
கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
இந்த மனித
வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம்
அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நுகர்ந்து
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் ஆன்மாவை இணையச்
செய்யும்
2.அந்த
வலுவான நிலைகளை உங்கள் உடலில் உருவாக்குதல்
வேண்டும்.
இவ்வாறு உருவாக்கினால் இந்த வாழ்க்கைக்குப் பின் இதே உடலில் உருவான உயிருடன் ஒன்றி
கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து அதனுடன் இணைய முடியும்.
கணவன் மனைவியாக இணைந்து குழந்தையை எப்படி உருவாக்குகின்றோமோ… அது போல் இருவரும் துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த அருள் சக்தி
கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் இவ்வாறு உணர்வால்
ஒன்றிய பின் “இரு உயிரும் ஒன்றாக
இணைந்து விடுகின்றது…”
இரு உயிரும் ஒன்றான
பின் அருள் ஒளியின் உணர்வை உருவாக்கி
ஒளியின் சரீரமாக இயங்கத் தொடங்கும்.
1.உயிருக்குள் வெப்பம் என்ற நிலை இருக்கும் பொழுது அது விஷ்ணு என்றும்
2.அதிலே
ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் இதை உருவாக்க முடியாது.
ஆண் என்ற நிலையில்
இயங்கினாலும் பெண் என்ற நிலையில் இணைக்கும் போது எண்ணத்தால்
உருவாக்கும் அருள் சக்தியை… “தன்னுடன் இணைத்துப் பெருக்கும் சக்தி பெறுகின்றது…”
காரணம்
- அமிலத்தின் தன்மை கொண்டு ஒன்றைத் தனக்குள்
வளர்த்திடும்… அதை உருவாக்கும்… உணவாகக்
கொடுத்து வளர்த்திடும் திறன் பெற்ற அமிலங்கள் பெண்கள் உடலில் உண்டு.
ஆண்களில் திடப்பொருளின் தன்மையை இறுகச் செய்யும் நிலையில் இருப்பினும்
பெண் உணர்வுடன் கலந்து உயிருடன் ஒன்றி உருவாக்கினால்
1.உடலை விட்டு அகன்றால் இரு உயிரும் இணைந்து
2.ஒருவர் பின் ஒருவர் சென்றாலும்… அல்லது
3.இந்தத் தியானத்தில் இணைந்து வாழ்ந்தால் ஒன்று முன்
சென்றாலும்
4.பின் வரும் தன் கணவனோ தன் மனைவியோ
அவர் உணர்வையும் அரவணைத்து ஒன்றியே அதை அழைத்துச் செல்லும்.
5.எந்த விண்ணை நோக்கி ஏங்கி எடுத்தோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில்
நாம் இணைய முடியும்.
இந்தப் பிரபஞ்சம் அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை நுகர்ந்தாலும் நமது பூமி நுகரும் தருவாயில் பூமியில் உருப்
பெற்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக அமைந்திருப்பதனால் பூமிக்கு
வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்கள் அதுவும் ஒளியின் சுடராக வளர்கின்றது.
சூரியன் எப்படிக்
கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிப் பிற மண்டலத்திலிருந்து
வருவதைச் சூரியன் கவர்ந்து அனைத்தையும் அரவணைத்து எப்படி வளரச் செய்கின்றதோ இதைப் போல் தான் நாம் அந்த துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலை கொள்ளுதல் வேண்டும்.
இந்த வளர்ச்சிக்கு நாம் செல்ல வாழ்க்கையில் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
மனிதனாகப்
பிறந்தோம்… உடல் மடிகிறது…! என்றால் மனித வாழ்க்கையிலே விஷத்தின்
தன்மை அளவுகோல் கூடும் பொழுது தான் உடலில் நல்ல அணுக்கள்
மடிகின்றது.
மடிந்து உடலை
விட்டுச் செல்லும் உயிரான்மா எந்த
ஆசையை வளர்த்து வாழ்ந்ததோ பேயாசையாக
மாறி… எல்லாவற்றையும் அழித்துவிட்டு
ஒன்றை பெறப் வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகள்
அதிகரிக்கும் பொழுது இன்னொரு மனித உடலுக்குள்
புகுந்து அந்தப் பேயாசையை அங்கே ஊட்டி அந்த விஷத்தன்மையை அந்த உடலிலும் அதிகமாகச்
சேர்த்து அந்த உடலை வீழ்த்தி விட்டு வெளிவந்த பின்… மனிதன் அல்லாத நிலைகளைத் தான்
பெறச் செய்கின்றது.
1.ஆனால்
நம்முடைய ஆசை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி
2.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாது
3.அருள் ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு
வட்டத்தில் நாம் சென்று பிறவி
இல்லா நிலை அடைய முடியும்.
இந்த வலுவைச் சேர்த்தால்
நாம் அங்கே செல்கின்றோம். “மனிதனின் கடைசி எல்லை சப்தரிஷி மண்டலத்தை அடைவது
தான்…”