ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2015

நாம் குடியிருந்த கோவில் நம் தாய் தான் - ஞானகுரு

நமது தாய் தந்தை மனித உடல் பெற்றபின், அதாவது இதற்கு முந்தைய  நிலைகளில் பாம்பாகவோ, தேளாகவோ, வண்டாகவோ நாம் இருக்கும் பொழுது
இதனால் தொல்லைகள் வருகின்றது என்று
அதை அவர்கள் கொன்றிருப்பார்கள்.

இதைப்போல உணவிற்காகவும் சிலவற்றைக் கொன்றிருப்பார்கள். சிலர் புசித்தும் இருப்பார்கள். தின்றவர் உடலிலே எதை உணவாக புசித்தார்களோ, உணர்வின் அணுக்களாக மாறும் சந்தர்ப்பம் வருகின்றது. அப்பொழுது அவர் உடல்களில் நாம் புக நேருகின்றது.

அதே சமயத்தில் ஒரு உடலைக் கொன்றால், அந்த உடலைவிட்டு வெளியேறிய உயிர் அது நுகர்ந்த நிலை கொண்டு கொன்றவரின் உடலுக்குள்ளே சென்று விடுகின்றது.

அது எந்த மனித உடலிலே புகுந்ததோ, அந்த உணர்வினை நுகர்ந்து கருவாகும் வாய்ப்பினைப் பெறுகின்றது. மனிதனாகப் பிறக்கும் நிலை வருகின்றது.

இவ்வாறு பல ஆயிரம் உயிர்களைக் கொன்றாலும், கருப்பைக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும்போதுதான், அவை மனிதனாகப் பிறக்கின்றது.

அதாவது கூட்டாக இருக்கும் பொழுது நாம் எறும்புகளை நசுக்குகின்றோம். அது வேதனையுடன் கொன்றவர் உடலுக்குள் வருகின்றது.

இந்த உடலுக்குள் வந்தபின் இந்த உயிர், அந்த உடலின் உணர்வை நுகர்ந்து கருவாக முட்டையாகி விடுகின்றது. அப்படி மாறிய நிலை கொண்டு சந்தர்ப்பத்தால் தாய் கருவிற்கு வரும்பொழுதுதான், அதன் உணர்வினைக் கருவாக்கி உருவாக்கி மனிதனாக உருப்பெறச் செய்கின்றது,

அப்பொழுது,. அவ்வாறு உருவாக்கப்படும்போது நமக்குக் கடவுள் யார்?

நம்மை உருவாக்கிய கடவுளே தாய்தான். உருவாகக் காரணமாக இருந்தது தந்தை.

இந்தப் பிரபஞ்சம் தோன்றி இப்புவியில் மனிதர்களாக வாழும் நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் நமது அன்னை தந்தையே. தாயின் உயிர் கடவுள், தாயின் உடலோ குடியிருந்த கோயில்.

அந்தத் தாயின் உடலான கோயிலில் இருந்த நல்ல குணங்களே நம்மை மனிதனாக்க் காத்தருளியது. ஆகவே நமக்கு நம்மைக் காத்தருளிய தாயின் உணர்வுகளே தெய்வம். நமக்கு நல்வழிப்படுத்திய அன்னை தந்தை உணர்வுகளே குரு.

இன்று நாம் மனிதனானபின், நமது தாய் தந்தையர் நல்லவராக இருப்பினும், நாம் தாய் கருவிலே இருக்கும் பொழுது எத்தனையோ விதமான நல்ல குணங்களைச் சுவாசிக்கின்றார்கள்.

அவை அனைத்தும் அவர் உடலுக்குள் இருப்பினும், சந்தர்ப்பத்தால் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் அச்சமயத்தில், சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார் எனில், அவர் எந்த நோயினால் வேதனைப்படுகின்றாரோ,
அதைக் கருவுற்றிருக்கும் தாய் பண்புடன் பரிவுடன் உற்றுப்பார்த்தால்
அவருடைய உடலை கண்ணின் கருவிழி ருக்மணி
எலும்பிற்குள் இருக்கும் ஊனுக்குள்
ஊழ்வினையாகப் பதிவாக்கிவிடுகின்றது.

கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு அந்த நோயாளியின் உடலிலிருந்து வரும் வேதனையான உணர்வுகளை
தாயின் உடலுக்கு அருகில் கொண்டு வந்து
நுகர்ந்தவரின் ஆன்மாவாக மாற்றுகின்றது.

முதலில் அந்த நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றப்படும் பொழுது நமது பூமிக்குப் பெயர் பரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிலே பரவிவிட்டால் பரமாத்மா என்றாகிவிடுகின்றது.

கருவிழி உற்றுப் பார்க்கும் பொழுது உடலிலே பதிவாக்குகின்றது. கருவிழியோடு சேர்ந்த காந்தப்புலனறிவோ அவர் உடலிலிருந்து வருவதை நுகரச் செய்து “வேதனைப்படுகிறார்” என்பதை உணர்த்துகின்றது உணர்வின் வழியாக.

அதனால்தான், கண்ணின் காந்தப்புலனறிவை சத்தியபாமா – அது உண்மையை உணர்த்துகிறது என்று ஞானிகள் பெயரிட்டனர். அவ்வாறு உணர்த்தினாலும் இரத்தநாளங்களில் அந்த உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

கண்ணின் கருவிழி அந்த மனிதனை உடலில் பதிவாக்கியபின் ஊழ்வினையாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை கண்ணின் காந்தப்புலன்றிவு பரமாத்மாவிலிருந்து கவர்ந்து கருவுற்ற தாயின் ஆன்மாவாக மாற்றி, உயிரிலே அந்த உணர்வின் தன்மை உணர்த்தப்பட்டாலும் அவை இரத்தநாளங்களில் கலக்கச் செய்கின்றது.
அச்சமயம் கருவிலே இருக்கும் அந்தச் சிசுவிற்கு
வேதனையின் உணர்ச்சிகள் கலந்தே கருவிலே உருபெறுகின்றது.

உடல் நலம் பெறும் உடல் நலம் பெறச் செய்யும் தீமைகளை நீக்கிடும் உணர்வு பெற்ற மனிதனாக நாம் இருப்பினும், கருவில் வளரும் சிசுவிற்கு இத்தகைய சந்தர்ப்பத்தில் அவர்கள் வெளியிடும் வேதனையை நுகர்ந்தால், அவர்கள் எத்தகைய நோயால் வேதனைப்படுகின்றனரோ அதை உருவாக்கும் நிலை பெறுகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் கருவில் வளரும் சிசுவிற்கும் பதிவாகிவிடுகின்றது. சந்தர்ப்பத்தில் தாய் கருவில் இவ்வாறு விளைந்தது தெரியாது.

ஆனால், விளைந்து அந்தக் குழந்தை பிறந்தபின் தன் குழந்தையை அதுபடும் வேதனையிலிருந்து காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் அந்தத் தாய் வேதனையை அனுபவிக்கின்றது.

எந்த வேதனையை நுகர்ந்ததோ, அந்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் தாய் உடலிலும் உருவாகிவிடுகின்றது. இவையெல்லாம் இயற்கையின் நியதிகள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து மீட்டிக் கொளவதற்குத்தான்
எத்தனையோ சாஸ்திர வகைகளைக் குவித்துள்ளார்கள் மாமகரிஷிகள்.

ஆகவே, நாம் அதை நுகரவேண்டும்?

நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து அவைகளை நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக்கொள்ள முடியும்.