இன்று
படிக்கவில்லை என்று நீங்கள்
சிந்திக்க வேண்டாம். இராமாயணக்
காவியத்தை இரவுகளில் பனிக்காலங்களில் இதைச் சொல்வார்கள்
விடிய விடிய உட்கார்ந்து
கேட்பார்கள். அதே போன்று மகாபாரதத்தையும் சொல்வார்கள்.
படிப்பே இல்லாதவர்கள்
அதைக் கேட்டபின் மனதில் பதிய
வைத்துக் கொண்டு
அப்படியே திருப்பிச் சொல்வார்கள்.
இராமாயாணக்
காவியத்தைப் படித்தவர்கள் அதில் ஒன்றைத்
தெரிந்திருந்தாலும் அதைக் கேட்டவர்
அதற்குத் தக்கவாறு அக்காலங்களில்
இந்த உணர்வைத் தெளிவாக்கும்
நிலைகள் கூட வந்துள்ளது.
ஆகையினால்,
சாமி சொல்வது புரியவில்லை என்று நீங்கள்
எண்ணாது
அறிய
வேண்டும் என்ற ஆசையின்
நோக்கத்துடன்
உணர்வினைப்
பதிவு செய்து கொண்டால்
இந்த நினைவாற்றல் உங்களை அறியச்
செய்கின்றது.
மனிதனாக
எவ்வாறு உருவானோம் என்ற உணர்ச்சியைத்
தூண்டச் செய்கின்றது.
மனிதனான
பின் இன்று உணர்வின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது? என்ற
நிலையை அறிய வல்லமை
பெறுகின்றது.
அந்த
உணர்வை நுகர்ந்தால் நமக்குள் உருமாற்றத்தையும்
இனி
பிறவியில்லா நிலைகள் அடையும்
மார்க்கத்தை நீங்கள் தெரிந்து
அந்த நிலையை
அடையவேண்டும் என்பதற்கே
இதைப் பதிவு
செய்கின்றேன்
என்றும்
பிறவியில்லா நிலையை அடைதல்
வேண்டும். இந்த உயிருடன் ஒன்றி
ஒளியின் சரீரமாக நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை உங்களுக்குள்
சொல்லுகின்றேன்.
ஆகவே,
நமக்குள் எப்படி உருவானது
என்ற நிலையையும் ஆதியில்
எப்படி உருவானது என்ற நிலையும் அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி? என்ற நிலைகளை நாம் அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால், இன்று விஞ்ஞான உலகில்
உலகமே மனிதனின் சிந்தனை
அனைத்தும் சிந்திக்கும் திறன்
இழக்கும் தருணம் வந்துவிட்டது.
சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் வல்லமை அதிகரித்து
விட்டது.
ஒரு
மனிதன் ஆயிரம் சிந்தனை
கொண்டாலும் ஒரு விஷம்
தாக்கிவிட்டால் அந்தச் சிந்தனை அனைத்தையும் அழித்துவிட்டு ஐ..ய்..ய..ய்...யோ..., என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்துவிடும்.
இந்த உடலைக் காக்கும்
உணர்ச்சியின் தன்மை கூட
வராது.
எனக்கு
இப்படி ஆகிவிட்டதே என்று
அதனுடன் ஒன்றி அது
மடியும் தருணமே வருகின்றது. ஆக,
மனிதனின் நல்ல உணர்வுகள்
முழுமையும் மடிந்து விடுகின்றது.
இதைப் போல
உலகக் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை
அடையும் தன்மையும்
நமது
சூரியக் குடும்பமே பிரபஞ்சமே
மனிதனால்
ஏற்படுத்திய விஞ்ஞான அறிவு
கொண்டு
அகண்ட பிரபஞ்சத்திற்குள் விஷத்தன்மை பரவி
அதிலே
சுழலும் தன்மை வந்து
சூரியன்
கவரும் அந்தக் காந்தப் புலனறிவிலும்
விஷத்தன்மைகள் பரவி
அதிலிருந்து
வெளிப்படுவதை நமது பூமி
கவர்ந்து
நமது
பூமிக்குள் கவரப்படும்போது
இங்கே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிகின்றது.
தாவர
இனங்களிலும் சரி முந்தி
வளர்ச்சியடைந்த தாவர இனங்கள் உறுமாறுகின்றது சரியான வெள்ளாமை இல்லாது
போகின்றது. மனிதனுடைய சிந்தனையும்
சீர் குலைந்து வருகின்றது.
இனம்
புரியாத புதுப்புது நோயை உருவாக்கும் அணுக்கள் உருவாகி மனித உடலில் புதுப்புது நோய்களும் உருவாகின்றது.
இதைப் போன்று மனிதன்
சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும்
புழுவாக, பூச்சியாக, பறவையாகப்
பிறக்கும் நிலை வந்துவிடும்.
இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலை வேண்டும்.
மனித உணர்வின் தன்மை
கொண்டு
நாம் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து
நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
அந்த நம்பிக்கை உங்களுக்கு
வரவேண்டும்.