
இந்தப் பிள்ளை யார்…?
ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து
வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…?
என்பதை உணர வேண்டும்.
1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.
இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.
புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின்
உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில்
வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை
நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.
நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம்
எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.
உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.
உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”
நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை
அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று
அழைக்கின்றார்கள்.
அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே
வாழ்வோம்…”