ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2026

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்


யாம் சொன்ன ஆத்ம சுத்தியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி எடுத்து உங்களுக்குள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) மாற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி முடியும்.
2.குறைபாடுகள் வந்தால் அது இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் மன வலிமையும் வரும்.
 
உங்கள் அனுபவத்தில் பெறலாம்.
 
இதை ஏன் சொல்கிறோம் என்றால் உலக நடப்புகளை இன்று டி.வி. வாயிலாகவோ மற்ற வேறு வகைகளிலோ பார்த்தாலும் அல்லது காதிலே கேட்க நேர்ந்தாலும் அது அனைத்தும் “நம் கண்களுக்குத் தான் வருகின்றது…”
 
காற்றிலிருக்கக்கூடிய அலைகளை ஆண்டனாக்கள் எப்படிக் கவர்கின்றதோ அதைப் போன்று தான்
1.இன்றைய உலக நடப்புகளையும் நமது கண் ஆண்டனா போன்று கவர்ந்து நம் ஆன்மாவாக்கிச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.அது உயிரின் காந்தத்தால் கவரப்பட்டு உயிரிலே பட்டு உடல் முழுவதும் பரவச் செய்கிறது.
 
ஆண்டனா கவரும் அலைகளை டி.வி. கவர்ந்து டி.வி.க்குள் நுழைந்த பின் அதற்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் (PARTS) இயக்கி எப்படிப் படமாகச் சப்தமாகக் காட்டுகின்றதோ அதே போல நம் உடல் உறுப்புகளிலும் அத்தகைய உணர்ச்சிகள் ஊட்டப்பட்டு நாம் பார்த்ததைச் செய்ல்படுத்தத் தொடங்கி விடுகிறது.
 
இதை உடனுக்குடன் நாம் மாற்ற வேண்டும். அதை எப்படியும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் நினைவுபடுத்தித் தியான பயிற்சியா உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
 
1.என் குரு அந்தச் சக்தியைப் பெறச் செய்தார்.
2.காரணம் நல்லவர்களுக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றது.
3.நல்லவர்களைக் காக்க வேண்டுமல்லவா…!
 
ஆகவே உலக நடப்புகளைக் கேட்க நேர்ந்தால் நமக்குள் எத்தனையோ பதட்டமும் பயமும் வருகின்றது. தியானம் இருந்தேன்…” என்று சொன்னாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வருவதை உடனுக்குடன் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.அது உமிழ் நீராக மாறி உடலுக்குள்ளும் சேருகின்றது. எலும்புக்குள் பதிவும் அதிகமாகி விடுகிறது.
2.அதற்குப் பின் உடல் நோயாகவோ மன நோயாகவோ மாறுகிறது.
 
ஆகவே உலக நடப்புகளைக் கேட்டாலும் அதனை உடனே நமக்குள் மாற்றிப் பழக வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றிய குறிப்புகளை…” அதிகமாக நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
 
மற்ற உணர்வுகள் பதிவாகாதபடி… அது உமிழ் நீராக உடலுக்குள் செல்லாதபடி மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
 
ஆத்ம சுத்தியின் முக்கியமான மூலக்கூறு இது தான்…!