ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2024

தாஜ்மகால்

தாஜ்மகால்

 

மக்களின் வாழ்க்கையில்… ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது.

1.மனிதர்களின் எண்ணம் நல்வழியில் சென்று… தெய்வ பக்தி கொண்டு அவர்கள் செல்லும் வழிக்கெல்லாம் தெய்வமாக அருள் புரிகின்றார்கள்…
2.நாம் இப்பொழுது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும்.

நல்வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்குச் சென்றால்.. அதைப் போன்றே ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே ஈர்த்துவிடுகிறோம்.

அப்போது… “அந்த ஆவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்…” என்பதனை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் இதை உணர்த்தி வருகின்றேன்.

காலம் காலமாக இவ்வாவிகளின் நிலை செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.

நல்ல நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் சூட்சும நிலையிலிருந்து கொண்டே
1.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாகத் தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக
2.தெய்வமாக இருந்து பல நல் சக்திகளைத் தான் வாழ்ந்த குடும்பத்திற்குப் பாய்ச்சி
3.தன் இரத்த தொடர்புடைய பிள்ளைகள் வாழும் காலம் வரை அந்தக் குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளைப் பூர்த்தி செய்திட
4.பல உதவிகளை அக்குடும்பத்தில் உள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி வருகின்றது.

அந்தக் குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழல விட்டு அந்த ஆவியின் நிலை இருக்கின்றது. அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகு தான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று அடுத்த வாழ்க்கைக்கே வருகின்றது.

ஆனால்… குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும் எந்த நிலையில் அந்த ஆவி பிரிந்ததோ அதே குரோத நிலையில் தான் சுழல்கிறது.

அந்த ஆவி குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ… அதைக் குரோதம் கொண்டவர்கள் மூலமாகச் செயல்படுத்துகின்றது. அதாவது… வும் நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்துகிறதோ அதே போல்தான் இந்தத் துர் ஆவிகளும் வந்து செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளின் அத்தகைய சுவாச நிலையினால் தான் மனிதன் மிருகமாகும்… அதாவது மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

ஆகவே… வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டு தான் மறு ஜென்மம் நமக்கு அமைவதே…!

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
1.மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலை எல்லாம் தெரிந்திடும்
2.நாய்க்கு அனைத்து நிலைகளையும் தெரிந்துவிடும்,

ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்து செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால்… “தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன…”

ஆனால் அந்த மிருகத்தைத் தன் நிலைக்கு அரும்பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான் ஈன்றைய மனிதன். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அந்த மிருகத்துக்கும் தெரிகின்றது.

மிருக உணவையும் பறவைகளின் உணவையும் நாம் புசிப்பதினால்
1.அவற்றின் உடல்களில் எந்தெந்த அணுக்களின் தாக்குதல்கள் இருந்தனவோ
2.அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இப்படியெல்லாம் பல நிலை கொண்ட ஆவித் தன்மைகள் இந்த உலகில் உள்ள பொழுது
1.அந்த ஆவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கிக் கொண்டு
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல் அதைப் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் எனும் ஆவியின் நிலை என்ன…?

அந்த ஆவி இன்னும் அந்த தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அந்த இரண்டு ஆவிகளுமே…! ஷாஜஹான் என்னும் ஆவியும் மும்தாஜின் ஆவியும்.
1.அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை
2.மறு ஜென்மத்திற்கும் வரவில்லை… சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அந்த இரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில் தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையில் தான் இருந்திடும்… ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன. அந்த மாளிகையில்…!

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராக இன்றும் வாழ்கின்றார்கள் அந்த இரண்டு ஆவிகளுமே.

இந்நிலை போல் ஆவி உலகில் பல நிலைகள் உள்ளன.

June 12, 2024

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

 

மனிதனாக பின் அன்பும் பண்பும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர்படும் துயரத்தையும் அந்தத் துயரச் செயல்களைச் செயல்படுத்துவோரைப் பார்ப்பதும் பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவரையும் நாம் காண நேருகின்றது.

அவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான்” என்ற இந்த உணர்வினை நாம் அறிந்தாலும்… அதை நுகர்ந்து எந்த நல்ல குணத்துடன் நாம் இணைந்து அவர்கள் செய்யும் தவறை உணர்கின்றோமோ… அவர் செய்யும் தவறான உணர்வுகள் இதற்குள் பட்டபின் என்ன நடக்கின்றது…?

சந்தர்ப்பத்தில் நாம் கீழே விழுந்து விட்டால் மேலே எழுந்திருக்க முடியாது ஒருவன் மேலே நம்மை அமுக்கிக் கொண்டிருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

இதைப் போன்று நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று அன்புடன் பண்புடன் பரிவுடன் பார்த்தோம் என்றால்… இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும் பொழுது…
1.அவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
2.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அவைகள் பலவீனம் அடைகின்றது.
3.ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படித் துன்பமாக இருக்குமோ
4.அதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.
5.நாம் வேதனையுடன் துடிக்கப்படும் பொழுது எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழே தள்ளும் நிலை தான் வரும்.

மனித வாழ்க்கையில் பண்பும் பரிவும் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் தீங்கு செய்பவனையும் பார்க்கின்றோம்… தீங்கினால் பாதிக்கப்பட்டுப் பதறி அழுபவனையும் பார்க்கின்றோம்.

இரண்டையும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்தறியும் பொழுது நம் நல்ல குணங்களுடன் இணைந்து விடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணங்கள் அடுத்து ஒரு தரம் செய்தாலும்…
1.நம்மை அறியாமலேயே “என்ன உலகம்…? எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…!” என்று
2.அந்த உணர்வுகள் நல்லதைப் பேசாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேச வைத்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு இனிமையான பாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அதில் எதிர்மறையாக ஒலி பதிவாகிவிட்டால் நல்ல பாடலையும் அது இடைமறித்து அந்த இனிமையை மடக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… தீமை செய்பவனையும் அதிலே சிக்குண்டவரையும் இந்த இரண்டு உணர்வையும் நுகரப்படும் பொழுது… அவன் பதறுவதை இந்த வலுக் கொண்ட உணர்வாக உயிர் மாற்றிவிடுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணங்களுடன் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பட்டாலும் அவன் பேசும் வேதனை உணர்வுகளை நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…! உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை… நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்களைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

அவ்வாறு அது செயலிழக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் என்ற நிலை கொண்டு
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி.. நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்...!”

அப்படிப் பெற்றால்...
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து... அதன் வழித் தொடர் நினைவில்...
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்...” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து...
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது...
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல...!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்... விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்... அதாவது...
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்...!

ஆனால்
1.மந்திரமும்... மாயமும்...
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்...
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்...
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்...! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்... தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்... தன் உயிராத்மாவால்... எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும்.

இது சாத்தியமே...!

June 11, 2024

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

அரசியலில் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கூடிக் குலாவி மகிழ்வார்கள். ஆனால் கட்சி மாறிவிட்டால் “இவன் துரோகி…! நாட்டுக்கே ஆகாது…” என்று அவன் எவ்வளவு நண்பனாக இருந்து எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அரக்கத்தனமாகத் தாக்கி… வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதனுடைய பண்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றது…? என்று பாருங்கள்.

அரசியலில் மதம் இனம் குலம் என்று மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொண்டிருந்தாலும்,,, சந்தர்ப்பத்தில் பேதங்கள் வந்துவிட்டால் செய்த நன்மைகளையும் மறக்கச் செய்து தவறுகள் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அதன் உணர்வுப்படி உயிர் இயக்குகின்றது. பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனாகப் பிறந்தோம்.

ஆனால்
1.மனிதனான பின் அசுர உணர்வுகள் தனக்குள் நுழைந்து விட்டால்
2.மீண்டும் நரகலோகத்திற்குச் செல்லும் அணுக்களாகத் தனக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம் தொல்லைகளைக் கொடுக்கலாம் அது மட்டுமல்ல அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கவும் செய்யலாம்.

ஆனால் எதனை இப்படி நாம் உருவாக்கினோமோ இந்த உணர்வுகள்
1.அதை நுகர நுகர நுகர விஷத்தன்மை கொண்ட அணுக்களாக நமக்குள் விளையும்
2.பின் நோயாக விளையும் பொழுது அந்த உணர்வுகள் விஷத்தன்மை கொண்ட மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்று விடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி அந்த வேதனையை ரசித்தோம் என்றால் அடுத்து பாம்பினமாகத் தான் நாம் பிறப்போம்.

அந்த அணுக்களின் மாற்றங்களும்… அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…? இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

1.அவன் செய்ததற்குத் தண்டனை கிடைக்கின்றது…
2/அவன் அனுபவிக்கின்றான்... என்ற எண்ணமே நமக்கு வரக்கூடாது.

அப்போது நாம் எதை எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனுக்குள் நல்ல உணர்வு தோன்ற வேண்டும்… அறியாத நிலையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பதிலாக… அதிகமாக நம்மைத் தாக்கிப் பேசுகிறான்…! ஆகையினால் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்து விட்டால்… நம்மால் தாங்க முடியவில்லை என்றால் நமக்குள் கோபமும் கொதித்தெழும் தன்மையும் அவனை அழித்திட வேண்டும் என்ற உணர்வே தூண்டும்.

அந்த உணர்வு தூண்டப்படும் பொழுது
1.தவறு செய்தது அவர்கள்
2.நுகர்ந்தறிந்தது நாம்
3.உயிர் அறியச் செய்கின்றது… அந்த அணுவாக மாற்றி விடுகின்றது
4.அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு நம் உடலில் ஒட்டி வினையாக அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆனால்… நாம் தவறு செய்யவில்லை.

“அவன் கெட வேண்டும்” என்று நாம் தொல்லைகள் கொடுத்தோம் என்றால் அதே உணர்வை நுகரப்படும் பொழுது அதே உணர்வின் அணுக்களாக உடலுக்குள் உருவாகி… அவன் செயல் நம் உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு அந்த அணுக்கள் தன் இரைக்காக உணவுக்காக ஏங்கும் பொழுது… அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி விடுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவர் கடுமையாக நம்மை ஏசுகிறார் என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை எடுத்து அந்தத் தீமை விளையாதபடி அந்த மகரிஷியின் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது
1.அவர் சொல்லும் உணர்வையும் இதையும் இணைத்து நாம் நுகரப்படும் பொழுது
2.அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கும்.
3.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் கூடும்.
4.இதனை எடுத்து அவன் அறியாத இருளில் இருந்து நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்கு மேலும் அவர் உணர்வு “நம் மீது தாக்கி… நாம் தாங்க முடியாத நிலை இருந்தால்…” அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்குள் அதுவே விளைந்து அவன் உணரட்டும்…! என்று
1.எனக்கு வேண்டாம்…
2.நீயே அனுபவித்து உன்னுடைய உணர்வுகளை அறிந்து… அதன் வழியாக நீ அதை அனுபவித்துப் பார் என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

அதாவது… எவர் ஒருவர் நீங்கள் கெட வேண்டும் என்ற உணர்வை எண்ணி அதிகமாகத் தூஷிக்கின்றனரோ… அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்

அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…! என்ற நிலையைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.

சித்தாவது எப்படி…?

சித்தாவது எப்படி…?

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்...?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று... பக்குவம் எய்தி... அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்...
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ...ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்...? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை...
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ... எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ... அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை...!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது... நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது...? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

June 10, 2024

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

 

ரோட்டிலே போகும் பொழுது அல்லது பஸ்ஸிலே செல்லும் பொழுது ஒரு விபத்து நடப்பதை நேரடியாகப் பார்க்கின்றோம் அந்த உடல் அப்பொழுது சிதைகின்றது… அந்த மனிதன் அலறும் ஓலங்கள்… அந்த ஒலி அலைகள் அங்கே படர்கின்றது.

அங்கே எத்தனை விதமான ஒலிகள் படர்கின்றதோ சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்து வைத்துக் கொள்கின்றது. அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி உடலில் பதிவாக்கி விடுகின்றது.

அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் பரவி உள்ளது.
1.நாம் இப்படி நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கப்படும் பொழுது
2.இரவிலே நம்மை அறியாமல் திடுக்… திடுக்… என்று பயப்படுவோம்.

காரணம்… மனிதன் மற்ற சிந்தனை இல்லாது உறங்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கும் உணர்வுகளில் “அது” வலுவாக இருக்கின்றது.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த விஷம் தான் முன்னணியில் இருக்கும். “சப்…” என்று இருக்கும் ஒரு பொருளில் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களையும்… நல்ல செயல்களையும்… நல்ல நிலைகளையும் பார்த்துணர்ந்த நாம் எதிர்பாராது ஒரு விபத்தைப் பார்க்க நேர்ந்து… அங்கே அவன் உடல் சிதைந்து வேதனையுடன் வெளிப்படுத்திய உணர்வுகளை நம் கருவிழி உடலில் இங்கே பதிவாக்கி… அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின்… “அவன் வேதனைப்பட்டது போன்று அச்ச உணர்வுகள் நமக்குள் உருவாகின்றது…”

அதை நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களை அதிகமாக இங்கே பெருக்கி விட்டால்… நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு அதிகமாக இழுத்து…
2.நம் ஆன்மாவிலே வந்து உயிரிலே பட்ட பின் நம்மை அறியாமல் அலறுகின்றோம்… துடிக்கின்றோம்.

சில பேர் மற்றவரிடம் அடிவாங்கிய பின் அந்த அடி தாங்காது எழுந்து ஓடும் நிலை வரும். அதே போல மனிதனாக இருக்கக்கூடிய நிலையில் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தூக்கத்திலே… ஐய்யய்யோ..! யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்…! என்று எழுந்து ஓடுபவர்களும் உண்டு.

காரணம்… அடிப்பதை வேடிக்கைதான் பார்த்தார்கள். அந்த உணர்வின் தன்மை கரு விழி பதிவாக்கி விடுகின்றது அவன் உடலில் இருந்து வரக்கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் செல்கின்றது.

அடிப்பவனையும் நாம் பார்க்கின்றோம் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம். இரண்டு உணர்வையும் நம் கருவிழி இங்கே பதிவாக்கி வைத்து விடுகின்றது. இது கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக வருகின்றது.

அக்ரிகல்ச்சரில் பல பொருள்களைச் சேர்த்துப் புதிதாக எப்படி உருவாக்குகின்றார்களோ… அதைப் போல நம்முடைய செயல்கள் சந்தர்ப்பத்தில் நாம் உற்று நோக்கிய உணர்வுகள் அங்கே அடிப்பவனையும்… அடியினால் அரண்டு ஓடக்கூடிய நிலையும்… இரண்டும் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்து இதில் எதனின் ஆக்கம் அதிகமாகி “இப்படிச் செய்கின்றானே பாவி…!” என்று ஓடுவதைக் கண்டு அந்த பய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இந்தப் பதிவின் துடிப்பு அதிகரிக்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது நமக்குள் “அவன் உருவம்” தெரிவதில்லை ஆனால் யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்… என்ற அந்த உணர்வு கொண்டு அஞ்சி… தூக்கத்தில் எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்…
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வு சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு இந்த உணர்வை இயற்கையில் நாம் எப்படி வாழ்ந்தோமோ (முழித்திருக்கும் போது)
2.அதே செயலாக்கங்களை இரவிலே கொண்டு வருகின்றது.

இப்படி சிலர் தூக்கத்தில் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். ஒரு சிலர் தூங்கும் பொழுது “என்னைக் கொல்கின்றார்களே… என்று சொல்வதையும்; என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்…” என்றெல்லாம் வரும்.

இதே போன்று சிலருடைய தாக்குதலான உணர்வுகளை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறுவதை உற்று நோக்கி அந்த உணர்வினைப் பதிவாக்கினால் மீண்டும் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலுவாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும்போது அதுவும் இயக்கும்.

நண்பன் சொன்னதை அவர் பார்த்தார் ஆனால் நாம் பார்க்கவில்லை. பார்த்து அநியாயம்பா… இப்படி அடித்துக் கொள்கின்றார்கள் என்று அவர்கள் சொன்னால் போதும்.

அவர்களில் பதிவான உணர்வு சொல்லாக வருவதை நமது கண் கவர்கின்றது உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அவர் எதைப் பார்த்தாரோ நாம் அந்த ஆளைப் பார்க்கவில்லை.

அவர் எந்த உணர்வின் வேகத்தைப் பார்த்தாரோ அந்த சொல் நமக்குள் பதிவான பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது அந்த மனிதனின் வேதனை நமக்குள் தெரிய வரும்.

வேதனைப்படுகின்றான்… புலம்புகின்றான்… அவனை அடித்துக் கொல்கின்றார்கள் என்ற இந்த உணர்வு நமக்குள் இருப்பதால் “அது உயிரிலே பட்டபின்”
1.அவன் தன்னை அடிக்க வருகிறான் என்று நாம் தூக்கத்தில் எழுந்து ஓடுவோம்
2.அல்லது அடிக்க வருகின்றார்கள் என்று இரவிலே கத்துவோம்.

இதைப் போன்று ஒருவன் குடும்பக் கஷ்டத்தினால் நீரிலே மூழ்கி மூச்சுத் திணறி இறந்து விடுகின்றான். இன்னொருவர் அதைப் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்கள். இது மாதிரி ஆகிவிட்டான்… அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று அங்கே சொல்வார்.

அதைக் கேட்பவர் உணர்வுகளில் அது அப்படியே பதிவாகும். அதே உணர்வின் தன்மை இங்கே வரப்படும் பொழுது அவர் வீட்டில் சங்கடமும் சலிப்பும் இருந்து அன்றைக்கு அவர் தூங்கினால் புலனடங்கிய நேரத்தில் சோர்வு என்று வரப்படும் பொழுது அவர்கள் சொன்னது போல (குளத்திலே விழுந்து மூழ்கி இறந்து விட்டான் இங்கே கத்தினான் என்று சொன்னது)
1.பதிவான அந்த உணர்வுகள் இங்கே வந்து தன்னை அறியாமலே கிணற்றிற்குள் மூழ்குவது போன்று தெரிய வரும்
2.தண்ணீருக்குள் மூழ்கிக் கத்துவது போன்று தெரியும்.

இதுகள் எல்லாம் நமக்குள் பதிவான உணர்வுகள்… நாம் புலனடங்கித் தூங்கினாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றது.

காரணம் நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ உடலுக்குள் பதிவான அதே உணர்வு மீண்டும் நம்மை இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது...
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது... வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது... ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு... பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்... இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்...
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா...!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி... அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி... அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி... அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே... அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்... நாடு... தேசம்... என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்தச் சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்...
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது...!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்... நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்... சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்...
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்...!”

June 9, 2024

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

 

முற்றும் துறந்தவன் முனிவன்...! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி... மோட்சம் அவனுக்குக் கிட்டும்...! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்...! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்...?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று... பாசம்... கடமை... இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை...!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்... என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக... ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே...
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த... தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள...
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்... மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்...
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்...
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்... “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து... பொருள்...!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை...
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்...” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்,

June 8, 2024

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS...) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS...) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

 

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரைச் சிந்திக்கும்படி செய்வதற்கு மாறாக “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இனச் சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் போது பெண்கள் மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்… பூச்சிக்கொல்லி மருந்து என்று சொல்வார்கள்.

விஷமான அணுக்களைக் கொல்லக் கூடிய சக்தி மஞ்சளுக்கு உண்டு மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்குள் விஷ அணுக்கள் உருவாகாதபடி அது தடுக்கும்.

இப்பொழுது அதையும் மீறி…
1.வேதனையும் வெறுப்பும் கொண்டு பெண்கள் இருந்தால்
2.மஞ்சள் பவுடரையோ அல்லது மஞ்சளையோ கையில எடுத்து வைத்திருந்தால் போதும்… அதில் வண்டு விழுந்துவிடும்.

கடையில் மஞ்சளை அவர்கள் வைத்திருக்கும் வரை ஒன்றும் செய்யாது. அவர்களும் அதைக் காக்க ஒன்றும் செய்வதில்லை… சுத்தமாகத்தான் இருக்கும்.

ஆனால் வீட்டிலே வாங்கிக் கொண்டு வந்து வைத்து
1.அதில் குறிப்பாக வேதனைப்படுவோர் கையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் என்றால்
2.நிச்சயம் வண்டு விழுகும்… முழுவதும் பவுடராக மாறிவிடும்.

காரணம் மனிதனிலிருந்து விளைந்தது நாம் எண்ணி வெளிப்படுத்திய உணர்வுகள் தன்மைகொண்டு மனிதனிலிருந்து உருவாக்கக்கூடிய உயிரணுக்கள் தான் அவைகள் அதிகமாக…!

வான் வீதியில் இது போன்ற அணுக்கள் அதிகமாக உருவாவதில்லை.

1.மனிதன் ஆனபின் மனித உடலில் இருந்து வெளிப்படக்கூடிய மூச்சு கடும் விஷமான நிலைகளில் இப்போது உருவாகின்றது.
2.டைஃபாய்டு மூளைக் காய்ச்சல் இது எல்லாம் இப்போது வருவதற்குக் காரணம் அதுதான். (சிந்தனை குலைந்து மருந்தாக உணவாகும் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் அணுக்கள்)

ஒரு மனிதன் வருகின்றான்… உற்றுப் பார்த்து அவனின் உணர்வை நுகர்கின்றோம் என்றால் நமது உயிரின் நிலைகள் ட்ரான்சாக்ஷ்ன்… ட்ரான்சிஸ்டர் என்றும் சொல்வார்கள்.

அதாவது
1.ரேடியோ எப்படி ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றி
2.அந்த ஒலி அலைகளைச் சீராக கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றதோ
3.அதைப் போல நமது உயிர் நாம் நுகரும் உணர்வுகளை மாற்றி நம் உடலுக்குள் கொண்டு செல்வதும்
4.அதன் சிந்தனைப்படி நம்மை இயக்குவதும் உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் (உருவாகி இருக்கும்) அணுக்கள் அது உணவுக்கு ஏங்கும் பொழுது… அந்த உணர்ச்சிகள் உயிருக்கு… அந்தச் சிறுமூளைக்கு… ட்ரான்சாக்ஷ்ன் ஆக வரும்.

உயிருக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் கண் காது மூக்கு உடலுக்கு இது ஆணையிடும். ஆணையிடும் பொழுது எந்த அணுக்களின் தன்மை அதிகமாக நேசித்ததோ நமது கண் இந்தப் பூமியில் இருப்பதை இழுக்கும்.

ஏனென்றால்… முதலில் உற்றுப் பார்க்கும் போது கருவிழியால் பதிவானது கருவிழியால் நுகர்ந்து நமக்குள் சேர்ந்தது.

உடலில் அப்படிப் பதிவாகும் இந்த உணர்வுகள் கண்ணுக்குள் வந்த பின் இதே காந்தப் புலனறிவு
1.தன் உணவுக்காகக் காற்றிலிருந்து தனக்குள் எடுத்துச் சுவாசிக்கச் செய்து
2.இரத்த நாளங்களில் கலந்து அதிலிருந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.

இது எல்லாம் ஒரு இயந்திரத்திற்குச் சமமாக நம் உடல் இயங்குகின்றது

ஆனாலும் அந்த அணுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறோ… அதற்குள் இந்த உயிருடன் கொண்ட உடலில் எத்தனையோ வேதனைப்படுகின்றோம்…!

வயிற்றிலே வலி வந்தால் தாங்க முடிவதில்லை. இது எல்லாம் அந்த உணர்வின் உயிரின் நிலைகள் இயக்கப்படும் பொழுது வயிற்று வலியை உருவாக்கும் அணுக்களை அது ஆகாரமாக எடுத்து அதிகமாகச் சேர்க்கும் பொழுது நுகர்ந்தபின் இந்த உணர்ச்சிகள் நமக்குத் தெரிகின்றது… வேதனைப்படுகின்றோம்.

இது எல்லாம் இயற்கையின் நிகழ்ச்சிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா...?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான் அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
2.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா...?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்...”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

June 7, 2024

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

“எந்தச் சோதனையிலிருந்தும்” மீண்டு(ம்) அருள் வழியில் பயணம் செய்வது தான் இறை ஞானம் பெறும் முறை

“எந்தச் சோதனையிலிருந்தும்” மீண்டு(ம்) அருள் வழியில் பயணம் செய்வது தான் இறை ஞானம் பெறும் முறை

 

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு... அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு... அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்... அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்...! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்... ஆண்டவன் என்பது...
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்...” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்... அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா...!

அதைப் போன்று... இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்...!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு...!

1.”தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான்…” அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ...
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை...!”

June 6, 2024

சப்தரிஷிகளின் செயல்கள்

சப்தரிஷிகளின் செயல்கள்

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக... அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்... ஜீவன் பிரிந்த உடல்களும்... அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்... “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்...” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவனற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே...! அதன் நிலை எப்படி...?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா...!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்... உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்...
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா...? மற்ற மண்டலங்கள் இல்லயா...? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று... அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா...? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று...
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்... அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

 

ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்…! என்னுடைய (ஞானகுரு) அறியாத குழந்தைப் பருவத்தில் சில உயிரினங்களை (குருவி மைனா) உயிருடன் எரித்திருக்கின்றேன்… கை கால்களை இழக்கச் செய்து அதை வேடிக்கை பார்த்து ரசித்து உள்ளேன்.

அப்படி நான் ரசித்து வேடிக்கை பார்த்த உணர்வுகள்
1.எனக்குள் அணுக்களாக வளர்ந்து “விதி” என்ற நிலையாக வருகின்றது
2.அதனுடைய பருவ வளர்ச்சியில் அதே உணர்வாக இயக்கி என்னையும் முடக்கச் செய்கிறது.

இப்பொழுது நான் சக்தி பெற்றவனாக இருப்பினும்… எத்தனையோ பேருக்கு நான் உதவி செய்கின்றேன் என்ற எண்ணத்தில் இருந்தாலும்… கீழே விழுந்த பின் “என் கை எலும்பு முறிந்து விட்டதே…” என்று வேதனையாக எண்ணினேன் என்றால் “அந்த மரண பயத்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருவேன்…”

1.ஆக… நான் அறியாத வயதில் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அதன் வழி அழைத்துச் சென்றது
2.அது இத்துடன் செல்லட்டும்… அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்
3.என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலைகள் வரக்கூடாது என்று நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.மரண பயத்திலிருந்து நான் விடுபடுகின்றேன்… அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதனுடைய அடுத்த எல்லையான பிறவி இல்லா நிலையை அடையத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில்
1.நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்ற எண்ணங்கள் இருப்பினும்
2.எதையும் எவரும் செய்ய முடியாது (இது முக்கியம்).

உதாரணமாக நடந்து செல்லும் ரோட்டின் நடுவிலே ஒரு பொருள் இருக்கின்றது. அதை எடுக்க நான் ஆசைப்பட்டேன் என்றால் என் எண்ணம்… என்னுடைய ஆசை… அந்தப் பொருள் மீது தான் வரும்.

ஆனால் எடுக்கச் செல்லும் போது இடையிலே குறுக்கே வரும் வண்டியினைக் கவனிக்கவில்லை என்றால் ஆளை மாய்த்துவிடும். அல்லது மற்ற எதிரிகள் அந்தப் பொருளை நான் பெற முடியாதபடி தடுக்கும் செயலாக இருந்தால் அதை அறிய முடியாது.

அந்தப் பொருளை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிப்படையும் தன்மை வருகிறது. அதனால் அவர்களை அழித்திடும் உணர்வுகள் தோன்றி… கடும் நோயாக உடலுக்குள் உருவாகி… நம் நல்ல உணர்வுகளை எல்லாம் அது அழித்து விடுகின்றது.

காரணம்… நாம் எண்ணியதை எல்லாம் நமது உயிர் உடலில் அணுக்களாக விளையச் செய்து விடுகின்றது. அதன் வழி தீமையை நமக்குள் விளைவிக்கின்றது.
1.இப்படி மனித உருவை மாற்றுகின்றதே தவிர இந்த உடலிலே யாரும் நீடித்து வாழ்வது அல்ல
2.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அது நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தைக் கவர்ந்து செடியாக வளர்ந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்குகிறது.

இதைப் போன்று தான் நம் உடலும் ஒரு நிலம் தான்.
1.நம் உயிரின் இயக்கத் துணையால்… அதிலுள்ள காந்தப்புலனால் கவர்ந்து கொண்ட உணர்வுகள்
2.ஊழ்வினை என்ற வித்துக்களாக விளைந்து விடுகின்றது.

அது போன்று தான் இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் ஞான வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வாக உங்களில் விளைகின்றது.

அருள் ஞான சக்தியாகப் பெருக்கிவிட்டால் உடலுக்குள் ஒளிச் சுடராக விளைகின்றது. இருள் சூழ்ந்த நிலைகளை ஒடுக்கி விடுகின்றது.

உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் நாம் பற்றினோமோ அங்கே செல்கின்றோம். ஆகவே நாம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும். ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும்.

1.எனது குரு காட்டிய அருள் வழியினை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்
2.உங்கள் நினைவாற்றல் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்
3.அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்… நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும்.
4.உங்கள் மூச்சின் தன்மை நல்ல உணர்வாக இந்தப் பூமி முழுவதும் படர வேண்டும்

ஞானிகளைப் போல் நஞ்சினை அடக்கும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குரு காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் பதிவு செய்வது.

June 5, 2024

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

 

இன்று உணவுக்காக என்று சொல்லிக் கொண்டு கோழி முட்டைகளை நிறைய உருவாக்குகின்றார்கள். அதாவது…
1.ஆண் இணைப்பு இல்லாதபடி கருவுறச் செய்கிறார்கள்…
2.கோழி முட்டை இடுகின்றது… ஆனால் அதிலே குஞ்சுகள் பொரிப்பதில்லை.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை வரும்

செடி கொடிகளில் எடுத்துக் கொண்டாலும் ஆண் இனம் இல்லாதபடி உரம் கொடுத்து செடிகளை விஞ்ஞானிகள் வளர்க்கின்றார்கள்.

ஆண் இணைப்பு இல்லாது இருந்தாலும் அது ஒரு சீராக வளரும். ஆனால்
1.அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் மனிதரோ அல்லது மற்ற எந்த உயிரினமாக இருந்தாலும்
2.அதனின் அணுக்கருக்கள் இணைத்துத் தன் இனத்தைப் பெருக்கும் நிலைகள் உருவாகாது.

ஆக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் உருவாக்கும் அது போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்று உலகெங்கிலும் சரி… பெரும்பாலானோருக்குத் தன் இனக் குழந்தைகளை உருவாக்கும் சக்திகள் அந்த ஆற்றல்கள் குறைந்து விடுகின்றது.

1.இப்படி விஞ்ஞான அறிவால் கற்றுணர்ந்த உணர்வுகள்… நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம்மை அறியாதபடி எத்தனையோ வகைகளில் நமக்குள் தீமைகளாக வந்து சேருகின்றது.

குழந்தை இல்லை என்றால்… எனக்குக் குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே…! என்ற வேதனை உணர்வுகளைச் சுவாசித்து அவர்கள் அதை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

“இல்லையே…” என்று வேதனை உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது உடல்களிலே விஷம் கொண்ட அணுக்கள் வளர்ந்து விடுகிறது. இந்த விஷம் கொண்ட அணுக்கள் கூடும் பொழுது இன விருத்தியும் இல்லாது போய் விடுகின்றது.

ஏக்கத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மரணம் அடையும் அளவுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. எனக்குக் குழந்தை இல்லை…! அதனால் நான்கு பேர் என்னை அவமானமாகப் பேசுகின்றார்கள்… என்ன வாழ்க்கை…? என்று வெறுத்துத் தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

தன்னை ஏளனமாகப் பேசுகிறார்கள் என்ற அந்த எண்ணத்தில் மரண பயம் ஏற்படும் போது நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலில் விளைந்து விடுகிறது.

1.எத்தனையோ கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
2.இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் தாக்கப்பட்டு மரண பயத்திற்கு அழைத்துச் சென்று
3.மனித உடலை அழித்திடும் உணர்வுகள் இங்கே விளைகின்றது.

இதைப் போன்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுத்து அருள் ஞானத்தை வளர்க்கும் நிலையும் எத்தகைய நஞ்சினையும் மாற்றிடும் உணர்வுகளையும் உங்களுக்குள் வளர்த்திடல் வேண்டும்.

தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகள் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து “விதியை அந்த மதி கொண்டு வெல்ல வேண்டும்.

குழந்தை இல்லையே என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இது விதி ஆகிறது. இதை மாற்றி அமைக்க
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவேன்
2.என் உடலுக்குள் அந்த வலு கொண்ட அணுக்கள் வளரும்…
3.குழந்தையை உருவாக்கும் அணுக்கள் உருவாகும் என்று உங்கள் எண்ணத்தினால் நீங்கள் இதை எண்ணிப் பாருங்கள்.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வுகள் வாயிலாக அதை நுகர்ந்தறியும் போது உங்கள் உடலில் அருள் ஞான உணர்வாகப் பெற்று… தன் இனத்தின் தன்மை கருவாக உருவாக்கும் அந்த ஆற்றல் பெறுகின்றீர்கள்

மகரிஷிகளை அருள் சக்தி பெறுவேன்… என் உடல் முழுவதும் அது படரும்… என்னை அறியாத இருள் நீங்கும். மகரிஷிகளின் அருள் உணர்வால் புத்திர பாக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்.

கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை
1.தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.தன் மனைவிக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இருவருமே இதை எண்ணி ஏங்கினால்
3.நிச்சயம் அந்த அணுக்கருக்கள் உடலில் கூடும்
4.குழந்தையும் உருவாகும் உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.

பருவ நிலை மாற்றம் (CLIMATE CHANGE)

பருவ நிலை மாற்றம் (CLIMATE CHANGE)

 

ஆவியாகி... நீராகி... பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி... நீராகி.. பிம்பமாகி...! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்...”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது... வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல... நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு...” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்... தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்...! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது...!”

எதுவுமே... அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்...” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்... பருவ நிலை மாற்றம்... அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்... எல்லாமே.

June 4, 2024

எதிர் அலை (ECHO) கொடுக்கும் ஆலயத்தின் கல் தூண்கள்

எதிர் அலை (ECHO) கொடுக்கும் ஆலயத்தின் கல் தூண்கள்

 

யானை மிகவும் வலிமையானது தான் ஆனால் வலு கொண்ட யானையையும் மனிதன் அடக்கி ஆட்சி செய்கின்றான் பாம்பு விஷம் கொண்டது தான்… அதையும் மனிதன் அடக்கி ஆட்சி புரிகின்றான்.

கதிரியக்கச் சக்தி என்பது மிகவும் விஷம் கொண்டது தான். இன்று விஞ்ஞானத்தால் அதைப் (அணுவை) பிளக்கின்றார்கள் அதையும் அடக்கி ஆட்சி செய்கின்றார்கள் சூரியனின் ஒளிக் கதிர்களும் வலு கொண்டது தான். அதற்குள் இருப்பதை அடக்கி உண்மையின் பொருளைக் காணுகின்றனர் (SOLAR).

1.எதனையுமே அடக்கி ஆட்சி புரியும் சக்தி கொண்டவன் மனிதன்
2.எதனையுமே அடக்கிடும் வல்லமை பெற்றவன் மனிதன் என்பதனைக் காட்ட “அங்குசபாசவா” என்று
3.கணபதி கையிலே அங்குசம்… எதையுமே அடக்கி ஆட்சி புரியும் நிலை என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

மிருக நிலைகளில் இருந்து தோன்றி தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு வளர்ச்சி பெற்று… சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனித உருவை உருவாக்கி… கணங்களுக்கு அதிபதி கணபதியாக…
1.எண்ணங்கள் கொண்டு எதனையுமே அடக்கிடும் சக்தி கொடுத்தாய்…! என்று
2.உயிரை… தன்னை அறியும்படி ஆலயங்களில் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்…!

ஆனால் ஆலயத்திற்குச் சென்றால் நாம் இப்பொழுது எப்படி வணங்குகின்றோம்…?

உன்னை வணங்காத நாளில்லை… உனக்காக விரதம் இல்லாத நாளும் இல்லை…! என்று சொல்லித் தன் குடும்பத்தில் நடக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி அழுகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்று அழுதால் அந்த வேதனை தான் நமக்குள் வளரும்… வளர்ந்த பின் கடும் நோயாக மாறும். ஆகவே… கோயிலுக்குச் சென்று சுத்தப்படுத்துகின்றோமா… அல்லது கோயிலை அசுத்தப்படுத்துகின்றோமா…?

நாம் ஆலயத்திற்குச் சென்று அங்கே ஞானிகளால் காட்டப்பட்ட தெய்வ குணங்களை எண்ணி எடுத்து உயர்ந்த மூச்சலைகளாக அங்கே பரப்பப்படும் போது
1.ஆலயத்தினுடைய கல்களில் அது படர்கிறது;.. அதனின் காந்தப் புலனறிவுகள் கவர்கிறது
2.அதாவது அங்கே ஒவ்வொரு தூணிலும் எக்கோ (எதிர் ஒலி) வரும்
3.நாம் பாய்ச்சும் ஒலி அலைகளை எடுத்து மீண்டும் அந்த ஒலிகளைத் திரும்பக் கொடுக்கும்.
4.நாம் பரப்பிய நல்ல உணர்வைப் பதிவாக்கிக் கொள்ளும்… அதைக் கலக்கும்… அந்த அலைகளைப் பெருக்கும்.

சாதாரண மக்களுக்கும் இப்படித்தான் உயர்ந்த சக்திகளை எல்லாம் கிடைக்கும்படி செய்து வைத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள். நம்முடைய ஆலயங்கள் அவ்வளவு அற்புதமானது..

இப்போது நான் (ஞானகுரு) உபதேசிக்கும்போது
1.அதை நீங்கள் செவி வழி கேட்கப்படும் பொழுது உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ
2.அது போல் ஆலயத்தில் உள்ள காந்தப்புலனறிவுகள் (நம் மீது) பாய்ச்சப்பட்டு… இந்த உணர்வின் தன்மை
3.எதிர் அலையாகத் தனக்குள் “உயர்ந்த உணர்வுகளைக் கூட்டும் சக்தியாக” வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே ஆலயத்தை நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் (ஆண்டவனின்) ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் (ஆண்டவனின்) ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்... குணமும்... உடல் உறுப்பும்... உருவமும்... எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை...! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக... ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ... அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு... அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்...
1.எதன் அடிப்படையில்... எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்...”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்... இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி... “ஓ...ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது... விஞ்ஞானமும் கண்டிருக்காது...!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு... மோதி... உயிர்ப்பலிகள் அதிகமாகி...
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை... “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து... வாழும் மனிதன்...
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்...
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்...” என்ற நானாக... வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

June 3, 2024

குரு பீடத்தின் சக்தி

குரு பீடத்தின் சக்தி

 

மனிதனின் வாழ்க்கையில் சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ சந்தர்ப்பவசத்தில் நமக்குள் இது வித்தாக ஆகிவிட்டால் விதியாக அது வளர்ந்து விடுகின்றது.
1.அந்த ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து இந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாக அவஸ்தைப்பட்டுத் தான் தீர வேண்டி இருக்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்… எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும்…! என்று ஏங்கி அதைப் பெறுதல் வேண்டும்

“தபோவன குரு பீடத்தின் சூரியனை உற்றுப் பார்த்து” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இதற்கு முன் எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நீங்கள் இதற்கு முன் செய்த வினைகளை அகற்றிடும் சக்தியாக அருள் ஒளி உங்களுக்குள் படர்ந்து உங்கள் உடலில் எந்த வலி இருந்தாலும் மேல் வலியாக வந்திருந்தாலும் அது அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் கூட்டும்.

மனக்கவலையோ சோர்வோ அதைப் போன்ற நிலைகள் இருந்தாலும் இங்கே தியானிக்கும் பொழுது அந்த மன பலம் உங்களுக்குக் கிடைத்து மன வளம் பெறும் அந்தத் திறனும் கிடைக்கும்.

உங்கள் உயிரை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர்தல் வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும். மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும் என் பார்வையால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணைத் திறந்தே இந்தச் சூரியனைப் பாருங்கள்.

1.உங்கள் உடலுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகள் ஊடுருவதும்… மகரிஷிகளின் ஆற்றல் பெருகுவதையும் நீங்கள் உணர முடியும்.
2.மகரிஷிகள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் உருவங்கள் இருந்திருந்தால் அந்த உருவமும் சிலருக்குக் காட்சியாகக் கிடைக்கும்
3.சப்தரிஷி மண்டலங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு தியானிக்க… தியானிக்க
1.உங்கள் நரம்பு மண்டலங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரும் பொழுது
2.ஒரு காந்தப் புலனறிவு உங்களுக்குள் இயங்குவதை உணரலாம்

மனதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியம்

மனதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியம்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை...” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை...!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி... நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி... ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவும் காயும் கனியும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை...” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன...?

அளிக்கப்பட்டன...! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்...! அது.

அதாவது...
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்... இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது...”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி... அழகாக்கி...
3.மனிதன் மகிழ வேண்டும்...! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா...!

June 2, 2024

தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது

தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது

 

குருநாதர் என்னிடம் சொன்னது…
1.நீ முந்தி செய்த வினைகள் அது வளரும் பருவம் வரும் பொழுது
2.உனக்குள் விதியாக வந்துவிடும்.

அந்த விதி வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்…?

என்னை அறியாது இருள் நீங்க வேண்டும்… அந்த மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும். நான் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி அதைப் பெற வேண்டும்.

நான் என்னுடைய சிறு வயதில் அறியாமல் செய்தது அனைத்தும் விளைந்து… கால் பாதங்கள் எரிவதும் உடலும் எரிகின்றது. ஒவ்வொரு நிமிடமும் அதை மாற்றுவதற்கு மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்தேன்.

நீ சிறு வயதில் எத்தனையோ பாவங்களைச் சேர்த்தாய் என்றார் குருநாதர். அதை எல்லாம் இப்பொழுது நான் சொன்னால் நீங்களும் பயந்து விடுவீர்கள்…

ஒடக்கானைப் (ஓணான்) பிடிப்பேன். மூக்குப் பொடியை எடுத்து அதனுடைய கண்ணிலே தூவி விடுவேன். அது தலையை ஆட்டும். பார் பேய் ஆடுகிறது என்று காட்டுவேன்.

இதையெல்லாம் நான் செய்தவன் தான். அப்பொழுது எனக்குக் கண் எரிச்சல் எல்லாம் வரும். குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.

சிறு வயதில் நீ தெரியாமல் செய்தாய். ஆனாலும் உன் உயிர் என்ன செய்கிறது…?
1.உடலில் உனக்குள் அணுக்களாக விளைய வைத்திருக்கின்றது
2.அது விளைந்து வரப்படும் பொழுது ஒவ்வொன்றாக அந்த அனுபவம் வரும்.

இப்போது அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.நல்ல குணங்களுடன் சேர்ந்து இது எப்படி எரிச்சலாக வந்ததோ இந்த எரிச்சல் வரும் பொழுது
2.நீ அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிலே எண்ண வேண்டும்.

அந்த நிலையைத்தான் நீ பெற வேண்டும் என்றார் குருநாதர்.

நான் (ஞானகுரு) தவறு ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கு நன்மை தான் செய்து கொண்டிருக்கின்றேன். சந்தர்ப்பத்தில் நான் கவிழ்ந்து விழுந்து விட்டேன். விழுகும் போது சாக்கடையில் கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன்

எனக்கு வலு இருக்கின்றது. ஆனால் எலும்பு ஒடிகிறதே…! நான் தவறு செய்தேனா…? இல்லை.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பட்ட நிலைகள் இது வரும்.
2.விதிப்படி இது நடக்கும்… ஆனால் மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.

மனிதனான பின் மதி என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வினைத் தனக்குள் எடுக்க வேண்டும். இந்த மதி கொண்டு தான் அந்த விதியை வெல்ல முடியும்.

கீழே விழுந்து விட்டேன்…! எம்மா… எப்பா…! என்று சொன்னால்… நான் சொல்லும் வேதனையை நீங்கள் கேட்டால் உங்களிடமும் இது விளையும். உங்களிடம் விளைந்த பின் இரண்டு பங்கு என்னிடம் கொடுப்பீர்கள் இதைத்தான் என்னால் வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய வினைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

1.என்று… நாம் எதைச் செய்திருந்தாலும்
2.விதிப்படி அந்தந்த உணர்வுகள் வளர்ச்சி அடையப் படும்பொழுது அது வரும்.

அது தான் சித்திரை…! சிறு திரைகள்…! நம்மை அறியாது நாம் செய்த பிழைகள் திரை மறைத்து அந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளையும். அதன் வித்தின் தன்மை நிச்சயம் விளையத் தான் செய்யும்.

வேதனைப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த விஷத்தின் தன்மை அது வளரத் தான் செய்யும்… அந்த விஷம் கூடத்தான் செய்யும் என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
1.என்னைப் போன்ற இந்தத் தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…! என்று எண்ணுதல் வேண்டும்.
2.தலை வலிக்கிறது என்றால் இந்த வலி மற்றவருக்கு வரக்கூடாது.
3.அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை… விதியை… மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.

“வெறுமனே எண்ணாதபடி” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றி அடிக்கடி அதை இணைத்துச் சொல்ல வேண்டும். காரணம் அருள் ஞானிகள் இதைப் போன்ற நிலைகளை வென்றவர்கள். அதை எடுத்துத் தான் மாற்ற வேண்டும்.

ஆகவே உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது… உங்கள் அறியாத வரும் இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்கின்றீர்கள். இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி ஒளிச் சரீரம் பெறுகின்றீர்கள்.

நான் எத்தனையோ பேருக்கு ஆசிர்வாதம் கொடுக்கின்றேன்… எனக்கு ஏன் இப்படிக் கையில் அடிபட்டது…? என்று எண்ணினால் என்ன ஆகும்…!

விதிப்படி நான் அதை வளர்க்கின்றேன் மீண்டும் இன்னும் எத்தனையோ தொல்லைகள் வரும். அது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்
1.தொல்லைகள் எப்பொழுது மனிதனுக்கு வருகின்றதோ அது விதி.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மதி…!

அத்தகைய மதி கொண்டால் பிறவியில்லா நிலை அடையலாம்.

விஞ்ஞானத்தை மெச்சும் மனிதனால்… “தன்னுடைய ஞானத்தை மெச்சி ஏன் வளர்க்க முடியவில்லை...!”

விஞ்ஞானத்தை மெச்சும் மனிதனால்… “தன்னுடைய ஞானத்தை மெச்சி ஏன் வளர்க்க முடியவில்லை...!”

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்...!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி - தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்... பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெற வேண்டும்.

அதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்... ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்... இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று... அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை... சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்... அந்தர வாழ்க்கையில்...!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா...” பூமியில் போடுகின்றான்...?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்... பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா...?

June 1, 2024

சாம அதர்வண யஜூர்

சாம அதர்வண யஜூர்

 

ஒரு வேதனைப்படுபவரை சந்தர்ப்பவசத்தில் நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வின் இசை “சாம…!”
1.வேதனையான உணர்வுகள் வந்தபின் உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்போம்…
2.அவர் அம்மா……! என்று அலறினால் போதும் நாம் ஐயோ…! என்று சொல்வோம்.

ஆக இந்த உணர்வின் தன்மை தனக்குள் ஆகிவிட்டால் நல்ல குணங்களின் இசைகளையே மாற்றி விடுகின்றது… “அதர்வண…” மாறி அதுவே ஒரு வித்தாகி விடுகிறது “யஜூர்…”

வித்தாக ஆன பின் மீண்டும் சாம…
1.அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது
2.நம்முடைய சோக கீதம் அங்கே வாசிக்கத் தொடங்கி விடுகின்றது… எம்மா… எப்பா… மீண்டும் சாம…!

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அருள் மகரிஷிகளின் உணர்வைத் எடுத்து இதை அடக்கிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடனுக்குடன் இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்… “எந்த நோயாளியை நாம் பார்த்தோமோ” மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும்… அவர் அருள் ஞானம் பெற வேண்டும்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நினைவுபடுத்தி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறு… உன் உடல் நலம் பெறும்…” என்ற இந்த உணர்வின் வித்தினை விதைத்து விடவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அது அந்த வேதனையை அடக்குகின்றது.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கும் பொழுது அதனுடைய இசை சாம.
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனையை அடக்கப்படும் பொழுது அதர்வண
3.அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் பொழுது யஜுர்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வித்தாகி விட்டால்…
1.இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது எங்கே செல்கின்றோம்…?
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

ஒரு மனிதன் வேதனைப்படும் குரலை நாம் கேட்டோம் என்றால் சாம… நாமும் அந்த வேதனையைச் சொல்லும் போது “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் பொழுது அதர்வண…! நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது,

மீண்டும் சாம…! அந்த வாசனை கொண்டு “அவர் இப்படி ஆகிவிட்டாரே… இப்படி ஆகிவிட்டாரே…” என்று மீண்டும் அந்த அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர் இறந்து உடலை விட்டு வந்தால்… அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்திருந்தால் அந்த நோயால் இறந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து… அதே நோயை இங்கே வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

பின் நாமும் மடிகின்றோம்.

இறந்த பின் நம் மீது பற்றுள்ள உடலில்… இதே உணர்வுகள் கலந்து அந்த உடலுக்குள் சென்று நாம் இப்படித் தேய்பிறையாகச் செல்ல வேண்டி வருகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை நமக்கு ஞானிகள் கொடுத்தார்கள்.

திரும்பத் திரும்ப யாம் (ஞானகுரு) சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்
1.ஒவ்வொரு கோணத்திலும் “ஒரு உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகின்றது…?” என்பதை நீங்கள் அறிந்தாக வேண்டும்.
2.பல முறை நீங்கள் கேட்டறிந்துள்ளீர்கள்… ஆனால் உங்களால் திருப்பிச் சொல்ல முடிகிறதா… என்றால் இல்லை.
3.அதன் வழி நடக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.
4.ஒருவன் கோபித்து விட்டான்… வேதனைப்படுகின்றான் என்றால் அதில் தான் லயித்து விடுகின்றோம்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் துடைக்கத் தெரியவில்லை.

அதற்காகத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்

உங்களுக்குள் தெளிவான நிலைகளை உருவாக்க வேண்டும் நீங்கள் எம்முடைய அருள் உரையைக் கேட்கக் கேட்க…
1.நீங்கள் சுவாசிப்பது சாம.
2.இந்த உயர்ந்த ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதர்வண… உங்கள் கஷ்டங்களை நீக்கும்.
3.கஷ்டங்கள் நீக்கும் அந்த உணர்வின் வித்தாக உருப்பெற்றால் யஜுர்…
4.மீண்டும் சாம… அதை எண்ணத்தால் எண்ணும்போது உங்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் அடக்கி… உயிர் நல்லதாக மாற்றுகின்றது.

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்... வழக்கமான இந்தச் சுழற்சி வாழ்க்கையினை வாழ்ந்து மட்டும்… “எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது...?”

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு... நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது...!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி... வைரமாக்கி... மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து... “ஒரு நிலையில் வாழ்கிறது...” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்...” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்...
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்...!