எமது குருநாதர்
வாழ்க்கையில் துன்பங்களை சிருஷ்டித்துக் கொடுத்தார். ஒவ்வொரு சமயத்திலும் என் குழந்தைகளின்மேல் பாசத்தை ஊட்டி அந்தப் பாச அலைகளால்
என் குடும்பமே சின்னாபின்னப்பட்டது.
ஒவ்வொரு குழந்தையும் பட்ட அவஸ்தையைப் பார்த்தால்
வேதனைப்படாத தாய் தந்தையர் இருக்க மாட்டார்கள். நான் வந்து பார்க்கும் பொழுது
ஐந்து நாள், ஆறு நாள்கூட பட்டினியாகக் கிடந்தது. எனக்கு உதவி செய்த
நண்பர்களுக்கெல்லாம் தெரியும்.
அப்படி இருந்தும்கூட இந்த உணர்வின் தன்மையை இயற்கையிலேயே
சிருஷ்டித்துக் கொடுத்தார். அந்த நிலையிலிருந்து மீள்வதற்கு எத்தனையோ கஷ்டங்கள்
பட்டோம்.
இருந்தாலும் அந்தத் துன்பங்கள் எப்படி உருவாகின்றது? அதிலிருந்து
மீள்வதற்கு என்ன செய்வது? என்று தெரிய வைத்தார்.
என் குடும்பத்தாருக்குச் சில நண்பர்கள் எனக்குத் தெரியாமலே
உதவி செய்தார்கள். ஆனாலும் நான் நேரடியாகப் பார்க்கும்பொழுது அத்தனை துன்ப நிலைகளை
செயற்கையாக குருநாதர் ஏற்படுத்தினார்.
குடும்பத்தில் பாசத்தை வைத்துக் கொண்டால் தனக்குள் பெற்ற சக்தி எவ்வளவு
நிலைக்கு விரயமாகும்?
அந்தs சக்தியின் நிலைகளைச்
செயலாக்க முடியாமல் எப்படித்
தடையாகும்? என்பதை உணர்த்துவதற்குத்தான் இந்த நிலையை உருவாக்கினார்
குருநாதர்.
அப்படி உருவாக்கி அதை நீக்குவதற்குக் கற்றுக் கொண்டு
தெளிந்து தெரிந்தபின் அதை ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள்
நேரும்பொழுதும் அதை சுலபத்தில் நீக்க ஆத்மசுத்தி என்ற் ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.
அந்த ஆத்ம சுத்தியைப் பயன்படுத்தி, உங்களுக்குள் மனக்குறையை
நீக்கி ஒரு நிமிடத்தில் மன
உறுதியைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் நேரம் இல்லை என்கிறீர்கள்.
நல்லதைப் பயன்படுத்துவதற்கு இன்னல்கள் பல வருகின்றது.
அதையும் சமாளித்து ஒவ்வொரு மனிதருடைய உள்ளத்திலும் துன்பத்தைப் போக்க வேண்டும்.
உங்களுக்குள் இன்பமான சொல் தொடர்கள் வெளிவர வேண்டும்.
உங்கள் மூச்சலைகளால் உங்களைச் சந்திப்போருக்கும் நல்லது கிடைக்க வேண்டும். அதே
சமயத்தில் மற்றவர்கள் மகிழ்ந்து உங்களுக்குள் நல்ல நிலைகள் உருவாக வேண்டும்.
இன்று சாதாரண மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதைப்
பார்த்தால் நமக்குப் பொறாமையாக இருக்கும். பிறர் மகிழ்ச்சியின் நிலைகளைச் சொன்னால்
தன்னை அறியாமலே பலவீனப்படுவதைப் பார்க்கலாம்.
நமக்குக்
கிடைக்கவில்லையே என்று தாங்கும் சக்தியை இழந்து பலவீனப்படுத்திக் கொள்கின்றார்கள். சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகின்றார்கள்.
இதை போன்ற நிலைகளில் பயன்படுத்துவதற்குத்தான் ஆத்மசுத்தி
என்ற ஆயுதத்தை கொடுத்தது.
நீங்கள் தியானமிருந்தாலும் இல்லாவிட்டாலும்
இந்த ஆத்மசுத்தியைப் பயன்படுத்திப் பாருங்கள்.
உங்களுக்குள் அந்த உண்மையைப் பார்க்கலாம்.
இதைப் படிப்போர்கள் உங்கள் துன்பத்தைத் துடைத்துக்
கொள்வதற்கு ஆத்மசுத்தி செய்து கொள்ளுங்கள். சாமி செய்யவில்லையே என்று
எண்ணாதீர்கள்.
சாமி எப்பொழுதுமே உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
அதையே சதா பிரார்த்திக்கின்றேன். உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று
எண்ணுகின்றேன்.
குருநாதர் காட்டிய வழியில் மெய் ஒளியை எடுக்கின்றேன்.
உங்களுக்கெல்லாம் அந்த மெய் ஒளி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அதன் அடிப்படையில்தான் இந்த உபதேசமே.
உங்கள் எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்றுதான்
பிரார்த்திக்கின்றேன்.
அதன் வழியில் நீங்கள் அந்த நல்லதை நாங்கள் பெறவேண்டும்,
மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும், எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும், மகரிஷிகளின் அருளால் எங்களுக்குள் இருக்கும்
பிணிகள் நீங்கவேண்டும் என்று ஏன் எண்ணக் கூடாது?
இது ஒரு கஷ்டமா? ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள்.
ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு இந்த உணர்வின்
தன்மையை செயல்படுத்திப் பாருங்கள். உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும்.
உடலில் நோயுள்ளவர்கள் தொடர்ந்து இதைச் சுவாசித்தீர்களானால்
விஷத்தின் தன்மை வயிற்றுப்போக்காக வெளியேறுவதைப் பார்க்கலாம்.
நாம் வெளியிடும்
மூச்சலைகள்தான் விஷத்தை
முறியடிக்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு நோயாக இருந்தால் ஆத்மசுத்தி செய்து
சமையலில் அரிசி எடுத்துப் போடும்பொழுது, இதைச் சாப்பிடுபவர்கள் எல்லோரும் உடல்
நலமாக வேண்டும். உடலில் பிணிகள் நீங்க வேண்டும், மகரிஷிகளின் அருள்சக்தி எல்லோரும்
பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
சமைத்த இந்த உணவு அவர்கள் உடலில் நல்லதை உருவாக்க வேண்டும்
என்று எண்ண வேண்டும். இவ்வாறு எண்ணி நோயுற்றவர்களுக்குச் சாப்பாடு போட்டால் உங்கள் எண்ணத்திற்கு, உங்கள்
உணர்விற்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குழந்தை நாம் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அதற்குச்
சாப்பாடு கொடுக்கும் பொழுதெல்லாம் அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
அவனுக்குள் நல்ல ஞானங்கள் வர வேண்டுமென்று இந்த ஜெபத்தை எடுத்துப்பாருங்கள்.
உங்கள் ஒலியால் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நல்லது
செய்யும்.