இன்று கம்ப்யூட்டரில், அதன் அலைவரிசையில் ஒருவரின் சங்கடமான
உணர்வின் மூச்சலைகள் பட்டுவிட்டால் இந்த அலைகள் அங்கு சென்று சிக்கல்
போட்டுவிடும்.
ஏனென்றால், மனிதருடைய உணர்வலைகள்தான் கம்ப்யூட்டரில்
வருகின்றது.
ஆனால் மனிதருடைய எண்ண அலைகள் பாய்ச்சிப் பாய்ச்சி பிழையாகி
விட்டால் அதுவே வந்துவிடும். அதையே சுவாசித்த மனிதருடைய புத்தி மாதிரி அதுவும்
தடுமாறிவிடும்.
இது இயந்திரம்தான். ஆனால் மனித உடலில் எடுத்துக்கொண்ட
உணர்வின் அலைகளை விஞ்ஞானத்தின் ரூபமாக எடுத்துக்கொண்டான்.
முந்தைய காலங்களில் மந்திரத்தின் சக்தி கொண்டு மனித உடலில்
உள்ள எண்ண அலைகளை எடுத்துக் கொண்டான். இன்று அதே மந்திர சக்தி கொண்டு மனித
உடலுக்குள் இருக்கும் உணர்வைத்தான்,
எண்ணத்தை
பூமிக்குள் செலுத்தப்பட்டு
நுண்ணிய அலைகளை அறிந்துணர்ந்தான்.
புறப்பொருளின் சக்தியையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய
அலைகளையும் அறிந்துணர்ந்தான். புறப்பொருளில் இருக்கும் சக்தியின் தன்மைகள்தான்
தசைகளாகச் சேர்ந்து இருக்கின்றது.
ஆக மந்திரத்தில் மனிதனுக்குள் இன்னொரு மனிதன் விளைய வைத்த
உணர்வின் ஆற்றல் சிறுகச் சிறுக எண்ணத்திற்குள் வலுவாகும் பொழுது நுண்ணிய அலைகளைத்
தனக்குள் எடுத்துக்கொள்ளும்.
ஒரு வேப்பமரம் எந்த அளவிற்குக் கசப்பின் தன்மையைத் தனக்குள்
வலுவாக்கிக் கொள்கின்றதோ, அது வெளிப்படுத்தும் உணர்வுகள் சிற்றலைகளாகக் காற்றில் படர்வதை
தனக்குள் கவர்ந்து வளருகின்றது.
இதைப்போன்று நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை, ஒவ்வொன்றின்
நிலைகளை நான் மந்திரத்தால் பெறுகின்றேன் என்று மந்திரத்தால் விளைய வைத்த நிலைகளை மனிதனுக்குள் அதிகமாகக்
கூட்டப்படும் பொழுது அதன் வழிகொண்டு சிறிய அலைகள் வந்தால்
“ஏய் நீ இதை நினைத்தாய் அல்லவா” என்று சொல்லி
சிறுகச் சிறுகத் துன்ப அலைகளைச் சுவாசித்து
நமக்குள் துன்ப
அலைகளைச் சேர்த்துக் கொள்ளுகின்றொம்.
ஜோஸ்யம் பார்க்கின்றேன் என்றால் வீட்டை விட்டுக் கிளம்பும்
பொழுது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு வந்தீர்கள் என்று சொல்ல முடியும். இதெல்லாம்
அலைகளுடைய தன்மைகள். ஆகவே போற்றுதலுக்கு ஏங்க வேண்டாம்.
ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்கள் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற
எண்ணத்தை நீங்கள் செலுத்துங்கள். அப்பொழுது, உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காண முடியும்.
யார் கடும் சொல்லைச் சொன்னாலும்
உன்னை அறியாத
நிலையில் இருந்து நீ தப்புவாய்
என்று இதைச் சொல்லுங்கள்.
நீ அனுபவித்தே தீருவாய் என்கிற பொழுது இரண்டு பேரும் கெடும்
நிலை வரும். மனிதருடைய உணர்வுக்குள் அத்தனை நிலைகள் உண்டு.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் துன்புறும் நிலையிலிருந்து,
சாமி..! குருநாதர் காட்டிய அருள் வழியில்
நீங்கள் சொன்னதைச் செய்தேன், நன்றாக இருந்தது,
சந்தோஷமாக இருக்கின்றேன் என்ற
இந்த வாக்கைச் சொல்லுவதற்குப் பதில்
எம்மைப் புகழ்ந்து
பேசுவதில் ஒன்றுமில்லை.
ஏனென்றால், உண்மையில் ஒருவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அந்தப் புகழ்ச்சியின்
நிலைகளில் நாம் முன்னேறுவது கடினம்.
நமக்குள் இருக்கும் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு மெய்
ஒளியைக் காண்பதிலிருந்து நாம் தவறக்கூடாது.
ஒவ்வொரு நிமிடமும் தவறென்ற நிலைகள் நம்மை அறியாமலேயே
தோன்றிவிடும். அதனால் குரு என்ற நிலைகளில் யாம் சுட்டிக்காட்டத் தவறக்கூடாது.
அதற்காக வேண்டி, நேரடியாகச் சொல்ல முடியாத நிலைகளில்
மறைமுகமாக பிரார்த்தனை செய்கின்றேன். ஆனால், சாமி நம்மைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்
என்று எண்ணினால் இதை எடுப்பது கடினம்.
ஆகவே, உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக்
கோவிலாக மதிக்கின்றேன். உங்கள் உடலுக்குள் உங்களை மனிதராக உருவாக்கிய 1008
நற்சக்திகள் உண்டு.
அந்த அருள்
மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று
சதா உங்கள் உயிருக்குள்
அபிஷேகம் செய்து கொண்டேயிருக்கின்றோம். எமது அருளாசிகள்.