ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2015

இந்த உடலில் நேரமாகி விட்டது

1. கோடிக்கரை
நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு, அதற்கு இரையாகி, அதனின் உணர்வைக் கவர்ந்து, கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்று, பல கோடி சரீரங்களைப் பெற்றதன்பின்,
இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
நம்மை மனிதனாக உருவாக்கியது.
இதுதான் கோடிக்கரை”.

நாம் எதை எண்ணுகின்றோமோ, உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை, நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் ராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தலப்புராணங்களை வடித்து வைத்தார்கள்.

உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும், எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும், எத்தனை தெய்வங்களை வணங்கினாலும், கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
2. சிவதனுசு
ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம், அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.

நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை, உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை ஓம் நமச் சிவாயஎன்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை நாம் ஏசும் பொழுது, ஏசுகின்றார்என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகிவிட்டால். அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் சிவதனுசு”.

நம் உடலுக்குள், அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு, நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான், நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு, “ஒருவன் என்னைக் கோபித்தான் என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான்,
அவனை விடுவேனா பார்
என்று  அங்கு சொல்லப்படும்போது,
நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி, கோபமான சொல்லின்   உணர்வுகள், அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதற்குத்தான் தனுசு என்று பெயர் சூட்டுகின்றனர்.

ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை ஓம் நமச்சிவாயஎன்று
நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது
சிவதனுசு ஆக மாறுகின்றது.

ஆனால், ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்,
அவனை நான் விடுவேனா பார்,
அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்
என்று நாம் சொல்லுகிறோம்.

ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில், நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை, நண்பர் நம்மிடம் வந்து அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்”, என்று சொல்லும்போது என்ன ஆகின்றது?

நாம் …. அப்படி ஆகிவிட்டதா, அவனை அடிக்கிறேன், அவனைக் கொல்கிறேன்என்று  இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,

அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது.
சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை சிவதனுசு என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.

ஆகவே, நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள்,  உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள், இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.

உடல் பற்றின்  தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று கோடிக்கரையாகமனித உடலைப் பெற்றோம் என்பதனை, இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.
3. இந்த உடலில் நேரமாகி விட்டது
இராமாயணத்தில் இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர், தனுசுகோடிக்கு வந்தபின், பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து, சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

ஏனென்றால்,நேரமாகிவிட்டதுஎன்றால் பூஜைசெய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். ஆனால்,  இந்த உடலில் காலதாமதமாகிவிட்டது என்பதுதான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை, ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து  (மனதைக் குவித்து)  சிவபூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார், சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள். எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

அனைத்து தீமைகளையும், விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.

இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு,  நம்முள் பெற முடியும். ஆகவே, இதிலிருந்து  நாம் இராமேஸ்வரம்,  நமது எண்ணத்தால்,  துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
4. தனுசுகோடி
தனுசுகோடி, ம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது, அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி,  கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம். 

நாம் சேர்த்துக்கொண்ட உணர்வின் தன்மை, ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து, தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும். இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும் என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்,தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து, நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப, பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை
நமது உயிர் உருவாக்கியுள்ளது.
ஆகவே மனிதர்களான நாம்தான், தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.

ஆனால் தனுசுகோடி என்பது,  யிர் பல கோடித் தீமைகளை வென்று, தீமைகளையும், விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று, உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.  நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்  எமது அருளாசிகள்.