
உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்
கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.
உதாரணமாக கோபமான
உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.
இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு
நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம்
என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.
இவை எல்லாம்…
1.அவனைப்
பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள்
உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம்
செயல்படுகின்றோம்.
அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்.
கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.
நமது குருநாதர்
காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும்
போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள்
சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
என்று ஏங்கி இருக்க வேண்டும்.
அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும்.
இதை எடுத்துப் பழகிக்
கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?”
என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி
விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.
நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே
அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.
இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.
இந்த உணர்வுகள்
அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர்
நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான
பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து
சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!
இந்த உணர்வின் தன்மை
வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ
வைக்கும்.
3.இந்தத்
தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக
வரவேண்டும்.
உணர்வின்
இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை
உணர வேண்டும்.
ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி
அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.