ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2016

தியானத்தில் துருவ நட்சத்திர சப்தரிஷி மண்டல அலைகள் உங்கள் ஆன்மாவில் பெரிய வட்டமாகப் பெருகும்

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும், சொம்பும் தழும்பாது.

நம் உணர்வுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டும் என்றால்
எதிலிருந்து எப்படி நீக்க முடியும்?

அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க,
அருள் உணர்வுகள் பெருகப் பெருக அது தணியும்.

உதாரணமாக, ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடிப்போரை மடியச் செய்கின்றது. அதிலே பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது பாலின் விஷத் தன்மை சிறுகச் சிறுக குறைந்து ஆயிரம் குடம் பாலுக்கு வீரிய சக்தியாக இந்த விஷத்தன்மையே அடைகின்றது.

இதே போல விஷம் கொண்ட உணர்வுகள் பலவும் நமக்குள் இருப்பினும் நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நூறு முறையாவது இரவிலே நாம் சொல்வோமென்றால் இந்த உணர்வுகள் நமக்குள் சுத்தப்படுத்துகின்றது.

ம்முடைய நினைவின் ஆற்றல் சப்தரிஷி மண்டலங்களுடன் செல்கின்றது. அதைப் பற்றுடன் பற்றும் நிலையும், அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதே ந்தப் பயிற்சி.

ஆகவே, சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நூறு முறையாவது சொல்லுங்கள்.

பின், நாங்கள் மலரைப் போன்ற மணமும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். அடுத்து எங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் மலரைப் போன்ற மகிழ்ச்சியும் எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லாம் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும். என்று எண்ணுங்கள்.

பின் உங்கள் குடும்பத்தில் எதை எல்லாம் நல்லதாக வேண்டுமோ, பையன் மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று பையன் நல்ல கல்வியில் ஞானம் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் கடை முழுவதும் படரவேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

நாங்கள் பார்ப்பவர் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். எல்லோரும் நலமும் வளமும் பெறவேண்டும். ங்கள் சொல்லைக் கேட்பவர் எல்லாம் வாழ்வில் இனிமை பெறவேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
இதில் ஒன்றும் உங்களுக்குச் சிரமமில்லை.
இதுதான் வாழ்க்கையே தியானம் என்பது.

 வ்வாறு உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றீர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குள் தீவினைகளை அகற்றும் நல்வினையாக உங்களுக்குள் விளைகின்றது. இதை நாம் பெருக்கப் பெருக்கத்தான் வரும்.

ஏனென்றால், இன்று நாம் ஒரு வித்தை ஊன்றிவிட்டால் அது ளர்ந்து வரப்படும் போது உரத்தை இட்டு செடியை நல்ல செடியாக மாற்றுகின்றோம்.


ம் மனித வாழ்க்கையில் பல தீமைகள் நினைத்து அதனால் உடலில் சோர்வாகி நோய் வரப்படும்போது நாம் இன்று மருந்தை உட்கொண்டு நீக்குகின்றோம்.

வயலில் களை முளைத்து விட்டால் நாம் என்ன செய்கின்றோம்?

களையை நீக்குகின்றோம்
ஆனால், மீண்டும் களைகள் வருகின்றது.
மீண்டும் மீண்டும் களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைப் போல, நமக்குள் ஆழமாக முந்திப் பதிந்த உணர்வுகள் நமக்குள் வாழ்க்கையில் பிறர் தவறு செய்வதைப் பார்த்தவுடன் உடனே இது வந்துவிடும்.

நாம் எவ்வளவு தான் வந்தாலும் இதைப் போல உணர்வுகள் உடலில் களை முளைக்காது தடுக்க அவ்வப்பொழுது நாம் இரவிலே தூங்கும்போது துருவ
நட்சத்திரத்தை எடுத்து நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது, நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு உரம் இட்டது போலவும், சக்தி வாய்ந்ததாகவும் அது மாறிக் கொண்டே இருக்கும்.

காலை எழுந்தவுடனே இதே மாதிரித் தியானியுங்கள். என் கணவர்  மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும். என் குழந்தைகள் மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் ன்றாக இருக்க வேண்டும்.

ங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும். நாங்கள் பார்க்கின்றவர்கள் எல்லோரும் ன்றாக இருக்க வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.

சொல்லும்போது இந்த உணர்வுகள் திருப்பி நம் ஆன்மாவிலேயே தான் சேர்கின்றது.
இந்த உணர்வின் நிலைகள்
நம் ஆன்மாவின் வட்டம் பெருகுகின்றது.
தீமையை அகற்றும் சக்தியாக மலர்கின்றது நம் ஆன்மா

ஆகவே, நம் நினைவின் ஆற்றலும் நமக்கு நல்லது செய்யும் தன்மையாக இது மாறுகின்றது. இதைப் போன்று செய்து பாருங்கள்.