ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2026

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

திருஞானசம்பந்தர் குழந்தையாகப் பிறந்த பின் தாய் அவரை ஆலயத்திற்கு எடுத்து வரும் பொழுது
1.கருவில் இருக்கும் போது தாய் எதையெல்லாம் உற்றுப் பார்த்ததோ அதைப் பார்த்து அங்கே தவழ்ந்து செல்கின்றது.
2.நஞ்சை ஈசன் எப்படி நீக்கினானோ அதே போல என் கருவில் வளரும் குழந்தை பிணிகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும் என்று தாய் எண்ணியது.
3.அதைப் போல் அந்தக் குழந்தையின் பார்வையில் மற்றவர்கள் பிணி போகின்றது.

அதைப் போல கருவுற்ற தாய்மார்களும் அகஸ்தியன் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்... அப்படி வளர்ந்த குழந்தை பிறந்த பின் உற்றுப் பார்த்து கையை மேலே வைத்தால் அந்த உணர்வுகள் தோன்றும். அவர்கள் நோய் நீங்கும்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அது நீங்க வேண்டும்... என்று குழந்தையிடம் இந்த ஆசியை வாங்கினால் அந்த நோய் போகும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகள்…
1.அன்று அகஸ்தியனுக்கு எப்படித் தாய் கருவிலே நஞ்சை வென்றிடும் சக்தி பூர்வ புண்ணியமாக விளைந்ததோ
2.அதைப் போன்று கருவுற்ற தாய்மார்களும் எண்ணி அந்த சக்திகளை வளர்த்து அகஸ்தியனைப் போன்ற ஆற்றலைப் பெறச் செய்ய முடியும்.

ஆனால் இன்று கருவுற்ற தாய்மார்களோ மாமியாரோ நாத்தனாரோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று "ஒருவருக்கொருவர் சண்டையிட்ட உணர்வுகளைக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டினால்...” அதில் உருப்பெற்ற குழந்தை "வம்புச் சண்டைக்கு" செல்லக்கூடிய குழந்தையாகத் தான் வருவான்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றி ஒழுக்கமான நிலைகள் வரவேண்டும் என்பதற்குத் தான் அருள் ஞானிகள் "படமாக உருவாக்கி"
1.அதன் மூலம் ஞானத்தின் தன்மை பெறுவதற்காக லட்சுமி சரஸ்வதி விநாயகர் என்ற காவியங்களைப் படைத்து
2.பின் அந்த அருள் ஒளியின் சுடர் என் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கும்படி சொன்னார்கள்.

ஆனால் காலத்தால் இது எல்லாம் மறைந்து விட்டது. ஞானிகள் காட்டிய வழியில் நாம் யாரும் செல்லவில்லை.

திருமூலர் எப்படிச் சக்தி பெற்றார்…? திருஞானசம்பந்தர் எப்படி அந்த உயர்ந்த சக்தி பெற்றார்…? என்று எண்ணி அதையெல்லாம் கர்ப்பமாக இருப்பவர் உணர்வுகளில் பதிவாக்கிக் கொண்டால்
1.அந்தக் குழந்தை உங்களைக் காக்கும்... குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக அவன் வளர்கின்றான்.
2.அவன் மூச்சு பட்டால் விஞ்ஞான அறிவினால் இனி வரக்கூடிய விஷத்தன்மையிலிருந்து உங்களைக் காப்பான்.
3.அந்தக் குழந்தையால் அது முடியும்.

ஆகையினால் கர்ப்பமுற்ற தாய்மார்கள் அனைவரும் அந்த அருளைப் பெற்றுக் குழந்தைக்கு அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாக உருவாக்கி வளர்த்திடுங்கள்.

எது பதிவாகின்றதோ அதுவே நினைவாகின்றது. டி.வி அலைகளை ஒளிபரப்பு செய்தால் அது எந்த ஸ்டேஷனில் வருகின்றதோ அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்த பின் இங்கு வருகின்றது.

அதே சமயத்தில் கோபம் வெறுப்பு என்று நண்பர்களுக்குள் வரப்படும் பொழுது "இப்படி ஆகிவிட்டதே… நாளை என்ன ஆகுமோ…?” என்று அவனுடைய நிலைகள் எண்ணி இணைக்கப்படும் பொழுது நோயாக இங்கே வந்து உருவாகி நம்மையும் வாட்டுகின்றது.

அன்று செய்யக்கூடிய நம்முடைய காரியங்களும் பலவீனம் அடைகின்றது செயலற்றதாகின்றது. குழந்தைகள் பாடம் படிக்கவும் முடியாது போகிறது.

ஆகவே எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அது இப்படி வருகின்றது. அதே உணர்வு நம்மையும் இயக்குகின்றது மற்றவரையும் இயக்குகிறது.

ஆனால் எண்ணும் பொழுதே
1.அருள் ஒளி பெற வேண்டும்... வரும் இருளை மாற்ற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்வதற்குத் தான்
2.இந்த ஸ்டேஷனை (ஞானிகள்) உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
3.இந்தப் பதிவை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு அந்த ஞானமாக உங்களைப் பேச வைக்கும்.
4.பழமையில் உருவான தீமைகளை நீக்கும் அருள் சக்தி உங்களில் விளையும்.

விஞ்ஞான அறிவினால் மனிதன் சிந்தனை இழந்து செல்லும் நிலைகள் வந்து கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்.

ஓசோன் திரை கிழிந்ததால் அதன் வழியாக பல விஷத்தன்மைகள் பூமிக்குள் வருகின்றது. வெப்பத்தின் தணல் கூடுகின்றது,,, துருவப் பகுதியில் பரவி பனிகள் உருகிக் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறைகின்றது.

நாடு முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது மனிதனின் சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. மனிதன் கடந்த காலக் காட்டு விலங்குகள் போல் செல்லப் போகின்றான்.

ஆகவே விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பின் விளைவுகளாக அழிவின் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
1.தன் நாட்டைக் காக்க என்று செய்த இந்த அறிவு
2.மனிதனுடைய சிந்தனையைச் சிதறச் செய்யும் சந்தர்ப்பமாக வந்துவிட்டது.

இதிலிருந்து மீட்ட அருள் ஞானி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெற்று ஆறாம் அறிவை... ஏழாவது நிலையாக "சப்தரிஷி" என்ற நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.