ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2015

முருகா, சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா

இன்று விஷமான நிலைகளில் ஒரு உணர்வை நாம் சுவாசித்துவிட்டால், தம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை மாய்க்கச் செய்கின்றது. நம் உடல் சோர்வடைகின்றது.

மெய்ஞானியின் அருள் ஒளியை நம் உடலுக்குள் சுவாசிக்கும்போது நம்மை மயங்கச் செய்யும் இந்த விஷத்தின் சத்தை அதை பலவீனப்படுத்தி நமக்குள் ஆக்கரீதியான ஒளியாக மாற்றும் ஆற்றல் பெருகும்.

தங்கத்திற்குள் பித்தளை கலந்திருந்தாலும், திராவகத்தை ஊற்றியவுடன், பித்தளைகள் ஆவியாக மாறி அது தங்கத்தின் ஜொலிப்பின் தன்மையை அது வெளிப்படுத்துகின்றது.

அதைப்போன்று நாம் நம் வாழ்க்கையில் நம்மையறியாது, எத்தனை கசடுகளான தன்மைகள் நமக்குள் சென்றிருந்தாலும் மெய்ஞானியின் அருள்சக்தியை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை மாய்த்து,
பொருளறிந்து செயல்படும் எண்ணத்தால்
அறிந்துணரும் அந்த ஒளியின் சக்தி உணர்வின் கொண்டு
மங்கவிடாது தடுத்து பழக வேண்டும்.

இந்த ஆறாவது அறிவான நிலைகள் முருகா
முருகு - மாற்றியமைக்கும் சக்தி
சரவணபவா - எதையுமே சரணமடையச் செய்யக்கூடிய சக்தி
குகா - குகைக்குள், இந்த உடலான சரீரத்திற்குள் இருந்து
கந்தா - வருவதையெல்லாம் அணைத்து
கடம்பா - உருவாக்கி
கார்த்திகேயா - உணர்வை அழகுப்படுத்தி
உயிரான ஒளியுடன் உடலில் மறைந்துள்ள ஒளியை ஒளியான உயிருடன் ஒளி சரீரத்தை உருப்பெறச் செய்வது.

இன்று இருளான பல பொருட்களைச் சேர்த்து ஒரு விளக்கை எரித்து மற்ற பொருளைத் தெரிந்து கொள்கின்றோம்.
மற்ற பொருட்களைச் சேர்த்து
ஒன்றை உருவாக்கச் செய்கின்றோம்.

அந்த உணர்வின் நிலைகள் ஆக்குவது போன்று நமக்குள் நாம் எண்ணத்தை ஒளியாக்கி நமக்குள் எண்ணும் நிலையினுடைய தன்மையை, சிருஷ்டிக்கும் தன்மை பெற்ற நாம் ஒவ்வொருவரும் செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும் தன்மைதான் அந்த மெய்ஞானிகள் எப்படி சப்தரிஷி மண்டலங்களில் இருந்தார்களோ, அங்கிருந்து வெளிப்படும் அந்த நாரதரான உணர்வின் அலைகளை நாம் சுவாசித்து,
நம்மையறியாமல் இருகில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும்
இந்த நிலைகளிலிருந்து நம்மை மீட்டுத்தர
அந்த நாரதர் என்ற அணு நமக்கு நல்வழி காட்டும்.

இன்று நாம் சாதாரண மனிதனை எண்ணும்போது ஆத்திரப்படுகின்றோம். நமக்குத் துன்பம் செய்தான் என்றால், இப்படிச் செய்தான் என்று ஆத்திரப்படுகின்றோம்.

இரு நான் பார்க்கின்றேன் என்றும், உன்னை அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி இருந்தால், அவனை நினைக்கும் போதெல்லாம் “திடுக்... திடுக்” என்று நமக்குள் பயத்தை ஊட்டிக்கொண்டிருக்கும்.

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும்போது நம்மைச் செயலிழக்கச் செய்யும் பல நிலைகள் வருகின்றது. ஏனென்றால் அவன் பதித்த நிலைகள் நமக்குள் வேலை செய்கின்றது.

உங்களுக்குள் எத்தகைய பயம் வந்தாலும் மெய் ஞானியின் அருள் சக்தியைப் பதிவு செய்து யாம் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.

ரிஷியின் மகன் நாரதன், ஏனெறால், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய ஒளிதான் அது. அந்த ஒளியிலிருந்து வந்த அந்த அணு நாரதன்.

அந்த உணர்வின் செயலாக்கம் தான் நாரதன், அவன் ஒரு முனிவன். அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தவுடன், அதன் ஆணைப்படி அது நல்லதை வழிகாட்டி
இருளை மாய்க்கும் தன்மை –
முனி என்ற நிலையை
அன்று தெளிவாகக் காட்டி உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெற்று இருளினை நீக்கி அருள் வழி வாழ்வோம்.