ஒருவர் கோபமாகவோ, வேதனையாகவோ இருக்கின்ற பொழுது, சந்தோஷமாக
இனிமையாக ஒருவர் சொல்கின்றார் என்றால், அதை கோபமாக வேதனையாக இருப்பவர்
ஏற்றுக்கொள்ள முடியாது,
ஏனென்றால் அந்தக் கோபமும் வேதனையும் முன் நிற்கும்.
நம் பூமியில் எத்தனையோ வகையான மரம் செடி கொடிகள்
இருக்கின்றது. அது
அது அதனதன் சத்தை உணவாக எடுத்துக் கொள்கின்றது.
ஒரு வேப்ப மரம் கசப்பின் சத்து கொண்டு வலுவாக இருக்கின்றது.
அதே போன்று ரோஜாப்பூ தன் வலுவான நிலைகள் கொண்டு காற்றிலிருந்து தன் சத்தை இழுத்து வளருகின்றது.
அந்தச் செடிகள் தன் சத்தைத் தவிர
மற்ற மணங்களை எடுத்துக் கொள்வதில்லை.
பூமியில் பல வித்துக்களை விதைத்தால் அந்த வித்துக்குள் மறைந்திருக்கும்
சத்து தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து கவர்ந்து அவைகள் வளருகின்றன.
இதைப்போன்று நமது உடலும் ஒரு நிலம் மாதிரி தான். எந்தெந்த குணங்களை
நாம் எண்ணுகின்றோமோ, அந்த எண்ணங்கள் அனைத்தும் நம் சுவாசத்தில் கலந்து நம் உயிரில்
படுகின்றது.
உயிரில் படும்பொழுது
அந்த எண்ணம் செயலுக்கு வந்துவிடுகின்றது.
அப்பொழுது நாம் எண்ணிய எண்ணம் நமது உமிழ்நீரில் கலந்து மாறி நமது உடலுக்குள் ஐக்கியமாகி
அந்த குணத்தின் சத்து
உடலுக்குள் பதிவாகிவிடுகின்றது.
இப்படிப் பதிவான பலகோடி எண்ணங்களை நம்மால்
எண்ண முடியும். நமக்குள் எதையெதையெல்லாம் பதிவாக்கி இருக்கின்றோமோ அவைகளை நினைவுப்படுத்தும்
பொழுது அந்த எண்ணங்களை நம்மால் எண்ண முடிகின்றது.
நாம் எந்தெந்த
குணங்களின் நிலைகளைச் சுவாசிக்கின்றோமோ அதன் உணர்ச்சியை நமது உடலுக்குள் தூண்டும்.
உதாரணமாக வேப்ப மரத்தின் கசப்பை சுவாசித்தால் அந்த கசப்பின்
உணர்ச்சியைத் தூண்டும்.
ஒரு மிளகாயின் காரத்தை நாம் சுவாசித்தால் அது உயிரிலே பட்டவுடனே
அந்த கார உணர்ச்சியை நம் உடலிலே தூண்டச் செய்யும்.
சங்கடம், சலிப்பு, வேதனை இதைப்போன்ற எத்தனையோ இன்னல்கள் கொண்டவர்கள் தான் ஒவ்வொரு மனிதர்களும்.
பண வசதி இருந்தாலும், பணமற்று இருந்தாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
ஒருவர் செய்யக்கூடிய தவறை நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.
உதாரணமாக, வேகமாக வரக்கூடிய பஸ் நம் மீது மோதிவிடும் என்று உயிரின்
துடிப்பு அதிகமாகி
உணர்வைத் தூண்டுவதனால்தான்
வேகமாக நம் உடலை இயக்கி
உடனடியாக நகர்ந்து செல்ல முடிகின்றது.
அதைப்போல குற்றம் ஏற்படுவதாக இருந்தாலும் காரமான உணர்வுகள் தூண்டப்படும்போதுதான்
குற்றத்தின் உணர்ச்சிகள்
தூண்டப்பட்டு
தவறு செய்வதை நிறுத்தக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றது.
ஏனென்றால் அது உணர்த்தும்
ஆற்றல்.
நாம் நம் புலனறிவில் எடுத்துக்கொண்ட உணர்வினைப்
பார்த்து விட்டால் அந்த உணர்ச்சியைத் தான் தூண்டும்.
ஏனென்றால் நாம் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின்
தன்மை பட்டவுடன் அந்த உணர்வலைகள் தூண்டப்பட்டு,
அந்த உணர்ச்சிகள் நம்மால்
சுவாசிக்கப்பட்டு, அந்த நிலைகளில் நாம்
செயல்பட்டு வருகின்றோம்.
இது இயற்கையின் நியதிகள்.
இப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் பல நிலைகள்
மாறிக்கொண்டயுள்ளது. ஆக, இவ்வாறுதான் நம் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்குள் விஷம்
கலந்துவிடுகிறது.
இந்த விஷமான உணர்வுகள மாற்றிடத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின்
உணர்வைச் சிறுகச் சிறுக இணைத்து
உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை
ஒளியின் தன்மை பெறச் செய்ய யாம் உபதேசிக்கின்றோம்.