ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2015

வேதனை உணர்வுகளும், விஷத்தின் உணர்வுகளும் எப்படி மனித உருவை மாறச் செய்கின்றன?

குழந்தை படிக்கவில்லை என்றாலும் வேதனைப்படுகின்றோம்.
வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டாலும் வேதனைப்படுகின்றோம்.
ஒருவருடைய நிலைகளில் நாம் நல்லதைச் செய்திருந்தாலும், எனக்கு இப்படிச் செய்துவிட்டாரே என்று வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்றாலே விஷம். இதைப்போன்று நம் உடலுக்குள் விஷமான நிலைகளை ஏற்றிவிடுகின்றோம்.

அப்பொழுது நல்லதை எண்ணினாலும் வேதனையுடன்தான் பேச முடியும். காரணம் நல்ல குணங்களைத் தூண்டினாலும் அதற்குள் விஷம் கலந்திருக்கின்றது.

நாம் பல கோடி ஆண்டுகள் உயிராகத் தோன்றி புழுவாகி மனிதராகப் பிறக்கும் வரையிலும், உடல்கள் விஷமாக மாற்றிக்கொண்டு இருந்தாலும்,
ஒவ்வொன்றிலும் தான் தப்பித்துக்கொள்ள, காத்துக்கொள்ள
எடுத்துக்கொண்ட உணர்வின் நிலைகளே நற்குணங்களாக
தன்னைப் பாதுகாக்கும் நிலைகளாகக் கூட்டி,
மனித நிலைகளுக்கு வந்திருக்கின்றோம்.

மனிதனுக்குள் விஷத்தைக் கழிவாக்கி நல்லதை உடலாக்கும் தன்மை உள்ளது. மிருகங்கள் அனைத்தும் ஆகாரத்திற்குள் உள்ள விஷத்தைத் தன் உடலாகச் சேர்த்துக்கொள்ளும்.

ஆனாலும் அதனுடைய எண்ணத்தில் அதனை வேதனைப்படுத்தினாலும், இம்சைப்படுத்தினாலும், அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை.

மாறாக, மிருகங்கள் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உணர்ச்சியின் வேகத்தை அதிகமாகக் கூட்டுகின்றது.

மனிதரான நமக்கு பயம் வந்து அதிகமான துடிப்புகள் ஏற்பட்டவுடனே தப்பிக்கும் உணர்வுகளே வரும்.

இல்லையென்றால் நாம் இறந்து விடுவோமோ
என்ற பயம்தான் மனித உடலிலே கூட்டும்.
இது நம்மைப் பலவீனப்படுத்தும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் சுவாசிக்கும் விஷத்தை நம் நல்ல குணங்களுக்குள் படரச் செய்து கொள்கின்றோம். இதனால், உடலுக்குள் கை கால் குடைச்சல், மேல் வலி, தலை வலி போன்றவைதான் நமக்குள் வரும்.

நாம் சேர்த்துக்கொண்ட விஷங்கள் தசைகளில் பட்டால் தசை நோய் வரும். அமிலங்களாக மாறி நரம்புகளில் பட்டால் நரம்புகளில் வலி வரும். எலும்புகளில் இது அதிகமாகச் சேர்ந்துவிட்டால் எலும்பிற்குள்ளும் இந்த வேதனை வரும்.

எலும்பிற்குள் தோன்றும் வேதனைகளை இன்று டாக்டர்களால் கண்டுகொள்ள முடியாது. எலும்பிற்குள் ஊடுருவும் நிலைகள் மெய்ஞானிகளுக்குத் தெரியும்.

விஞ்ஞானிகள் ஒன்றின் தன்மை கொண்டு ஒன்றை எடுத்துத்தான் அவர்கள் பரிசீலிப்பார்கள்.

ஆனால் எலும்பிற்குள் உள்ள ஊனின் நிலையும், அதனின் உணர்வின் உந்தல்களின் செயல்களை அறிவது மிகக் கடினம்.

மனிதருடைய உணர்வலைகளைக் கண்டுணர்ந்தவருக்கு கம்ப்யூட்டர் என்ற அலைவரிசைகள் வந்தால், மனிதருடைய எண்ண அலைகளையும் அறியக்கூடியசக்தி இன்று விஞ்ஞானிகளுக்கு வந்துவிட்டது.

அறிந்துணர்ந்தாலும் மனித உடலிலே இயற்கையில் உருபெறும் சீற்றங்களை அறியும் நிலைகள் விஞ்ஞானிகளுக்கு இல்லை. அவ்வாறு எடுத்துக்கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டுதான் எடுக்கின்றார்கள்.

அவ்வாறு எடுத்துக்கொண்டாலும், யார் சிந்தனை செய்கின்றாரோ, அந்த விஞ்ஞானி அவன் எடுத்துக் கொண்ட நிலைகளில் விஷங்கள் தாக்கப்பட்டு அந்த வேகத் துடிப்பில் தான் இருப்பார்கள்.

அந்த விஷத்தின் தன்மை கொண்டு எண்ணங்கள் கலந்து கொண்டால் எதன் அறிவிலே சேர்த்துக் கொண்டானோ அந்த உணர்வின் நிலைகள் விளையப்பட்டு, அதன் உணர்விலேதான் உயிராத்மாக்கள் சுழலப்பட்டு, மனித உடலுக்குள் ஊடுருவி அங்கு விஞ்ஞான அறிவு ஊட்டி, அங்கும் விஷத்தின் தன்மையைக் கூட்டும்.

மனித உடலுக்குள் ஊடுருவி பல நோய்களை உருவாக்கி அந்த உயிராத்மா தேய்பிறையான நிலைகளுக்கு வந்து ஆரம்ப நிலைகளில் எப்படி வந்ததோ
ஆடோ, மாடோ கொசுவோ
உணர்வின் மணங்கள் உயிராத்மாவில் மாறி
அந்த உடல்களைத்தான் இவர்கள் பெறமுடியும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்