இன்று உதாரணமாக பஸ்ஸுக்குச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது தன் உடலால் உழைக்க முடியாத நிலைகள்
கொண்டு நோயுற்றோ, நடக்க முடியாத நிலைகள் கொண்டோ அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்
ஒருவரைப் பார்க்க நேர்கின்றது. இரக்க மனம் கொண்டு பார்க்கிறோம்.
அவன் தன் பசியைப் போக்க, “ஐயா.., என்ற சோக உணர்வுடன் கத்தும் போது இந்த
உணர்வின் தன்மை நம் செவிகளில் பட்டு அந்த உணர்வுகளைத் தூண்டும்.
தூண்டும் போது நாம்
அவனுக்குக் காசை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதற்குள் பல முறை சொல்லிவிடுவான்.
நம்மை அறியாமலே வெறுப்பின்
தன்மை கொண்டு அவன் செயலை நாம் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம். வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பம் அவன் பசியைப் போக்க அவன் கேட்கின்றான். ஆனால், நாம் காசை
எடுப்பதற்கு முன் சோக உணர்வு கொண்டு “ஐய்ய்யா..ஆஆ..,” என்று சொல்வான்.
அப்பொழுது உங்கள் மனது எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த
உணர்வுகள் சோக கீதங்கள் இங்கே பாட ஆரம்பித்துவிடுகின்றது.
இந்த உணர்வுகள் உள் சென்றபின் அவன் மேல் அதிகமான வெறுப்பான
உணர்வாகின்றது, அந்த உணர்வின் சக்தி நமக்குள் சேர்ந்து கொள்கின்றது. நாம் தவறு செய்யவில்லை.
எப்படியோ இரண்டு காசு அவன் சொல்லுக்காக வேண்டி இதை விட்டுப் போனால் போகின்றது..,
கொடுக்கலாம்.., என்று நினைப்போம்.
ஆனால், அவன் கூட இரண்டு தரம் சொல்லிக் கொண்டேயிருப்பான்.
காசை எப்படியாவது கொடுத்து அவனைத் துரத்திவிடலாம் என்ற வெறுப்பின் உணர்வுடன் தான் காசைப்
போடுவோம். ரொம்பவும் அதிகமாகப் போய்விட்டது என்றால் முறைத்துப் பார்ப்போம்.
நாம் முறைத்துப் பார்க்கும்போது அவனுடைய நினைவு எப்படி வரும்?
ஒரு டேப் ரிக்கார்டில் பதிவு செய்த மாதிரி
“எனக்கு வந்தது உனக்கு வர
எவ்வளவு நேரமாகும்?”
என்று அவன் உள்ளூர
நினைப்பான்.
இந்த நினைவுடன் அவன் மூச்சலைகளை வெளிவிடும் போது அவன் முறைப்பான்.
நாம் உடனே “என்னடா முறைக்கிறாய்?” என்போம்.
அவனுக்குள் வெளி வந்த மூச்சை நாம் நுகர்ந்து வைத்துக் கொள்கிறோம். நாம் தவறு
செய்யவில்லை.
அப்பொழுது உங்களை அறியாமலே அவனுக்குள் எவ்வளவு உணர்ச்சியைத் தூண்டி நம்மை
வெறுக்கும் நிலை வரப்படும் பொழுது அவனிடம் விளைந்த உணர்வுகள் திருப்பி வெறுக்க
எவ்வாறு செய்கின்றது? என்பதைப் பார்க்கலாம்.
ஆக, அவனில் விளைந்த வெறுப்பின் நிலைகள் நமக்குள் வந்து வெறுக்கும் நிலை அடைகின்றது.
இவ்வாறு நமக்குள் வெறுக்கும் ஆன்மாவாக விளைந்தபின் நாம் அடுத்து என்ன நடக்கும்?
ஒருவன் நம்மிடம் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு
பொருளை எடுத்து வரச் சொல்லும் போது அவன் இரண்டு எட்டு மெதுவாக நடந்தால் போதும்
அங்கே அதே வெறுப்பின் தன்மையே வரும்.
காரனம் நாம் எந்த வெறுப்பின் தன்மை அடைந்தோமோ அவன் எப்படி முறைத்துப் பார்த்தானோ
(பிச்சைக்காரன்) அந்த உணர்வுகள் நமக்குள் ஆகி நம்மிடம் வேலை செய்பவனிடம் இதைச்
சொன்னால்
நம்முள் ஆன்மாவாக இருப்பது
நம்மை உற்று நோக்கும் போது
நமக்குள்
இருக்கும் மணம் அவனை வெறுப்படையச்
செய்யும்.
நாம் சில மரம் செடி வகைகளை நுகரப்படும் போது மகிழ்ச்சியும் சில வகைகளை
நுகர்ந்து பார்க்கும் போது மயக்கமும் வரும்.
இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை அதிகமாக எது வருகின்றதோ அதுதான் நம் உடலில் மணமாக மாறும்.
இந்த மணம் அதிகமாக்கப்படும் போது அது நமக்குள் சுவாசிக்கும் போது சிறுகச்
சிறுகக் கிளர்ந்து அது மீண்டும் எடை குறையாது அந்த மணத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கும்.
ஏனென்றால், நஞ்சுக்கு வீரிய சக்தி அதிகம். இதைப் போல அந்த உணர்வுகள் நமக்குள்
ஆகும் போது நம் பையனிடம் சொன்னாலும் அவனும் முறைத்துப் பார்க்க ஆரம்பிப்பான்.
இரண்டாவது தரம் அவன் எப்படி “ஐயா.., ஐயா..,” என்று சொன்னானோ நாம் இதே உணர்வு
கொண்டு அவனிடம் திருப்பித் திருப்பிச் சொல்ல ஆரம்பிப்போம்..
நம் பையன் கூட நம் பேரில் வெறுப்படைவான்.
வீட்டில் மனைவியிடம் சொன்னாலும் இனம் புரியாமல் வெறுப்பார்கள்.
அடுத்து இதைப் போய் ஜோதிடக்காரனிடம் கேட்டால் உங்களுக்கு “ஏழரை நாட்டான் சனி”
பிடித்திருக்கின்றது, கெட்ட காலமாக இருக்கிறது என்பான். உங்கள் நட்சத்திரப்
பிரகாரம் இப்படி இருக்கின்றது என்று அவன் சொல்வான். நம்மை உறுதிப்படுத்தி விடுவான்.
இவைகள் எல்லாம் நம்மை அறியாதபடி விளைந்த இந்த உணர்வுகள் இப்படி இயக்கிவிடுகின்றது.
ஆனால், பஸ்ஸுக்காக ரோட்டில் நிற்கும் போது பிச்சைக்காரனைத்தான் சந்தித்தோம். அவன்
நம்மை முறைத்துப் பார்த்தான், பதிலுக்கு நாம் அவனை முறைத்துப் பார்த்தோம்
என்றுதான் இருப்போம்.
ஆனால் இது என்ன செய்கின்றது?
பாலில் பாதாமைப் போட்டாலும் ஒரு சிறிதளவு காரத்தை போட்டால் யார் குடித்தாலும் அந்தக்
காரம் காரம் என்றுதான் சொல்வார்கள். நல்ல சுவையை இயக்க விடுமா?
நான் ரொம்ப நல்லவர், சக்தி பெற்றவர். எல்லாவற்றையும் நீக்கிவிடுவேன் என்று
சொல்லிக் கொண்டு ஒருவர் அதைச் சாப்பிட்டாலும் அவரும் காரம் தான் என்று சொல்வார்.
இதைப் போன்றுதான் இந்த உணர்வுகள் இங்கே இயங்கப்பட்டுக் குடும்ப வாழ்க்கையில்
சிக்கல், இனம் புரியாத வெறுப்பு. தனக்கு முதியவர்கள் இருந்தாலும் இதே நிலையை
உருவாக்கிவிட்டு வீட்டில் கலக்கங்கள் வந்துவிடும்.
ஏனென்றால், எவன் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐய்ய்யா..ஆஆ..,” இந்தச் சோகமான
உணர்வுகள் அவன் எப்படி
வேதனைப்பட்டானோ நமக்குள் ஆகி உயிரின் இயக்கங்கள் ஆகும் போது நம் உணர்வுகள் எப்படி அலைகின்றது என்று பார்தால் தெரியும்.
இது
வித்தாக ஊன்றிவிடுகின்றது.
இதெல்லாம் இயற்கையின் சில
நிலைகள்.