ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2026

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்

துன்பத்தை நீக்கும் அருள் ஞான வித்துக்கள்


நாம் தவறு செய்யவில்லைஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம்… கேட்டுணர்கின்றோம், அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்..
 
இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் போது அடிக்கடி நம்மையறியாமலே வேதனையும் துயரமும் பயமும் நமக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.
 
இதை எப்படிப் போக்கிக் கொள்வது? எதாவது வழி இருக்கிறதா?
 
அதற்குத்தான் அந்த  ஞானிகள் சொன்ன உண்மையின் சக்தியை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே வருகின்றோம்.
 
யாம் மட்டுமல்லகூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் உங்கள் அருள் வாக்கும் சேர்க்கப்படும் போது தான் வலு கூடுகிறது என்று குருநாதர் கூறினார்.
 
உன்னிடம் எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தாலும் அதை வளர்க்க வேண்டிய முறை தெரிய வேண்டும் என்றார்.
 
காரணம்…
1.ஒரு விதையைக் கொண்டு போய் விதைத்து அது பல விதைகளாக விளைந்தால் தான் சாப்பாட்டிற்கு உதவும்.
2.இல்லையென்றால் ஒரு விதை ஒன்றுக்குமே உதவாது’’ என்று குருநாதர் எம்மிடம் கூறினார்.
 
ஒரு நெல்லை வைத்துக் கொண்டு பசியைப் போக்கிவிடுவேன் என்று சொன்னால் முடியுமோ முடியாது. ஒரு நெல்லை வைத்துச் சாப்பிட முடியாது. அந்த நெல்லை விளைய வைத்து அது பல நெல்லான பின் தான் சாப்பிட முடியும்.
 
அதே மாதிரித் தான் உங்களிடமுள்ள துன்பத்தையெல்லாம் போக்க வைக்கிறோம்.
1.‘நன்றாக இருக்கிறேன்நன்றாக இருக்கிறேன்நன்றாக இருக்கிறேன்…” என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
2.அவ்வாறான சொல் வரவேண்டும்.
3.உங்கள் பேச்சைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்களுக்கெல்லாம் நல்லது விளைய வேண்டும்.
4.அப்படித்தான் அங்கே நல்லதை விளைவிக்க முடியும்.
 
இதைத்தான் நமது குருநாதர் சொன்னார். ஆக ‘’அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்’’ என்ற எண்ணத்தை உனக்குள் வளர்த்து நல்ல வித்தினை அவர்களுக்குள் பதியச் செய்து அந்த வித்தினை நீ எப்படி வளர்க்க வேண்டும் என்று குருநாதர் சொன்னார். 
 
ஆகையினாலேதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்
2.உங்களுக்குள் மெய்வழி வளர வேண்டும்
3.உங்கள் பேச்சும், மூச்சும் பிறருக்கு நன்மை பயக்கும் சக்தியாகப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டியபடி யாம் தியானிக்கின்றோம்.
 
அவ்வாறு தியானித்து அந்த சக்தியின் நிலைகளை உங்களுக்கு உபதேசித்து உங்களுக்கு வித்தாகக் கொடுத்து அந்த எண்ணத்தை உங்களுக்குள் தூண்டச் செய்யும்போது நீங்கள் எல்லோ\ரும் பெற வேண்டும் என்று எண்ணும்போது முதலில் நான் பெறுகின்றேன்.
 
நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த எண்ணத்தின் நிலைகள் அங்கே வளர்கின்றது. இது தான் எமது குருநாதர் காட்டிய அந்த நிலை. 
 
ஆகவே இதை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். அந்த ஞானியரின் அருள் சக்தியை உங்களுக்குள் கிடைக்கச் செய்வதற்குத் தான் யாம் உங்களுக்கு இதைச் செய்தது.
 
நாம் த்தனை பேரும் சேர்ந்து
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களது வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
3.அனைவருக்கும் அந்தப் பேராற்றல் எளிதாகக் கிடைக்கின்றது.
 
இவ்வாறு எல்லோரும் சேர்ந்து செயல்படும் பொழுது உலகில் உள்ள மக்கள் அனைவரும் மெய் ஒளி பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது. 
 
இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் தைப் பின்பற்றினால்
1.பிறர் வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
2.உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகள் அது ஒடுங்கும்.
 
தீமைகள் அவ்வாறு ஒடுங்கி மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்தப் பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழ முடியும்.
 
இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச்சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.