
மூதாதையர்களுக்கு இதற்கு முன் நாம் செய்ய மறந்த காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்
மகரிஷிகள் காட்டிய அருள்
வழியில் உங்களுக்குள் அருள் உணர்வைத் தூண்டி…
1.உங்கள்
நினைவை விண்ணை நோக்கிச்
செலுத்தச் செய்து
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெற்று அதனின் வலுக் கொண்டு “அவரவர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை” சப்தரிஷி
மண்டலத்துடன் இணைக்க முடியும்.
ஏனென்றால் நாம் அனைவரும் சேர்ந்து வலுக் கொண்டு “உந்தித் தள்ளப்படும் பொழுது…” சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்புக்குள் முன்னோரின் ஆன்மாக்கள் செல்கின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழலத் தொடங்குகிறது.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ராக்கெட் மூலம் செயற்கைக்
கோள்களை விண்ணிலே செலுத்துகின்றார்கள்.
பூமியின் ஓடு பாதையில் சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழல்கின்றது.
அதே சமயத்தில் தெற்கு வடக்காகச் சுழலும் பொழுது அந்தச் சூழலின்
தன்மைக்கு இதனின் ஈர்ப்பு வேகத்தைக்
கூட்டும் பொழுது அது சுழல்கின்றது. அதனுடைய
வேகத்தைக் குறைத்து பூமியின் சுழல்
வட்டத்தில் சமமான நிலைகள் இருக்கும் பொழுது… “அது எந்த ஊரின் எல்லையோ…”
அங்கேயே நிலைகொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.
இதைப் போன்று
தான் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி
ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றனரோ அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி… அதனின் வலுக்
கொண்டு மூதாதையரின் உடலை விட்டுப்
பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் முறைப்படி விண் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது. பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகிறது.
அந்தக்
குடும்பத்தைச் சார்ந்தோர்
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் துருவ மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதைப் பெற்று
2.வாழ்க்கையில்
வரும் கடும் தீமைகளையும் மாற்றி அந்த மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக்
கொள்ளலாம்.
பௌர்ணமி தோறும்
அனைவரும் ஒன்று சேர்ந்து இதைப் போன்று செயல்படுத்த வேண்டும்.
இதற்கு
முன்பு நாம் செய்யாத்தால் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று இருந்தாலும் நாம் எடுக்கும் வலுவின் துணை கொண்டு
1.அந்த
உடலிலிருந்து எப்பொழுது வெளி வந்தாலும்
நம்முடைய நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கப்படும் போது
2.அந்த உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து விட்டு விண்
செல்லும் தகுதியை நாம் ஏற்படுத்த முடியும்.
ஆகவே நாம் தளராது இதைச் செய்ய வேண்டும். மனிதனாக நம்மை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பிறவிக்கு வராதபடி செய்வதே நம்முடைய “தலையாயக் கடமையாக” வைக்க
வேண்டும்.
ஆங்காங்கு
உள்ளோர் கூட்டுத் தியானங்களின் மூலம் முதலில் இதை வலுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். உடலை விட்டு வந்த ஆன்மாக்களைத் துரிதமாக நாம் விண் செலுத்த முடியும். காரணம் அவருடைய உணர்வுகள் தான் நம் உடலாக இருக்கின்றது. எளிதில் அனுப்ப
முடியும்.
ஆனால் இப்பொழுது சாங்கியத்தைத் தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.
சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஓடும் தண்ணீரில்
கரைத்தால் பாவம் போய் மோட்சம் போவார்கள். மோட்ச தீபம் ஏற்றினால் சொர்க்கம் செல்வார்கள் என்று தான் செய்து
கொண்டுள்ளோம்.
ஆகவே காலத்தால் மறைந்த அந்த உண்மைகளை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செயல்படுத்தி
நம் முன்னோர்களின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி
மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா
நிலை பெறச் செய்வோம்.
அவர்கள் ஒளி நிலை பெற்றால் அவருடைய துணை உண்டு இந்தப் பூமியில் வரும் தீமைகளை
அகற்றிவிட்டு வாழ்க்கையில் நாம் மகிழ்ந்து வாழவும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவும் முடியும்.
இந்த உடல் நமக்குச் சொந்தம்
அல்ல… உயிரே நமக்குச் சொந்தம். ஆனால் வழக்கத்தில் நாம் உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலையில் இருக்கின்றோம்.
உயிரை நாம் சொந்தமாக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம்.
1.நாம் எதை எண்ணுகின்றோமோ
அதைத்தான் உயிர் இயக்குகின்றது… உடலாக்குகிறது
2.அப்படிப்பட்ட
உயிரைச் சொந்தம் என்று யாரும் எண்ணவே இல்லை.
3.அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல்.
4.அவனை வேண்டி அந்த அருள் உணர்வுகளை நாம் வலுவாக்கிக்
கொண்டால்
5.உயிருடன் ஒன்றி என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்