
சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?
நாம் ஒரு ஜவுளி
வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர்
சேகரிப்பதற்குச்
சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.
கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற "மாதிரித் துணிகளை" (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம்
கேட்கின்றனர்.
நாமும் கடைக்காரரிடம்
ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார்
செய்து,
அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.
சரக்கை அனுப்பி
வைத்துவிட்டு
ஓரிரு நாள்கள் கழித்துப் பண
வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.
அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.
அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து
கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.
வீட்டிலிருந்த சிறுவனை
அழைத்து,ச்
“சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி
வருவதற்காக
வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.
சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!”
என்று அவசரப்படுத்துகின்றான்.
ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு…
பொறு…” என்று அடுத்தவர்களுக்கே
சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய
அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.
சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.
அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து
கொண்டிருக்கின்றார்கள்,
ஆகவே எண்ணெய் சீக்கிரம்
கொடுங்கள்…
தாமதமானால் வீட்டில் என்னைத்
திட்டுவார்கள்…!”
என்று கூறுகின்றான்.
1.இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…”
அதாவது கடைக்காரரின் உணர்வும்
சிறுவனுக்குச்
சீக்கிரம் சரக்கைத் தந்து
அனுப்ப மறுக்கின்றது.
இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே,
நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான்.
சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.
இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!”
என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.
ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.
எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச்
சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த
அவசரத்தால்
போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.
சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை
ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.
அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம்.
வழியில்
நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.
1.நமது நினைவு
முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து
கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.
உடைந்த பாட்டில் காலில்
பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு
உடைத்துள்ளார்களே…!”
என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.
உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம்
உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள்
வருகின்றன.
சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த
பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால்
செய்ய மாட்டோம்.
இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம்
சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.
1.ஆனால் நாம் என்ன
செய்கின்றோம்…?
வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும்
உணர்வுகளை
எடுத்துக் கொண்டு போகின்றோம்.
இப்படி இதன் உணர்வுகளுடன்
கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று
கடைக்காரரிடம் கேட்போம்.
நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த
சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.
கீதையில் நீ எதை
எண்ணுகின்றாயோ
அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை
நுகர்ந்து
சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…”
உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால்
இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.
ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப்
பொருளும்
இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.
“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.
உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத்
தான் சொல்கின்றேன்…”
என்று கூறுகின்றார்.
நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…”
என்று கூறுவோம்.
அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை)
கெட்டுவிடக் கூடாது…”
என்று கூறுவார்.
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.
அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.
துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக
வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக்
கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும்.
2.இதன் தொடர் கொண்டு அகண்ட
அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி
இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி
எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி
உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி
நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து
கொள்ளக் கூடிய ஆற்றலைக்
குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.
குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள்
அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச்
செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.