காளிங்கநாதர் என்ற குருவின் நிலைகள் கொண்டு தாவர இனத்திற்குள் மறைந்திருக்கும் சக்தியை போகமாமகரிஷி தனக்குள்
அறிந்துணர்ந்தார்.
உடலில் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மைகளை தாவர இன சத்தின்
தன்மையை கொண்டு நீக்கும் தன்மையைக் கொண்டு வந்தார் காளிங்கநாதர்.
போகரோ அவர் அறியாது வந்த ஆற்றலின் நிலைகள் கொண்டு தாயின்
ஏக்கத்தால் தந்தையற்ற நிலைகளில் வாழ்ந்து வந்தார்.
போகர் தாயார் விஷத்தால் தாக்கப்பட்டு துடித்துக்
கொண்டிருக்கக்கூடிய நிலைகளில்
என்ன செய்வது? என்று தவித்துக்
கொண்டிருக்கும் பொழுது
அந்த உணர்ச்சியில் ஈர்க்கப்பட்டு
போகருக்குள் ஆற்றல்மிக்க
நிலைகள் வருகின்றது.
தாயை விஷம் தீண்ட, இதற்கு என்ன செய்வது என்று தாயை எண்ணி,
அதே ஏக்கத்தில் தாயை காக்க விஷத்தின் உணர்வு கொண்டு தான் ஏங்கிய உணர்வுக்குள்
விஷத்தின் தன்மையை ஒடுக்கிய ஒரு ஆத்மா சிக்கியது.
சிக்கிய அந்த உணர்வின் தன்மையால் இளம் பருவத்தில் அவர்
அறியாமல் அவருக்குள், விண்ணில் ஒளியின் உணர்வால் நட்சத்திரம் ஆன விஷத்தை
முறியடித்து உணர்வின் ஆற்றல் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வின்
அலைகள் அங்கே சிக்கியது.
ஒவ்வொரு உணர்வின் தன்மை சிந்திக்கும் பொழுது தாவர இனசத்தும்,
அதற்குள் இருக்கக்கூடிய விஷமும் தனக்குள் வரப்படும் பொழுதுதான் காளிங்கநாதரிடம்
வருகின்றார்.
தன் தாயின் உபாதைகளின் நிலைகளையும், தன் தாய் இறந்த
நிலைகளையும் காளிங்கநாதரிடம் போகர் சொல்கின்றார்.
காளிங்கநாதரோ தாவர இன சத்திற்குள் இருக்கும் விஷத்தின்
தன்மை கொண்டு, மனித உடலுக்குள் இருக்கும் விஷத்தினை எவ்வாறு நீக்குவது என்று
ஆராய்ச்சியின் தன்மையில் கண்டுணர்ந்தவர். அதன் வழிகளில் தாவர இனச்சத்தை
வழிவகுத்துக் கொண்டவர்.
ஒரு மனித உடலுக்குள் விஷம் சேர்ந்த பின், அந்த விஷத்தின்
தன்மையை நீக்குவதற்கு தாவர இனச்சத்தைக்கொண்டு எவ்வாறு நீக்குவது என்று வைத்தியரீதியில் வழி
சொல்லிக் கொடுக்கின்றார்.
ஆக, காளிங்கநாதர் இவ்வாறு வைத்தியரீதியில் செய்து
கொண்டிருக்கும் பொழுது போகர் சிக்கியவுடன்
போகருடைய ஆற்றலைக் கண்டு இவருடைய ஆற்றல் கொண்டு
தானும் முன்னேற்றத்திற்குண்டான நிலையைச் செய்து
அவர் கண்டுணர்ந்த நிலையை இவருக்கு உணர்த்துகின்றார்.
ஆனாலும், தாயின் உணர்வுக்குள்
அது துடித்த
உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளில்,
அது இட்ட மூச்சலைகளுக்குள்
அந்த உணர்வுகள் எவ்வாறு கலந்து
ஆற்றல்மிக்க
நிலைகளில் செயல்பட்டது என்று
போகர் காளிங்கநாதரிடம் எடுத்துக் கூறுகின்றார்.
அந்த உணர்வின் ஆற்றல்களுக்குள் இவர்களுக்குள் கலந்துகொண்ட
நிலையை, தனக்குள் ஆற்றல்மிக்க நிலை எவ்வாறு என்று கண்டுணர்ந்து தாவர இனச்சத்தாக
இருந்தாலும், இந்த உடலின்
உறுப்புக்குள் உணர்வின் அணுவின் தன்மையை எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்று போகமாமகரிஷி உணர்த்தி அருளினார்.
இதற்குண்டான காந்த சக்தியின் நிலைகளை நாம்
சூரியனிலிருந்துதான் பெறமுடியும் என்று போகமாமகரிஷி கண்டுணர்ந்தார்.
உயிருடன் தொடர்பு
கொண்டு
உணர்வின் ஈர்ப்பிற்குள் ஈர்க்கும் ஆற்றலைப் பெருக்கி
உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றலை,
வெப்பத்தணல்களைச்
சமப்படுத்தி
உயிரின் தொடர்பு கொண்டு
எந்த உணர்வின் தன்மையை கூட்ட வேண்டுமோ
அதற்குண்டான ஆற்றலைக் கூட்டவேண்டும்.
அப்படிக் கூட்டும்பொழுது நாம் புறத்திலிருந்து வரும் விஷத்தின் தணியச்செய்து
தனக்குள் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும் என்ற வாதத்தின் தன்மை
காளிங்கநாதருக்கும் போகருக்கும் வருகின்றது.