ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியுறச் செய்வதற்கு
என்ன செய்ய
வேண்டுமென்று
போகமாமகரிஷி ஒவ்வொரு
மனிதரையும் தேடிச் சென்றார்.
அவர் காட்டுக்குள் சென்றாலும் நாட்டுக்குள் ஒவ்வொரு
மக்களுடைய துன்பங்களையும் நீக்கி அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தார்.
5300 ஆண்டுகளுக்குமுன் தன் மனதிற்கொத்த நிலைகளில் மனிதர்கள்
வாழ்ந்து வந்தாலும்
போகமாமகரிஷி அவர்களுக்குள் விளைந்த துன்பத்தை நீக்கி,
தன் எண்ணத்தால் அவர்களின் நிலைகளை மாற்றி
அந்த உணர்வின் சத்தான நிலைகளைத் தனக்குள் சேர்த்து
ஆற்றல் மிக்க நிலைகளைத் தனக்குள் சுவாசித்தார்.
சுவாசித்த நிலைகள் கொண்டு, பழனியம்பதியில் தன் உடலுக்குள்
இருந்தே தமது எண்ண அலைகள் கொண்டு, தன் உணர்வின் ஆற்றலின் தன்மையைக் கொண்டு ஒவ்வொரு
உணர்வின் தன்மையும் கண்டறிந்தார்.
இன்று இருக்கும் காவியங்களில் போகருடைய நிலைகளைப் பல கதைகளைச்
சிருஷ்டித்து அவருடைய உண்மை நிலைகளுக்கு மாறாக வைத்திய ரீதியிலும், மாந்திரீகத்தைத்
தொகுத்தும் எழுதி வைத்துவிட்டார்கள்.
பழனி மலையில் அவருடைய சீடர் என்ற நிலைகளில் மடங்களாக
அமைக்கப்பட்டு அரச காலங்களில் உண்மையின் நிலைகளை மாற்றிவிட்டார்கள்.
ஆனால், அந்த மெய்ஞானியான போகர் ஒவ்வொரு நாட்டிலும் தன் தன்
உணர்வின் தன்மையை ஊடுருவச் செய்து, அந்த உடலுக்குள் நின்று இயக்கச் செய்து அங்கிருக்கும்
நிலைகளை தான் இருந்த இடத்திலிருந்தே பல நிலைகளைக் கண்டறிந்தார்.
இவ்வாறுதான் மக்கா, மதினா, சீனா, இஸ்ரேல் போன்ற இடங்களைக்
கண்டுணர்ந்தார். பிற்காலத்தில் வந்தவர்கள் கவனக் குளுகை உருவாக்கினார் என்றும் ககன
மார்க்கமாகச் சென்றார் என்றும் தத்துவத்தை உருவாக்கிவிட்டார்கள்.
தான் இருந்த இடத்திலிருந்தே தன் எண்ணத்தால் ஒவ்வொரு
சரீரத்திற்குள்ளும் ஊடுருவி தன் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து, தன் எண்ண
அலைகளால் அவர்களைச் செயல்படுத்தும் ஆற்றலைச் செயலாக்கினார் போகர்.
இவ்வாறு செயலாக்கும் தன்மை கொண்டுதான் இஸ்ரேல் என்ற நாட்டில்
வறுமையும், உணவுப் பொருட்கள் இல்லாத பொழுது அந்த உணர்வுக்குத் தக்கவாறு எண்ணங்கள் எவ்வாறு நடக்கின்றது என்ற
நிலையை தன் உணர்வின் தன்மையை ஊடுருவச் செய்து அறிந்துணர்ந்தார்.
ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்கு இருக்கக்கூடிய உணர்வும்,
அவன் இறந்தபின் உணர்வின் தன்மை எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையை
அறிந்துணர்ந்தார்.
மனிதனுக்குள் வளர்த்துக் கொண்ட எண்ணத்தின் தன்மையை பல
பாகங்களிலும் தன் உணர்வினைப் பதிவாக்கி, இருந்த இடத்திலிருந்தே உணர்வின் ஆற்றலைத்
தனக்குள் பெற்று அந்த உணர்வை வெளிப்படுத்தினார். போகர்.
தன் உணர்வினை
ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவச் செய்து
உணர்வினை ஒளியாக மாற்றி
இந்த உடலைவிட்டு மெய் ஒளியாக அவர் விண் சென்றார்.