ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2026

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்


பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.
 
மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
 
இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.
 
ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் க்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.
 
கஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.
 
உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.
 
ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான் அணுவாக மாற்றுகின்றான் அணுவின் லமாக உடல் ஆக்குகின்றான்.
 
ந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.
 
அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.
 
சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.
 
ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை ம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.
 
அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.
 
அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும் மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.
 
ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் செல்வோம் அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.