ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2015

தியானம் செய்யச் செய்ய மனதிலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள்

நாம் இந்தத் தியானத்திற்கு வருவதற்குமுன் நம் நல்ல குணங்களுக்குள் கலந்துள்ள விஷத்தின் ஆற்றல்கொண்ட உணர்வுகள் நாம்
இப்பொழுது தியானிக்க தியானிக்க
அது கலைந்து மேல் வலிகள்கூடத் தோன்றும்.

தியானத்தால் வந்தது என்று எண்ண வேண்டாம்.

நாம் அந்த அதீத சக்திகளை எடுக்கும் பொழுது நம் உடலுடன் கலந்து உறைந்திருக்கும் அந்த உணர்வின் விஷத்தின் சக்திகள் மேல் வலியாகவும், வயிற்றுப்போக்கு ஆகவும் வெளியேறும்.

அடிக்கடி ஆத்மசுத்தி செய்யும் பொழுது நம் உடலில் கலந்த தீய உணர்வுகள் மலத்தில் வெளியேறுவதைப் பார்க்கலாம்.

நாம் தியானத்திற்கு வருவதற்கு முன் எத்தனையோ வேதனை கலந்துதான் வந்திருக்கின்றோம். அந்த வேதனைகளை நீக்க வேண்டித்தான் தியானத்தை அணுகி வருகின்றோம்.

வேதனையைப் போக்கும் மார்க்கங்களைச் சொல்லி நல்ல உணர்வினையும் ஊட்டி வைக்கின்றோம். ஊட்டி வைக்கும் நிலைகளில் நாம் சொல்லும் வழிகளில் செயல்படும்பொழுது முந்தைய அழுக்கையும் போக்கலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தடுப்பதற்கு அன்றன்று இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி உடனடியாக மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.

அதே சமயம் அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்கள் உடலுடன் கலந்துள்ள பிணிகளையும் போக்கும். யாம் சொல்லும் முறைப்படி யார் யார் பின்பற்றுகின்றார்களோ உங்களுக்குள் நீங்கள் இதை பார்க்கலாம்.

நாம் சலிப்புப்பட்டு, சங்கடப்பட்டு, கோபப்பட்டு வேதனைகளை எப்படி உருவாக்கிக் கொள்கின்றோமோ, அதைப்போன்று வேதனையைப் போக்குவதற்கு நாம் இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இதையெல்லாம் மனதில் வைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும்.

அதைப் பெறவேண்டும் என்ற அந்த உணர்வின் நிலைகளைத் தூண்டும் ஆற்றலில் இருந்து அதை எண்ணும் பொழுது சேர்த்து
சஞ்சலமும் வந்து அது முடியாத நிலைகளில் விரக்தியாகி
அதை நாம் எண்ண முடியாது போகின்றது.

இந்தத் தியானத்தை எடுக்கும் பொழுது இதை எண்ணுகின்றேன் ஆனால் எடுக்க முடியவில்லையே என்று நாம் சொல்லுகின்றோம்.

நல்லதை எண்ணி எடுக்க வேண்டுமென்றாலும் இது ஒரு பெரும் சுமையாக இருக்கும்.

யாம் உபதேசிக்கும் பொழுது எண்ணிவிடலாம். ஆனால் அமைதி கொண்டு நினைவு கொண்டு எடுக்க வேண்டுமென்றால் அடுத்த நிமிடமே இது மறைந்துவிடும். நினைவுகள் எங்கெங்கோ ஓடிவிடும். அதற்கு இந்த ஆற்றல் இல்லை.

அதைப்போன்று ஆற்றல் இல்லாத நிலைகளில் எடுக்க முடியாத நிலைகளில் எத்தனையோ பேர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் முடியவில்லை.

ஆனால் நமது அன்பர்கள் இதை நினைத்தவுடன் பல மணி நேரம்கூட அமைதி கொண்டு இருக்கமுடியும். அருகில் அமைதியைக் குலைக்கும் நிலைகள் இருந்தாலும் கூட நமது அன்பர்கள் இதன் நினைவு கொண்டு அமைதியாக இதை எடுக்கக்கூடிய ஆற்றல் பெறுகின்றனர்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப்போன்ற நிலைகள் உங்களுக்குள் தாக்காத நிலைகளில் நாம் மெய் ஒளியின் தன்மை பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். பத்து பெயரில் ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஒரு நிமிடமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்கொண்டபின் யாம் சொன்னதை விட்டுவிட்டு “என்னத்தை எடுத்தோம், முடியவில்லையே” என்று அதைக் கூட்டிக்கொண்டால் நிச்சயம் கிடைக்காது.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன ஆற்றலின் தன்மையை உங்களுக்குள் செய்து பார்த்தால் உங்கள் துன்பத்தையும், உங்கள மனதை வேதனைப்படச் செய்யும் அசுரத் தன்மையான உணர்வுகளையும் தடைப்படுத்த முடியும்.

பிறர் வந்து செய்து கொடுப்பார் என்பதற்கு பதிலாக யாம் கொடுக்கின்றோம். அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நெல் பயிரைக் கொடுத்தால்
அதை அதிகமாக விளைய வைத்து
உணவிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிரின் நிலை போன்றுதான் யாம் உபதேசிக்கும் அருள் சக்தி.  பலகாரம் அல்ல சமைத்துக் கொடுப்பதற்கு. இது ஜீவனற்றது. சமைத்த வித்தின் தன்மையில் ஜீவன் படர்ந்துள்ளது. வாக்காக நான் சொல்லப்படும்பொழுது அடுத்த நிமிடம் அது மறைந்துவிடும்.

அப்பொழுது நல்லதாகும். பிறகு ஜீவனுள்ள சத்தை எடுக்க ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை, இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை வளர்த்துக் கொண்டால்தான் உலகத்தின் நிலைகளில் இருந்து மீள முடியும். சுலபமாக இருக்கின்றது என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்,

குருநாதர் எனக்கு சுலபமாகக் கொடுத்தார். ஆனால் 12 வருட அனுபவத்தில் கண்டு கொண்டேன். அந்த அனுபவத்தின் நிலைகளைத்தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

இந்த அனுபவத்தில் பெற்ற உண்மை நிலைகளை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீங்களே போக்கிக்கொள்ளலாம். உங்களை நீங்கள் நம்புங்கள்.