
தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்
விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை
உருவாக்குகின்றனர்.
உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த
உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.
அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க
அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின்
உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.
நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த
உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.
இதைப் போன்று
தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம்.
அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.
1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம்
புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்…
அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத
சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.
காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய
அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…”
ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.
விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள்
எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை
இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும்
பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.
இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி
சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.
ஜோதிடம்
ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை
வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ…
நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.
அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை
வைத்துச் சொல்லலாம்.
ஆனால் கஷ்டங்களையும்
குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை
வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.
இருந்தாலும்…
இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று
இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில்
அதைக் காட்டுகின்றார்கள்.
1.நாம்
வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது…
உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும்
அந்தச் சக்தி பெற வேண்டும்..
உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக
என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள்
வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள்
பகைமையாகாதபடி
3.துருவ
நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல்
வேண்டும்.
மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை
அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல்
வேண்டும்.
அதாவது
நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.