ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2026

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”


சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.
 
அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.
 
அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின்  மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.
 
அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்றுதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. து அதர்வண வேதம்.
 
வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.
 
1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.
 
இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.
 
ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றி நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.
 
அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.
 
அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது
 
அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.
 
வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்ங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.
 
இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.
 
ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.
 
காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.
 
அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.கஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் அதுவே போதுமானது…”