ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2012

உயிரியல்

உயிரியல்
பிரபஞ்சத்தில் தோன்றிய உயிரணு, நம் பூமியினால் ஈர்க்கப்பட்டு, ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்துக்குள் பட்டவுடன், அந்த செடியின் சத்தை உயிரணு தனக்குள் கவர்ந்து, கருவாகி அந்த சத்தின் தன்மை கொண்டு, ஒரு புழுவாக உருவாகின்றது.

எந்தச் செடியின் சத்தை உண்டு வளர்ந்ததோஅந்தச் செடியின் மணத்தை நுகர்ந்து, நகர்ந்து செல்லுகின்றது. கண்ணால் பார்க்க முடிவதில்லை. நகர்ந்து செல்லும் பொழுது, உடலில் ஏற்படும் உராய்வினால் வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேருகின்றது.

பசியின் உந்தல்கள் அதிகமாக, எந்த இலையைப் புசித்துப் பழகியதோ, அந்த மணத்தை நாடி,  பார்க்கவேண்டும் என்ற உணர்வை உந்துகின்றது.

அவ்வாறு, சுவாசித்த உணர்வின் சத்துக்கள், புழுவின் உடலில் உமிழ்நீராக மாறுகின்றது,  உடலில் சேருகின்றது,

பார்க்க வேண்டும் என்ற உணர்வின்  உந்தலுக்கு ஒப்ப, புது உணர்வின் ஆற்றல்கள் கலந்து வளர்கின்றது. அவ்வாறு வளர்ந்த நிலை, அந்த புழுவின் உயிராத்மாவாக வளர்ச்சியாகின்றது.

புழு மடிந்த பின், புழுவின்  உயிராத்மா இந்த பரமாத்மாவில் கலக்கின்றது. பராமாத்மாவில் கலக்கப்படும் பொழுது,
இந்த உயிரில் எந்த உணர்வின் சத்தை,
மணத்தை  எடுத்துக் கொண்டதோ,
அந்த மணத்தின் தன்மைக்கு ஒப்ப
இன்னோரு தாவர சத்து வெளிப்படும் பொழுது,
அதன் மேல் பட்டு,
அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து
புது உடல் பெற்று வளர்கின்றது.
அது சமயம்,  கண் உள்ள புழுவாகத் தோன்றுகின்றது.

முன் சரீரத்தில், தன் உணவைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்களுக்கொப்ப, உயிரில் இணைந்து உணர்வின் கருவாகி,  ”கருவிழியும், உற்றுப் பார்த்து, உணர்வின் அலைகளைக் கவரும், கண் உள்ள புழுவாக உருவாகின்றது.

 மரம், செடி, கொடிகள் அனைத்தும், தான் இருந்த நிலைகளிலேயே தன் இனத்தின் சக்தியைப் பெறுகின்றது. மற்ற கோள்களோ, சூரியனோ தான்   போகும் பாதையில் தனக்குக் கிடைப்பதை, எடுத்துக் கொள்கின்றது.

ஆனால், தேகத்தைக் கொண்ட உயிரணுவோ, தனக்குள் எண்ணி ஏங்கி, தான் விரும்பியதைத் தேடிச் சென்று எடுக்கின்றது. போகும் பாதையில், நுகரும் உணரச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் தோன்றும் பொழுது, உயிரனங்களில், அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெறுகின்றது.

நமது பூமி வான் வீதியில், ஓர் பரமாக இருந்து, விண்ணிலே சுழலும்பொழுது, போகும் பாதையில் அது துருவப் பகுதியில் கவரும் உணர்வின் அலைகளை பரமாத்மாவாக மாற்றும் பொழுது, பல விதமான செடி கொடிகளை அதன் மேற்பரப்பில் வளர்த்துக் கொள்கின்றது. 

அதைப் போல உயிர், உடலுக்குள் பல உணர்வின் குணங்களை வளர்க்கின்றது. அதிலே எந்த குணங்களை வளர்க்கின்றதோ, அந்த உணர்வுக்கொப்ப,  உடலை மாற்றிச் செயல்படுத்துகின்றது.

கண் உள்ள புழுவாகி, பார்க்கக்கூடிய திறன் ஏற்பட்டபின், 
ஒரு செடியின் சத்து சாப்பிட்டுத் தீர்ந்த பின்,
அடுத்த செடியைப் பார்க்கும் பொழுது, 
சீக்கிரம் தாவிச் சென்று சாப்பிட வேண்டும்
என்ற வேட்கையினால், உந்தப்பட்டு,
அந்த உணர்வுக்கொப்ப உமிழ்நீர் உருவாகி,
உணர்வின் தன்மை உயிரிலே இணைந்தபின்,
அடுத்த சரீரம் விட்டில் பூச்சியாக பிறக்கின்றது.

அதேபோல், ஒரு கண்ணுள்ள புழு, பாறைகளின் வெப்பத்தின் தன்மை தாங்காது,  நிழலைத் தேடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் கொண்டு சுவாசிக்கும் பொழுது, தனக்குள் எதை எண்ணி ஏங்கியதோ, அந்த உணர்வின் சத்து உடலுக்குள் விளைந்து, ஆமையாக  மேல் ஓடு கடினமாக உடல் பெறும் தன்மை பெறுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று விழுங்கி, ஒன்றுக்குள் ஒன்று சென்று, ஒன்றின் சத்தைக் கைப்பற்றி, தனக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

அதாவது தாவர இனம் சைவம், உயிரணு நுகர்ந்து உடல் பெறும் பொழுது, தசைகளாகும் பொழுது நகர்ந்து செல்லும் நிலை பெறுகின்றது, அசைவம். சாந்த குணத்தின் சத்தை நுகர்ந்து உடல் பெற்ற அணுக்களில், விஷச் செடியின் உணர்வுகள் படும் பொழுது, சாந்த அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக,
, பல்லியாகின்றது:
பல்லி, வண்டாகின்றது;
வண்டு அடுத்த ஆன்மா தவளையாகின்றது;
தவளை விஷத்தன்மையான பாம்பினங்களுக்கு இரையாகும்போது  
தவளைபாம்பாக பிறக்கின்றது;
பாம்புபருந்தாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது
தாவர இனங்களை உணவாக உட்கொண்டு, சாந்த குணம் பெற்ற மானின் உயிரான்மா, புலிக்கு இரையாகும் பொழுது, புலியாக உருப் பெறுகின்றது. 

மானின் தசைகள், புலியின் உடலில் அணுத்திசுக்களாக விளைந்து, புலியின் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது,  புலி இறந்தபின்,  புலியின் உயிராத்மா மணங்கள் மாறி, ஞானத்தைக் கொண்ட,  சாந்தத்தை தழுவிய நிலைகள் கொண்ட ஓர் உடலைப் பெறுகின்றது.
இவ்வாறு பலகோடி உடல்களில்
கண்கள் கொண்டு, கூர்மையாக
தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து,
இந்த உடலைப் பாதுகாக்கும் உணர்வுகள் விளைந்து,
தீமையான உணர்வுகளைப் பிளந்து,
நல்ல மணத்தை நுகர்ந்திடும் வலுப்பெற்று,
பன்றியாக உருப் பெறுகின்றது.
வராகன், வலிமை மிக்க சக்தி.

பன்றியான பின், அதன்  வாழ்நாள் முழுவதுக்கும் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்துவிட்டு,  தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் விளைந்த பின், பன்றியின் உடலை விட்டு வந்த உயிர், மனிதனாக உருவாக்குகின்றது.

வான இயல்,
புவி இயல்,
தாவர இயல்,
உயிர் இயல் என்ற நிலைகளில் 
தன்னைத் தான் அறிதல் 

இயற்கை எப்படி வளர்ந்தது, நாம் எப்படி பரிணாம வளர்ச்சியில் இப்பொழுது மனிதனாக உருப் பெற்றோம் என்று, நம் குருகாட்டிய நிலைகள் கொண்டு, மனிதனாகத் தோன்றிய நாம் முழு முதல் கடவுள்,

இந்த பாக்கியத்தை நழுவ விடாதபடி, இந்த மனிதனுக்கு அடுத்த நிலை, பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைவோம், அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் நாம் அனைவரும் பெறுவோம். உலக மக்கள் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற தவம் இருப்போம்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில், நாம் அனைவரும் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.