ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2026

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை


ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள்…! அதாவது
1.தன்னிச்சையாகவே… நாம் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் செய்யும் தொழிலே தெய்வமாகின்றது…”
 
நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் பிறர் நலம் பெற வேண்டும் என்ற அக்கறையே நமக்குள் வளர்கின்றது. இதிலே சுயநலமும் வருகின்றது அதிலே பொது நலமும் கலக்கின்றது. இரண்டு உணர்வும் சேர்க்கின்றது.
 
உதாரணமாக நாம் சமையல் செய்யும் பொழுது அரிசியை எடுத்துத் தூய்மைப்படுத்தித் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்தாலும் அதிலே ஒரு கல் வந்து விடுகிறது.
 
இதைப் போல வாழ்க்கையில் சில நேரங்களில் குறைபாடுகள் வந்துவிடும்.
1.அத்தகைய நிலை வந்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்கி விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து
2.அத்தகைய உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.
 
ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் உங்கள் வாழ்க்கைப் பயணம் பகைமை வராதபடி அருள் உணர்வைப் பெருக்கிடும் அருள் வாழ்க்கையாக அமையும். இந்த உடலுக்குப் பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கேழைத்துச் செல்லும்.
 
ஆனால் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையே அதிகமாக எண்ணி வளர்த்துக் கொண்டால் எவர் உணர்வு நமக்குள் அதிகமாகின்றதோ இந்த உடலுக்குப் பின்… உயிர் அந்த உடலுக்கு அழைத்துச் செல்லும்.
 
அங்கே சென்று பேயாக மாற்றும் நோயாக மாறும். பின் அந்த உடலை விட்டு வெளிவந்த பின் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப மனிதரல்லாத உடலை உருவாக்கி விடும் இதே உயிர் தான்.
 
ஆகவே உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.ஆனால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது
2.அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது.
3.ண்ணும் பொழுது அதன் வழியாகவே வருகின்றது.
 
அதாவது… உடலான மமே நமக்குள் எண்ணமாகி அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றது.
 
தீமைகளை நீக்கி அருள் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் பரவி வரும் விஷத்தன்மை நமக்குள் கவராது மாற்றிக் கொள்ள முடியும்.
 
அதற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
 
பத்திரிகையைப் படித்தாலும் சரி… மற்றவைகள் மூலம் உலக நடப்புகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாலும் சரி…! அறிந்து கொண்ட தீமை நமக்குள் வளராதபடி மனத்தூய்மையை நாம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.
 
அப்படிச் செய்தோம் என்றால்
1,நம் வாழ்க்கையில் அந்தக் கணக்குப்படி நமது உயிர் ஜட்ஜ்மெண்டாக தீர்ப்பாக
2.நம்மைப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்யத் தீர்ப்பளிக்கும்.
 
அதிலே நாம் தவறினால் விஷத்தன்மை சூழ்ந்துவிடும்… ஏனென்றால் அது வலிமையானது. அந்த உணர்வின் அடிப்படை வளர்ந்து விட்டால் அதனின் தீர்ப்பாக உயிர் மீண்டும் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.
 
ஆனாலும் இன்றைய விஞ்ஞான உலகம் விஷத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் மீண்டும் “மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்…”
1,நல்ல நினைவு இருக்கும் போதே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.அந்த அருள் உணர்வை இப்பொழுதே வளர்த்துக் கொள்ளுங்கள்.