ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2026

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்


டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.
 
அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.
 
1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.
 
நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.
 
ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.
 
ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.
 
செல்போனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.
 
அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.
 
பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.
 
1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.
 
அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.
 
ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?
 
தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 
இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை ழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
 
ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் தைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.
 
1.உங்களிடம் இதுதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன் உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.
 
இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.