
தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்
நாம் ஒரு மனிதனிடத்தில் “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு இந்த நல்ல வழியில் செல்” என்று கூறினால் உடனே அவரிடத்தில் “எதிர் நிலையாகின்றது…”
தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது அவர் தமது தாய் தந்தையராக
இருந்தாலும் வெறுக்கின்றார்… சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார்… நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.
1.ஏனென்றால் மனிதர் தமக்குள் எடுத்துக்
கொண்ட உணர்வுகள் எதுவோ
2.அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது.
ஆனால் அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும்
தன்மைக்குக் காரணம் என்ன…?
குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால் நமது குழந்தையிடமும்
விளையாட்டுக் குணம் அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான்… கல்வியில் ஞாபகம் இருக்காது… ஞானம் வராது என்று நாம் அவனைத் திட்டினால் அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.
நாம் கோபமாகப் பேசினால் அவன் நம்மை எதிர்த்து
பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று
அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது நமக்குள் வெறுப்பின்
தன்மை இயக்கி அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
நுகர்ந்த உணர்வுக்கொப்ப நமது உயிர் நம்மை இயக்குகின்றது.
1.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிர் நம்மை இயக்கினாலும்
2.நமது ஆறாவது அறிவால் நமது உயிரான்மாவை நம் வழிக்கு கொண்டு
வரமுடியும்.
நாம் இதைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம்
என்றால் நமது உயிர் அவ்வுணர்வின் வழி நம்மை வழி நடத்தும்.
1.தீமைகளை நீக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால்
2.நமது உயிர் நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி நமது அங்கங்களைச் செயல்படுத்தும்.
3.தீமைகளை நீக்கும் அருள்
உணர்ச்சிகள் நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.
இதை போன்று தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து அதன் உணர்ச்சிகளை நம்முள்
இயக்கினால்… நமது சொல்லில் நயமும்… நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும்… நமது சொல்லை ஏற்றுக்
கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.