ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2015

கஷ்டத்தைச் சுவாசிப்பதற்குப் பதில் துருவ நட்சத்திரத்தின் அருளைச் சுவாசியுங்கள்

திருப்பதிக்குச் செல்கின்றோம்.
பணம் கொடுப்பார், என்றுதான் திருப்பதிக்குச் செல்கின்றோம்.
மனசு கொடுப்பார் என்று யாரும் போவதில்லை.

பணத்திற்காக வேண்டித்தான் செல்கிறார்கள். இந்த உண்டியலைக் கொண்டு கொடுத்தால் மொத்தமாக எனக்குக் கொடுப்பார் என்ற இந்த உணர்வைத்தான் வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால், அதற்குப் பின்னால் வரும் நோயையோ, வினையையோ மாற்றுவதற்கு வழி இல்லை.
சம்பாதித்ததை டாக்டரிடம் கொடுக்க வேண்டும்.
ஏமாற்றுபவனிடம் கொடுக்க வேண்டும்.
மந்திரவாதியிடம் கொடுக்க வேண்டும்.
யாகத்திற்குத்தான் கொடுக்க வேண்டும்.
இங்கே பணம் வரும். இங்கே பகிர்ந்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

ஆக நமக்குள் விஷம்தான் இருக்கும்.

இந்த விஷத்தை நீக்குவதற்கு நமக்குள் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய உயிரான ஈசனிடத்தில் கொடுப்பதைச் சமைத்து கொடுப்பவன் அவன் என்று ஆதிசங்கராச்சாரியார் சொன்ன நிலையை நாம் மறந்துவிட்டோம்.

கஷ்டம் கஷ்டம் என்று எண்ணிணீர்கள் என்றால் ஆட்களைப் பார்க்கும் போது கஷ்டத்தைச் சொல்வீர்கள்.

ஆட்களைப் பார்க்காத போது எனக்கு இப்படி இருக்கின்றதே என்று உங்களுக்குள் வேதனையைச் சேர்த்துக் கொள்வீர்கள்.

எந்த சாமியிடம் பக்தியாக இருந்தீர்களோ அந்தச் சாமியின் பெயரைச் சொல்லி அதைத்தான் எண்ணுவீர்கள். இப்படிப் பண்ணுகின்றானே.., அவன் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று மனதிற்குள் தியானம் செய்வோம்.

இப்படிப் பண்ணுகிறாயே.., இப்படிப் பண்ணுகிறாயே..,
இதே தியானத்தை இந்த மூச்சை உடலுக்குள்ளே கொண்டு சென்று
கை கால் குடைச்சல் வருகிறது. என்னங்க.., செய்வது?
மனதே வீட்டில் இருக்க முடியவில்லையே என்பார்கள்.

வீட்டில் வசதியிருக்கும், T.V. இருக்கும், காசு இருக்கும், எல்லாம் இருக்கும். எல்லாம் இருந்தால்கூட மனதே வீட்டில் இருக்க விடமாட்டேன் என்கிறது.

எங்கேயாவது காசைக்கொண்டு கொடுத்துவிட்டு சுற்றிவிட்டு வர வேண்டும். அப்பொழுதுதான் மனது நிம்மதியாகும். இப்படித்தான் நமது காலங்கள் இருக்கின்றது.

எல்லா சிரமத்திலிருந்து நிவர்த்தியாகி நல்லதாக ஆக வேண்டுமென்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உபதேசத்தைக் கொடுக்கின்றோம்.

இந்த உபதேசத்தின் நிலைகள் கொண்டு ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் தியானியுங்கள்.

இது ஒரு சந்தர்ப்பம். இது உங்களுக்கு ஒரு தெளிவு.

எமது குருநாதர் நீ எல்லோரிடமும், உடல் நலமாகும் என்று சொல், அவர்களிடம் நல்ல வாக்கு வாங்கு என்றார்.

யாமும் உங்களிடம், நீங்கள் இதே சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்கின்றோம். படிக்கும் குழந்தையிடம் ஆத்மசுத்தி செய் நன்றாகப் படிப்பாய் என்று சொல்கின்றோம்.

நீங்கள் எதை எண்ணி வேதனைப்படுகிறீர்களோ அதை இப்படி மாற்றுங்கள். அதைப் போக்குவதற்கு ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

கொஞ்ச நாட்கள் செய்து பழகிவிட்டீர்கள் என்றால் பின்பு அது தன்னாலே அந்த உணர்வுகள் இயக்கும். தீமையை நீக்கும் சகதியாக உங்களுக்குள் வளரும்.

ஆக, உங்களூக்கு நல்லதாக ஆகும் என்று யாம் சொல்கிறோம்.

இதே மாதிரி உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும்போது ஆத்மசுத்தி செய்யுங்கள் உங்களுக்கு நல்லதாகிப்போகும் என்று மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.