்த உணர்வோ
அதன் வழி அதைக் காக்கும் கௌரவத்தன்மை கொண்டு அதுவும் குருவாகத்தான் இருக்கின்றது.
நாம்
சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வும் நமக்குள் எப்படி நம்மை இயக்குகிறது? நாம் இயங்குகிறோமா? நாம் நுகரும் உணர்வு நம்மை இயக்குகிறதா? என்பதை நாம்
தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.