
எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்
தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.
தியானம் என்பதே உயர்ந்த
எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது
தான்.
நம்மிடம்
யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது
திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்…
என்னை இப்படிப் பேசினான்…! என்று
எண்ணுவது இது தியானம் தான்.
அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத்
திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.
காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய
வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை
ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.
நாம் எந்தெந்த
உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.
1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு
செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி
காட்டும்.
தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்…
திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை
விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.
நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே
குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.
ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை
நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த
வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.
உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த
மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும்.
உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள்
உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட
வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.
கேட்டுணர்ந்தோர்
அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க
வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர
வேண்டும்.
1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.