ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2015

பிறர் கஷ்டப்படுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

இப்பொழுது நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் ஒரு கஷ்டம் என்று கேள்விப்பட்டால் என்ன.., ஏது? என்று போய் உட்கார்ந்து கேட்டுக் கொள்கின்றோம்.

அவன் அப்படிச் செய்கிறான்.., இவன் இப்படிச் செய்கிறான்.., என்று சொல்வதைக் காது கொடுத்து நாம் கேட்டால், நம் வீட்டில் உள்ள கஷ்டத்துடன் இதுவும் சேர்ந்து கொள்கின்றது.

அவர் அப்படிக் கஷ்டப்படுகிறார்.
இவர் இப்படிக் கஷ்டப்படுகிறார்.
இந்தப் பாவிகள் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் உலகம் இருக்கிறது என்று இதையே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

கடைசியில் இரவில் “கண் வலிக்கிறது; கால் வலிக்கிறது; ஏதோ காதிற்குள் குறு..,குறு  என்கிறது என்பார்கள்.

எந்த ஒலியைக் கேட்டார்களோ இந்த உணர்வின் தன்மை இரு நிலை. அடிக்கடி அந்த ஒலிகளை இழுக்கக்கூடிய இந்தக் காது இரட்டிப்பானால் கொய்ங்..,கொய்ங்.., என்று இறையும்.

அடிக்கடி அடுத்தவர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவர்களுக்கு காதில் இரைச்சல் வந்துவிடும். காது மந்தமாக இருக்கிறது என்பார்கள்.

ஏனென்றால் இரண்டு ஒலிகளைக் கவனமாகக் கேட்டதால், ஈர்த்துப் பதிவு செய்திருப்பார்கள். ஒன்றுமே பேசமாட்டார்கள்.  நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
கவலையே பட்டுக்கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது என்பார்கள்.

ஆனால் காதிலே அந்த உணர்வுகள் ஈர்த்து நாம் பேசக்கூடிய ஒலிகள் இரண்டாகிறது. அதன்பின் காதிலே குயிங்..,குயிங்.., என்று இரண்டு விதமான இரைச்சல் வரும்.

இதற்கு எங்கே போவது? கேட்கப்போனால் அர்த்தமே புரியாது.

ஏனென்றால், இவர்கள் இந்தக் கவலையில் இருக்கிறார்கள். எதையுமே செயல்படுத்த முடியாது. எதைச் சிந்தித்தாலும் செயல்படுத்த முடியாது.

இதையே சிந்தித்தால் கண்ணிலும் அதே அலைகள் வரும். எதைப் பார்த்தாலும் இரண்டாகத் தெரியும்.
ஒருவர் சொன்னால் உடனே அந்த உணர்வுக்கு வெறுப்பு வரும்.
மகிழ்ச்சியுடன் வந்தால் இந்த உணர்வுக்கு வெறுப்பு வரும்.
எல்லாம் இந்த உணர்வினுடைய வேலைகள்.

அதே மாதிரி எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு வியாபாரம் ஆகவில்லை. எனக்கு வியாபாரம் ஆகவில்லை என்று இந்த உணர்வுடன் ஜெபம் பண்ணுகிறோம்.

அங்கே கடையில் அமர்ந்தவுடன், வீட்டில் அப்படிப் பேசுகிறார்கள். இப்படிப் பேசுகிறார்கள் என்று இதையெல்லாம் எடுத்துக் கொண்டவுடன், இந்த உணர்வுகள் அவர்கள் காதில் கேட்கும்.

அந்த உணர்வு அங்கே போனவுடன்
அந்த உணர்வு அங்கே இயங்கி
நம்மிடம் வாங்கிச் சென்ற சரக்கை மட்டமாக்கிவிடுவார்கள். ருசியில்லாமல் போய்விடும்.

அவர்கள் தப்பு செய்தது தெரியாது

அங்கே போய் வாங்கி வந்தேன். மட்டமான பருப்பைக் கொடுத்துவிட்டார்கள் போல் இருக்கிறது என்பார்கள்.

அதே சமயம் மட்டமான சரக்காக இருக்கும். அவர் ஓரளவு நிம்மதியுடன் கொடுத்தால் பருப்பு நன்றாக இருக்கும். அல்லது இரண்டு கடைகளிலும் ஒரே பருப்பாகத்தான் இருக்கும்.
அங்கிருந்து வாங்கி வந்தது வேகாது.
இந்தக் கடையில் வாங்கியது வேகும்.

இவர்கள் உணர்வுக்கு எடுத்துக் கொண்ட நிலைக்குத் தக்கவாறு, அந்த எண்ணத்திற்கு இவர்கள் அறியாமலேயே, ஒரு பாயிண்ட் மாறிவிட்டால் போதும். இவர் உடலிலுள்ள உணர்வு பட்டாலே உப்புச் சத்தாகிவிடும். பருப்பு வேகாது.

ஏனென்றால், மனிதனுக்குள் இந்த வெறுப்பு, சலிப்பு சலிப்பு என்பது உப்புச் சத்தாகிவிடும்.

இதைப் போன்று உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்மசுத்தி செய்யுங்கள்.

உங்கள் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் செலுத்தி, துடைத்துக்கொள்ளுங்கள்.