போகமாமகரிஷி ஒவ்வொரு பகுதிக்கும் மனித உணர்வுக்குள்
தோன்றும் உணர்வின் ஆற்றலை இயக்கி, தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை அங்கே
விளையவைத்து அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து, பழனி மலையிலிருந்தே இதைச்
செய்தார். இதைத்தான் ககன மார்க்கமாகச் சென்றார் என்று தத்துவத்தை எழுதி இருப்பார்கள்.
இன்று விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் நிலைகள் கொண்டு பலகோடி
மைல்களுக்கு அந்தப்பக்கம் உணர்வின் அலைகளை அனுப்பப்படும் பொழுது
விண்ணில் தோன்றிய
உணர்வலைகள்
இவன் அனுப்பிய கம்ப்யூட்டரில் பட்டவுடன்
அந்த உணர்வின் தன்மையை தரையிலிருந்து அறிந்துணர்ந்து
அங்கு செயல்படும்
ஆற்றலின் தன்மையை இங்கே உணருகின்றான்.
அதைக் குறித்து வைத்துக் கொள்ளுகின்றான்.
இதைப்போன்றுத்தான் ஆற்றல்மிக்க தன்மையை தனக்குள் செலுத்தி,
ஒரு மனித உடலில் ஊடுருவச் செய்து அங்கு நடக்கும் உணர்வின் தன்மையை தான் கண்டு
அறிந்தார் போகர்.
இவ்வாறு சக்தியின் நிலைகளை தனக்குள் பெருக்கி பழனி
மலையிலிருந்தே மனித இனங்களை இயக்கினார்.
பூமி சுழலும் பொழுது
ஒவ்வொரு கோளின்
ஆற்றலும்
அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு பூமிக்குள் தோன்றும்.
இதைபோன்று இந்த பூமிக்குள் ஒவ்வொரு கோளின் தன்மையும் அது
வெளிப்படுத்தும் பொழுது சதா காலமும் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்குவதற்கு
அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு
இந்த பூமிக்குள் எங்கே உயிரினங்கள் தோன்றி இருந்தாலும்
அந்த உயிரினங்களுக்குள் தன் எண்ணத்தைப் பாய்ச்சி
ஆங்காங்கு நடக்கும் உணர்வலையை மனிதருக்குள் பெருகச்செய்து,
அந்த மனித உடலில் பெற்ற உணர்வின் தன்மையைத் தான் சுவாசித்து
தன் உடலுக்குள் இருக்கும் நிலையை அவர் வளர்த்துக் கொண்டார்.
இன்று விஞ்ஞானிகள் எப்படி செய்கிறார்களோ அதைப்போன்றுதான்
மெய்ஞானி போகர் அன்று அதைச் செய்தார். அதைச் செய்துதான் உலகம் முழுவதற்கும்தான்
உணர்ந்து தன் உடலில் இருந்த வண்ணமே பல நிலைகளைச் செயல்படுத்தினார்.
ஆக, இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்ற நிலையையும்,
இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் எவ்வாறு மனிதனாக உருவாக்கியது,
இந்த மனிதனுக்குள் பிரபஞ்சத்தின் சத்தின் தன்மைகள்
ஆறாவது அறிவின் தன்மையாக இருந்து
அறிந்துணர்ந்து
செயல்படும் ஆற்றல் எவ்வாறு பெற்றான் என்றும்
அன்று போகர் தெளிவுபடுத்தினார்.
உலோகத்தின் தன்மையைத் தகடாக எடுத்து வைத்து அதைத்
தட்டும்பொழுது உலோகத்திற்குத் தக்கவாறு நாதங்களை வெளிப்படுத்தும்.
இதைப்போன்று செவ்வாய்க் கோள் ஒரு உணர்வின் தன்மையை எதனுடன் எது கலக்கின்றதோ
வெப்ப காந்தத்துடன் கலக்கப்படும் பொழுது
உணர்வின் பொறியின் தன்மையை அறிந்துணர்வதற்கு
தன் வீரிய ஆற்றலை ஊட்டி தன் ஞானத்தால் அறிந்தார்.
நமது பூமியின் தன்மையின் ஞானத்தைக்கொண்டு உயிரினங்களை
வளர்ப்பதுபோல் செவ்வாய்க் கோளிலும் உயிரினங்களுக்கு ஆற்றல் ஊட்டும் ஊக்கத்தின்
நிலைகள் உண்டு.
அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்பொழுது இணைக்கும் சக்தி இருக்கின்றது
என்ற நிலையை அன்று போகர் அறிந்துணர்ந்தார்.
அங்கு உயிரினங்கள் உண்டு.
உணர்வுக்கொப்ப உடலின் தன்மை சிறுத்த நிலைகளில் உண்டு.
தாவர இன சத்துகள் அங்கு சிறிதளவு மாற்றங்கள் உண்டு.
அது வெளிப்படுத்தும் நிலைகள் நமது பூமிக்கு ஞானத்தை ஒத்த
நிலைகள் இருக்கக்கூடிய சக்திகள் உண்டு. இதை மெய்ஞானிகள் பலகோடி ஆண்டுகளுக்குமுன்
வெளிப்படுத்தினார்கள்.
இன்று விஞ்ஞானத்தின் நிலைகளால் அணுக் கதிரியக்கங்கள்
ஊடுருவி நமது பூமிக்குள் கோள்களில் இருந்து வரும் அணுக்களின் தன்மையை விஷமாக
மாற்றுகின்றது.
ஒலியின் நாதத்தைக் கூட்டும் செவ்வாய் கோளின் நிலையும்
விஞ்ஞானத்தின் நிலைகள் கொண்டு அபரிமிதமாகச் செயல்படும் நிலைகள் வந்துவிட்டது.
அன்று போகர் இதைப்போன்று மனிதனுக்குள் நச்சுத்தன்மையான
எண்ணங்களால் பல நோய்கள் உருவாகி மனிதருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்யும் நிலைகளை
மாற்றுவதற்கு தன் உடலில் இருந்த உணர்வின் தன்மையை அன்றைய கால நிலைகளைத் தான்
அறிந்துணர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி,
இந்த புவனம்
முழுவதற்கும் தன் எண்ண அலைகளைப் பாய்ச்சி
ஒவ்வொரு மனிதனையும்
மகிழச் செய்தார்.
அவ்வாறு மகிழச் செய்துவிட்டு
அந்த மகிழ்ச்சியின்
வெள்ளத்தில்
அவர் வெளியிட்ட
மூச்சலையைப் பூமியில் படர்ச்செய்துவிட்டு
அவர் தன் எண்ணத்தால் தனக்குள் ஈர்த்து
தன் உணர்வின் தன்மையை உடலுக்குள் மற்ற அணுக்களில் பாய்ச்சி
ஒளி சரீரமாக விண் சென்றார்.
இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக அவர் திகழ்கின்றார்.