ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2015

கோவில்களில் அருளாடுபவர்களின் செயல்களும் அவர்கள் குடும்பத்தின் நிலைகளும்

நாம் பக்தியின் நிலைகளில் மந்திர சக்தியை எடுத்துக் கூட்டும் பொழுது எந்தெந்த மந்திரத்தை ஜெபித்துப் பதிய வைத்து கொள்கின்றோமோ, அதேபோன்று மந்திரங்களை மற்றவர்கள் ஜெபிக்கப்படும்பொழுது,
நாம் மந்திரத்தால் பல சக்திகள் பெற்றிருந்தாலும்
அந்த ஒலிகள் மந்திரம் ஜெபிப்பவர் உடலுக்குள் சென்றுவிடும்.

இதைப்போன்று பக்தி மார்க்கத்தில் எந்த தெய்வத்தின் ஆதாரத்தை நமக்குள் செலுத்தி அதே உணர்ச்சிகளின் ஏக்கத்தைப் பதிவு செய்து இருக்கின்றோமோ
அதே உணர்ச்சியின் வேகம் உந்தி,
சோகமும், பயமும், வேதனையும் அதிகமாகக் கலந்துவிடுகின்றது.

அந்தக் கலப்பின் நிலைகளில் எண்ணங்கள் தோன்றும் பொழுது, இதைப்போன்று உணர்ச்சி வசப்பட்டு பக்தியின் நிலைகளில் சென்ற உயிராத்மா இவருடைய உடலிலே ஈர்க்கப்பட்டு அருளாடச் செய்துவிடும்.

ஏனென்றால் எந்த பக்தியில் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் அந்த உணர்வின் நிலைகளை மந்திர ஒலிகொண்டு மற்றவர்கள் பாய்ச்சி, அதன் ஒலிகள் செவிகளிலே பட்டாலும், வேதனை என்ற நிலைகள் கலந்து அதனால் சோர்வுற்று வேதனை என்ற நிலைகள் வந்தவுடன் என்ன நடக்கின்றது?

தேள் கொட்டியவுடன் எப்படி நாம் உணர்ச்சி வசப்படுகின்றோமோ அதைப்போன்று சங்கடமான துன்பமான நிலைகள் வரும்பொழுது,
தெய்வ சந்நிதிகளில் நல்லதைச் சொல்லி
நல்ல உணர்ச்சிகளை தூண்டிக் கொண்டு இருக்கும் பொழுது,
இந்த வேதனை கலந்த நிலைகள்
அங்குள்ள வாத்திய இசைகள் உணர்ச்சியைத் தூண்டியவுடன்,
அதே உணர்வின் நிலைகள் இவர் உடலிலே உந்தப்பட்டு,
ஒரு மனிதனின் உடலில் பக்தியான நிலைகளில் வளர்க்கப்பட்ட
உணர்வின் ஆற்றல் கொண்ட உயிரான்மா
இவர் உடலில் வந்து விடுகின்றது.

இதைப்போன்றுதான் சோர்வும், பயமும், வேதனையும் கொண்டு இறந்தோருடைய உயிராத்மாக்களை மற்றவர்கள் எண்ணும்பொழுது உடலுக்குள் வந்து அவர்கள் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்களோ, அந்த நிலைகளில் தான் மற்ற உடல்களிலும் செயல்படுகின்றது.

இதையெல்லாம் வைத்தியத்தினாலோ, மந்திரத்தினாலோ மாற்ற முடியாது. மந்திரத்தால் அதை அடக்க முடியும். ஒரு சிறிய கோபக்காரரை பெரிய கோபக்காரன் அடக்கி விடுவான்.

இதைப்போன்றுதான் மனித உடலிலே விளையவைத்த கோபத்தை நாம் கொண்டிருப்பதனால் மந்திரம் ஜெபித்து மற்றவர் உடலில் பாய்ச்சப்படும்பொழுது
அங்கும் அந்தக் கோபம்
அதீத நிலைகளில் விளையும்.

நம் எண்ணத்தை சாதாரண மனிதனின் பிடிப்பு ஓட்டத்தில் செலுத்தி, அவர் இறந்தவுடன் “எனக்குத் துரோகம் செய்தான்.., பாவி” என்று எண்ணிக்கொண்டு குரோதத்தை வளர்த்துக்கொண்டால் இந்த உயிராத்மா அவர் உடலில் போகும்.

பழி தீர்க்கும் உணர்வுடன் நோய்களையும், குடும்பத்தில் சிக்கலையும், அவர்களை வாழவிடாத நிலைகளையும், வெளியில் இருந்து பேசியது மாதிரி அவர்கள் உணர்வுக்குள் தூண்டச் செய்து அந்த குடும்பத்தை சின்னாபின்னாமாக்கி விடும்.

மூன்று தலைமுறைக்கு முன் இது போன்ற நிலைகளைச் செய்திருந்தாலும் ஆஸ்த்மா என்ற நோய் இதன் வழிகளில் தான் வந்தது. நாம் தவறு செய்யவில்லை என்றாலும் கொடி வழி இது சிறுகச் சிறுக விளைந்து இந்த ஆஸ்த்மா நோய் பெரும்பகுதி பரவி இருக்கின்றது.

துன்பம் ஏற்படும்பொழுது, ஆத்திரமூட்டும் செயல்களை எண்ணும்பொழுது அந்த உணர்ச்சியின் நிலைகள் இவர் உடலிலே சார்ந்து அவர் இறந்தபின் இதே நிலைகள் இவர் உடலில் வந்தபின் அதன் வழி வந்த குழந்தைகளிடம் அணுக்களின் நிலைகளில் புகுந்து அதன் வழிகளில் இன்று இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் இது வந்துவிடுகின்றது.

இப்படி ஒரு மனிதருக்குள் சென்றவுடன் குரோதத்தின் நிலைகள் கொண்டு அந்தக் குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கி வேதனையை உருவாக்கி அந்த உடலிலும் விஷத்தைச் சேர்த்துக்கொள்கின்றது.

மிருகங்கள் தன் உடலை விஷமாக மாற்றிக்கொண்டு நல்லதை கழிவாக்குகின்றது.

அதைப்போன்று இந்த உடலுக்குள் விஷத்தை உருவாக்கும் அணுக்களை விளைய வைத்து அந்த மணத்துடன் இந்த உயிராத்மா காற்றில் கலந்தபின் அந்த மணம் கொண்ட
ஆடோ, மாடோ, கோழியாகத்தான் பிறக்க முடியுமே தவிர
மனிதனாகக்கூட திரும்பப் பிறக்கமுடியாது.