ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2022

மூலமும் இவனே… மூலக் காரணமும் இவனே…!

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் - செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

July 13, 2022

உயிரான “ஈசன்...” நமக்குள் இருக்கின்றான் என்ற பயம் நமக்கு வர வேண்டும்

என் இசையில் நீ இசைப்பாய்... என் நினைவில் நீ வருவாய்... உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.

அதனின் உட்பொருளே...
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ...
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ...
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்...
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.

ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உயிரால் இயக்கப்பட்ட நிலையும்... உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்... மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்...” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்... என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா...! என்று உயிரே வேண்டுகிறோம்.

ஆனாலும்... அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்...” என்ற நிலை மறந்துவிடுகின்றது.

வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர...” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.

ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று... உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

உயிர் எவ்வாறோ... நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்

தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது...
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்...? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்...”

கண்களுக்கு நாம் கூட்ட வேண்டிய உயர்ந்த சக்திகள்

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது - “கற்பனையில்...!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக... அந்தப் படமாக... ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக - செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்... உடலில் உணரும் உணர்வுகள்...)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை... கனவு... வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்... ஆத்ம உயிரில்...
1.ஒலி... ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி...!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் ஆன்மாவின் விழிப்பு என்ற அந்தக் கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும். அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

July 12, 2022

“அழியும் சொத்தைச் சேமிப்பதற்காக...” நாம் மன உறுதியைக் கொண்டு வர வேண்டியதில்லை

அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்... மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.

அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.

கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்... அதை நுகருங்கள்...”
2.நுகர்ந்த உணர்வை... அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ... என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.

உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.

அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது... நஞ்சினை நீக்கி... இருளை அகற்றி... மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக... உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.

ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது... அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக... மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ...” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.

1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.

“டக்... என்று அந்த ஞாபகம் வரும்... நோய் வராது தடுக்க முடியும்

இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாககச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த உணர்வுகள் மாறும். ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்... வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

செவிகளில் கேட்கின்றீர்கள்... கூர்ந்து கவனிக்கின்றீர்கள்... நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.

உதாரணமாக...
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது... உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ...நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ...? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ...? மின்னலைப் போல மறைவதைப் பாராய்...! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்... அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்...
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா...? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்... சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா...? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா... “இல்லை...”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்...?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை... உணர்வுகள் கருகுகின்றது.

எதிலும் அழியாத உயிரை... அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.

“சரீரத்தையே நான்...!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதால்தான் கடைசியில் இறப்பை எய்துகிறோம்

இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியால் பூமி எதை எதை எடுத்து வளர்க்கின்றதோ அந்தத் தொடரின் அமிலக் கலவையின் உயர்ந்த வீரியம் கொண்ட உயிர் நிலை தான் மனிதச் சரீரம் எடுக்கும் உண்மை நிலை.

பூமியின் இயற்கைத் தன்மையிலேயே அறிவின் ஆற்றலைச் செயலாக்கும் திறன் கொண்ட
1.மனித நிலையில் ஜீவித சரீர ஓட்டத்தில்
2.எந்தச் சுவையின் உணவு முறையில் மனிதன் உண்டு வாழ்கின்றானோ
3.அந்த அமிலம் மட்டுமல்லாமல் இந்தப் பூமியிலுள்ள கனி வள அமிலத் தன்மையின் குணமும் மனிதச் சரீரத்தில் உண்டு.

மனிதன் தான் எடுக்கும் சுவாசத்தின் உணர்வால் இந்தப் பிறப்பின் தொடர் வாழ்க்கையில்
1.பிறப்பு... இறப்பு...! என்ற இயற்கையின் கதியில் உட்பட்டு
2.அதையே நியாயப்படுத்தி வாழ்கின்றானே தவிர
3.மனிதனுக்குள் மறைந்துள்ள “நான் என்பது யார்…?” என்ற நிலையை மனிதன் உணரவில்லை.
4.பிறப்பையும் இறப்பையும் ஏற்றுக் கொண்ட நிலை தான் உள்ளது
5.எங்கிருந்து வந்தோம்... எங்கே செல்ல வேண்டும்... ஏன்... எதற்காக.. எப்படி...? என்று அறியும் நிலை இல்லை.

ஆனால் கோள்களில் செயல்படும் எண்ணிலடங்காத தெய்வ சக்திகளின் சூட்சமத்தின் சூட்சமமே “மனித உயிரும்...!”

மனித உயிரின் ஜீவித உடலின் உயிர் அணுக்கள் தான் உயிர்ப்பித்து உணர்வு கொண்ட சுவாச கதியில் செயல் கொண்ட அமில உயிர்ப்புத் தன்மைகள் அதனுடைய கதியின் நிலைக்கொப்பத்தான் வாழ்க்கையின் எண்ண உணர்வு நிலையின் செயலின் கதி ஓட்டம் இன்று மனிதன் வாழும் நிலை.

(அதாவது உயிரால் ஜீவன் பெறும் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்துமே அந்த உயிரின் தொடர்பால் தான் சுவாசிக்கும் நிலையே பெறுகிறது. அப்படி வெளியிலிருந்து உடலுக்குள் வரும் பல சக்திகள் அது எந்த எந்த உணர்வு கொண்டு வந்ததோ அதற்கு ஒப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயங்கி நம் வாழ்க்கையே அமைகிறது)

இந்த உலகில் கலந்துள்ள அமிலத்தின் அனைத்துத் தொடர்புகளும் மனித உயிரின் சூட்சமத்தில் அடங்கியுள்ளது. அது எல்லாவற்றையும் பெறும் தகுதியும் உண்டு.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்...!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்...!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது...
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
(2.வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

இந்தப் பூமியில் சில மகான்களின் தத்துவம் எப்படி வளர்ந்தது…?

நம்முடைய உணர்வின் எண்ணம் எதை எண்ணிச் செயல்படுகின்றதோ அதற்கொப்ப குண அமிலங்கள் உடலுக்குள் வந்து சேர்கின்றது. அத்தகைய உயிர் அணுக்களுக்குள் எது பதிவாகியுள்ளதோ அந்தப் பதிவின் தொடர் அலை ஜீவித வாழ்க்கை தான் மனிதனின் வாழ்க்கை.
1.அதன் தொடரில் எண்ணும் எண்ணமே தான்
2.நம்முடைய ஆத்மாவில் பதிவாகி
3.நம் ஆத்ம தொடரின் வளர்ப்பும் செழிப்பும்.
(உடலில் உள்ள உயிரணுக்களின் நிலையும் நமக்குச் சொந்தமான உயிரணுவின் நிலையும் இங்கே பிரித்துக் காட்டப்பட்டுள்ளது)

இந்த நிலையில் இருந்து தான் மனிதனில் சிலருக்கு அபூர்வமான உண்மைத் தன்மைகளை உணரும் நிலை ஏற்பட்டது.

இந்தக் கலியிலேயே பிறப்பால் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒரு சிறுவன் தன் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் தெய்வ குணத்தின்பால் “கிருஷ்ணர்... இராமர்...!” என்ற தன் எண்ணத்தில் ஈர்க்கப்படுகின்றான்.

அதன் தொடர்பால் அந்தச் சிறுவனின் எண்ணம் சர்வ சதா காலமும் கிருஷ்ணனின் நாமத்தைத் தெய்வ குணமாக எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

அப்பொழுது விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் சக்தி ஒளி அந்தச் சிறுவனின் மேல் பட அந்தச் சிறுவனில் இருந்த இருள் அகலுகின்றது.
1.அந்த மகரிஷிகளின் ஒளி சக்தியால்
2.சிறுவனின் ஆத்மா மங்காத நட்சத்திர ஒளியைப் பெற முடிந்தது. (பாலயோகீஸ்வரர்)

எதைத் தொடர்ந்து எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வே தான் ஆன்மா.
1.அந்த ஆத்மாவின் விதி கொண்டு தான் நற்கதியும் துர்க்கதியும்.
2.நற்கதியின் எண்ணத்தை மதி நுட்பமுடன் எண்ணும் பொழுது ஆத்மா நிச்சயம் ஒளித் தன்மையில் பிரகாசிக்கும்.

மனிதன் “நான் என்பது யார்..?” என்பதை உணரக்கூடிய நிலையில் மெய் ஞானத்தில்
1.மகரிஷியாகக் கூடிய உயிர் தான் தன்னுயிரும் என்பதை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து அந்த நிலையை எய்த முடியும்.

July 11, 2022

துருவ (நட்சத்திர) தியானத்தை லேசாக நினைத்து விடாதீர்கள்

1.உயிரணு தோன்றி... மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்...
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.

துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.

நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்... நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.

1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி...” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு... அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.

மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.

காரணம்... அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு... உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு...
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை...!

ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.

ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்...? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்... ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது

காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக...”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.

உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி... இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.

1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.

ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

அதை லேசாக நினைத்து விடாதீர்கள்...!

உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் நாம் பிறப்பு எடுக்கவில்லை

இந்தப் பூமியின் இயற்கைக் கதியுடன் வளர்ந்த பலா மரம் அது வளர்ந்து பலன் தருகிறது. அதனுடைய பலனாக ஒவ்வொரு தருணத்திலும் காய்த்துப் பல ஆண்டுகள் அந்த மரத்தினுடைய பலனை வெளிப்படுத்தியபின் அந்த மரம் பட்டு விடுகின்றது.

1.அந்த மரத்தின் பலனான பலாப் பழத்தின் சுவை பக்குவப்படும் நாள் இரண்டு தினங்களே (அறுத்த பின்)
2.அதனுடைய மணமும் சுவையும் அந்த இரண்டு தினங்களுக்குத் தான்...!
3.அந்த நேரத்தில் அந்தக் கனியை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்கின்றான்.

இரண்டு தினங்களுக்கு மேல் அப்படியே வைத்திருந்தால் அழுகிய துர்நாற்றமும் ஈ கொசு எறும்பு போன்ற பூச்சிகள் மொய்க்கத் தொடங்குகிறது. அதற்குப் பிற்பட்ட நாளில் அந்தக் கனியிலேயே புழுக்கள் புழுத்து விடுகின்றது.

பலாக் கனியின் பயனை இரண்டு நாளில் சுவையாக மனிதன் உட்கொள்கின்றான். அதே சமயத்தில் அந்த இரண்டு நாளிலேயே அதனைத் தன் உணவுக்காகப் பல நாட்கள் கெடாமல் பக்குவப்படுத்தும் வழியையும் மனிதன் செய்து கொள்கின்றான்.

பலா மரத்தின் கனியின் சுவையைச் சுவைப்பதற்காக மனிதன் அதனை மீண்டும் மீண்டும் பயிர் செய்கின்றான். மனித இனத்தின் உணவின் பெருக்கத்திற்கு வித்தாக்கி வளர்க்கின்றான்.

மனிதனின் பக்குவத்தால் பலா மரத்தின் வளர்ச்சியின் விகிதங்கள் பூமியின் இயற்கையில் கூடுகின்றது. ஏனென்றால் பலா மரம் தானாக வளரக்கூடிய நிலை அதிகம் இல்லை.

1.மனிதனின் செயல்பாட்டினால் பூமியின் இயக்கத்தில் தாவரத்தின் இனப் பெருக்கத்தை வளர்த்துக் கொள்வது போல்
2.உலோகக் கனி வளங்களின் வளர்ச்சியை மனிதனின் செயலால் இந்தப் பூமியின் இயக்கத்தில் வளர்க்க முடியவில்லை.

அதே போல் பூமியின் ஜீவ ஜெந்துக்களின் இன விருத்தியையும் நீர் நிலைகளில் வளரும் முத்துக்கள் போன்ற சில இனங்களையும் மனிதனின் செயல்பாட்டால் வளர்க்க முடிகின்றது.

1.பூமியில் உருவாகும் அனைத்துத் தனிமங்களையும் வெட்டி எடுத்துப் பயன்படுத்தும் மனிதனால்
2.அந்த உலோகத் தன்மையைத் தன்னுடைய செயலால் வளர்க்க முடியவில்லை விளைய வைக்கவும் முடியவில்லை.
3.ஆனால் இந்தப் பூமியின் ஜீவ நாடியே பூமிக்குள் விளையும் உலோகங்கள் தான்...!
(அதை விஞ்ஞானிகள் இது வரை உணரவில்லை)

ஆக இன்றைய மனிதனுடைய திறமை உயிரினங்களையும் தாவரங்களையும் தனக்கு உணவாக்கிக் கொள்ளும் தேவைக்காகச் செயல்பட்டு
1.அதனுடைய பெருக்கத்தின் வளர்ச்சிக்காகத்தான்
2.இன்றைய மனிதனின் ஞானச் செயலும் விஞ்ஞானமும் இந்தப் பூமியில் வளர்த்து வாழ்கின்றது.

இந்தப் பூமியின் ஜீவ நாடியான உலோகத்தை அழித்து வாழும் மனிதனின் ஞானம் அந்த உலோகத்தின் பெருக்கத்தை வளர்க்கும்
1.மெய் அறிவை மெய் ஞானத்தில் கூட்டினான் என்றால்
2.இந்தப் பூமியையே ஆட்சி செலுத்தும் “உயர் ஞானியாக” ஆகலாம்.

உலோகத்தின் சத்தைக் கொண்டு தான் இயற்கையின் கதியை இந்தப் பூமியின் பெருக்கத்தின் ஜீவ நாடியாக்க முடியும் என்பதனை மனிதனின் மெய் அறிவு இனிமேலாவது விழிப்படைதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதன் என்பவன் உண்டு உறங்கிக் கழிக்க மட்டும் இந்தப் பூமியில் பிறப்பு எடுக்கவில்லை. ஞானத்தின் பகுத்தறிவை மெய்யின் விழிப்படைந்து மனிதன் இந்தப் பூமியின் இயக்கத்தின் செயல் சூட்சமத்தில் சுழல வேண்டும்.

சூரியனும் பல கோள்களும் இந்தப் பூமியின் தொடர்புடன் சுழலும் பொழுது இந்தப் பூமியின் இயக்கத்தின் கதியில் வாழும் மனிதன் “இந்த மெய்யை அறிதல் வேண்டும்...!”

July 10, 2022

உங்களுக்கு நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?

இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.

இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?

எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.

“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் ஆக்கினைக்கு நீ இங்கே தொடு என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.

இது அல்ல…!

நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அது எப்படி உருவானது என்ற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.

நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்...!

ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.

மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.

இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது. அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.

“ஆக்கினை…” என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிளே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.

மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.

1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.

ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் நம் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்

1.இந்தப் பூமியின் சமைப்பு அமிலத்தின் முதிர்வு நிலையின் முலாம் தன்மை தான்
2.மனித உடலின் அமிலக்கூறின் வார்ப்பு நிலை.
(பூமியின் முதிர்ந்த வளர்ப்பு தான் மனிதன்)

பூமிக்கு அடியில் உருவாகும் உலோகத் தன்மையில் முதிர்வு நிலை வளர வளர பூமியின் முதிர்வின் வலுத் தன்மை கூடுவதைக் காண்கின்றோம். (உலோகத்தின் வளர்ச்சியில் பூமி அடுத்து நட்சத்திரமாகிப் பின் சூரியானாக வளர்ச்சி பெறும்.)

தாவர இனங்களின் வளர்ச்சியில் காய்களாக உருவாகும் பொழுது அந்தப் பிஞ்சு முற்றிப் பழமாகிப் பழுத்து விடுகின்றது. அதற்கடுத்த நிலையாக அதனுடைய கொட்டை மீண்டும் ஒரு வித்தாகப் பயிருக்கு வருகின்றது.

ஆனால் உலோக வளர்ச்சியில் பல மாறுபாடு கொண்டு அதனுடைய வளர்ச்சி முதிர்வின் நிலை பெறுகின்றது. முதிர்வு நிலை பெற்ற உலோகம் தான் செயலுக்கு வருகின்றது.

இந்தப் பூமியின் இயற்கை வளத்தை ஒட்டிய உயிர் அணுக்களின் வளர்ச்சி யாவும் உலோகப் படிவத்திலும் தாவர இன வளர்ச்சியிலும் மாறி மாறி வளர்கிறது. பல உருவங்களாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அப்படி உயிர் பெறும் அத்தகைய ஜீவ ஜெந்துக்களின் உயிராத்மாவின் பரிமாணம்
1.வலு கொண்ட மனித உருவத்திற்கு வரவும்
2.அதிலே ஞானத்தின் ஒலியை எடுக்கும் செயலாக உருவத்திற்கு வரவும் பல கோடி ஆண்டுகள் ஆகின்றன.

அப்படி வளர்ந்து வந்த மனிதன் ஞானத்தின் முதிர்வு நிலை பெற்றுத் தன் ஆத்மாவின் வலுவின் ஒளியை விழிப்பு நிலைக்கு (ஒளிச் சரீரமாக) வித்தாக ஆக்கவில்லை என்றால் என்ன ஆகும்...?

ஆரம்பத்தில் பூமியில் இருக்கும் முலாம் தன்மையில் (தாவரத்திலும் உலோகத்திலும்) உயர் நிலை பெற்ற வலுவை... அந்த வலுவை வளர்த்த தொடர்ச்சியைப் போல்
1.மீண்டும் மிருக இனத்திற்கும்
2.மற்ற ஜீவ ஜெந்துக்களின் இன நிலைக்கும்
3.புழு பூச்சியாகத் தாவர இனம் மற்ற உலோக நிலைக்கும்
4.பூமியின் சுழற்சி வட்டத்தில் பல கோடி ஆண்டுகளுக்குச் சுழலும் நிலை தான் ஏற்படும்.
(பல கோடி ஆண்டுகளில் வளர்ந்து மனிதனான நாம் மீண்டும் தேய்பிறையாகிக் கீழே போய் விடுவோம்)

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை... அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்...” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்...
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு...” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா...! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

தாய் தந்தையரிடம் எத்தனை பேர் நாம் அருள் ஆசி வாங்குகின்றோம்...?

மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்... தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்...
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.

கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த... பாம்பாக இருந்த நம்மை... மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்...?

நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்...! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா...?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்...
2.உண்மையை உணர்தல் வேண்டும்.

பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்... ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று...!

ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.

சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்... தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்... டேய்... நெருப்புடா...! என்று நம்மைப் பாதுகாக்கின்றது... அந்தத் தெய்வமாக இருக்கின்றது.

இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்...?

நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்...?

1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்... எனக்கு நல்லது நடக்க வேண்டும்...! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.

அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,

எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி...
2.அம்மா... எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

உதாரணமாக... காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா...! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது...?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.

போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ...” என்று சத்தம் போடுவேன்.

அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்...! உன் அம்மா எங்கேடா போனது...?
2.உன் அம்மாவை நினைடா...! என்பார்.

நினைத்து நான் அம்மா... என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.

நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.

July 9, 2022

ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்... அழியாத வாழ்க்கை வாழ முடியும்

நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.

உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.

உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.

சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.

ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.

1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?

சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா
1.இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்
2.தன் ஆசை நிலைக்கொப்ப...!
3.அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை...! (சுழன்று கொண்டிருக்கும்)

உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலை உள்ளது. அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?

உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்...!”

ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்...” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும்
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக... ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமாசித்தின் சக்தியைப் பெற முடியும்.

July 8, 2022

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது...?

நம் உடலில் இருக்கும் 1008 குணங்கள் அது மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? ஒவ்வொரு குணமும் அது எப்படி உருவானது…? என்றும் ஆலயங்களிலே காட்டப்பட்டுள்ளது.

பத்து உணர்வுகள் சேர்த்து ஒரு தெய்வ குணத்தைப் பெறுகின்றது. கோவில்களில் “10 நாள் விழா...” என்று கொண்டாடுவார்கள்... மாடு வாகனம் காளை வாகனம் சர்ப்ப வாகனம் அன்ன வாகனம் என்றெல்லாம் சொல்வார்கள்.

இந்த உடலிலே ஒன்றுக்குள் ஒன்று விழுங்கித் தான் ஒரு குணத்தின் தன்மை உருவானது... அந்தத் தெய்வ குணமாக ஆனது. மனிதனாகும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வைத் தனக்குள் உருவாக்கும் சக்தி பெற்றது என்று தான் இங்கே வருகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர்கள் என்றும் பஞ்ச பாண்டவர் ஐந்து என்று வந்தாலும்...
1.அரச நிலைகள் கொண்டு கௌரவர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த வலிமை கொண்டு
2.நல்லதை எண்ணினால் அதை விடாதபடி செய்கிறார்கள்.

எல்லாம் கெட்டவர்களாக இருக்கின்றார்கள்.. ஆசைப்பட்டுத் தனக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நமது உயிர் திரௌபதையாக இருக்கின்றது. ஐந்து புலனறிவு கொண்டு நாம் நுகர்கின்றோம்.
1.தீமைகளை நீக்கிடும் உணர்வை எண்ணி எடுத்து அதை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.கௌரவர்கள் தனக்கு இடைஞ்சலாகிவிடும் என்று உள்ளே புகாதபடி தடுக்கும் போது இந்தப் போர் முறைகள் வருகிறது என்று
3.மகாபாரதத்தில் இப்படித் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்... நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா...?

மகாபாரதப் போர் என்றால் அதை எப்படி எப்படியோ காட்டி விட்டார்கள்...!

கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் அதாவது
1.ஐந்து புலனறிவு கொண்டு ஒரு உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கும்
2.இந்த உடலில் உள்ளுக்குள் (ஏற்கனவே) வளர்த்ததற்கும் இதற்கும் எதிர்மறையாகின்றது.

கோபமான குணங்களை எடுத்துக் கொண்ட பின் அடுத்து ஒரு சாந்தமான நிலைகளை நாம் எண்ணினால் அது விடுகின்றதா...? இல்லை. அந்த உணர்வை விடாதபடி எதிர்த்து நின்று போர் செய்து அதைத் தொலைத்து விடுகின்றது.

ஆகவே நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ இந்தக் கண்கள் அதற்கு உதவி செய்தாலும் அடுத்து இந்தக் கண்கள் அதை எப்படி மாற்றி அமைக்கின்றது...? என்ற நிலையைக் இங்கே காட்டுகின்றார்கள்.

மகாபாரதப் போரைப் பற்றி இன்று எழுதி வைத்திருக்கும் வித்தியாசங்களைப் பார்த்தோம் என்றால் அதிலே திசை திருப்பிய நிலைகளைப் பார்க்கலாம்.

அகஸ்தியன் கண்ட உணர்வைத் தான் வியாசகன் அறிந்து இத்தனை நிலைகளையும் அவன் வெளிப்படுத்தி உள்ளான்.

மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

இடி மின்னலைப் போன்றே நமக்குள் ஏற்படும் இன்னல்களை எல்லாம் பேரொளியாக்க வேண்டும்

மறை பொருளே உறைப்பொருள்
உறை பொருளே வினைப்பொருள்
வினைப் பொருளே விளைப்பொருள்
விளைப் பொருளே மெய்ப்பொருள்

1.விளைப் பொருளின் வளர்ச்சியின் ஆக்கம் தான் ஒவ்வொன்றிலும் வலுத் தன்மையாகி
2.மெய் ஞானம்… மெய்ப் பொருளாக… மெய் ஒளி ஒலி… செயல் சக்தியாகக் கூடுகிறது.

மனித உணர்வில் எண்ணியவுடன் (READYMADE) ஏற்படுவதல்ல அந்த விளைப்பொருளும் மெய்ப் பொருளும். அப்படியானால் அந்த மெய் ஒளி… மெய் ஒலி… மறைப் பொருள்… உறைப் பொருள்… இதெல்லாம் எப்படி உருவாகின்றது...?

இந்தப் பூமியின் சுழற்சி தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டே உள்ளது. பூமியின் எட்டுத் திசைகளில் அந்தந்த இடங்களில் ஒன்று போல் சீதோஷ்ண நிலையும் கால நிலையும் இருப்பதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனாலும் பூமி எப்படி மறைப்பொருளை (தனக்குக் கிடைக்கும் ஆற்றலைச் சமமாக்கும் நிலையாக) தன்னுடைய சக்தியின் ஈர்ப்பிற்குப் பல மாற்றங்களில் விளைப் பொருளாக ஒளியையும் ஒலியையும் எடுத்துத் தன் ஓட்டத்தின் கதியில் ஓடிக் கொண்டேயுள்ளதோ அதைப் போன்று தான்
1.உணர்வு கொண்ட எண்ணத்தின் கதி ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள சுழற்சியில்
2.நம் சரீர உடலின் நிலையும் உள்ளது.

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.
7.பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

பூமியின் சுழற்சியின் கதியில் ஒவ்வொரு நாளும் நாம் வானத்தில் கண் கொண்டு பார்க்கும் பொழுது எண்ணிலடங்காத எத்தனையோ பிரபஞ்சங்களையும் மண்டலங்களையும் காணுகின்றோம்

அந்தப் பால்வெளி மண்டலத்தில் பலவாக படர்ந்துள்ள பரம்பொருளின் செயல் என்பது
1.ஆதி சக்தியின் சூட்சமமாக
2.சூனிய மண்டலமாகப் பலவும் நிறைந்துள்ள செயலின்
3.செயல்பாடில்லா - சூனியமான நிலை தான் பால்வெளியின் நிலை.

அந்தப் பரம்பொருளின் சக்தியைத் தான் மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

July 7, 2022

தியானத்தில் சக்தி பெறும் நிலையில் பாம்பின் காட்சி தெரிவது ஏன்...?

தியானம் செய்யும் போது தன் உடலுக்குள் பாம்புகள் செல்வதாகக் காட்சிகள் தெரிய வருகின்றது. இதனின் விளக்கம் என்ன...? என்று பார்ப்போம்.

1.சாதாரணமாக நம் உடலுக்குள் பல விதமான விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது...
2.அது ஊடுருவப்படும்போது அதை எல்லாம் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.

நாகனின் (பாம்பு) உடலில் பல விஷத்தின் தன்மைகள் அதற்குள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத்தன்மைகள் நமக்குள் சென்றாலும் நம் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அங்கே காட்சியாகத் தெரிந்தது

அகண்ட அண்டத்தில் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் விஷம் இல்லாது உணர்வின் இயக்கம் எங்கும் கிடையாது.

பல விதமான விஷங்கள் கூடி நாகரத்தினமாக எப்படி மாறியதோ நமக்குள் பேரருள் என்ற உணர்வினைச் சேர்த்து அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து நாம் நுகரும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலைகளுகளைத் தான் பாம்பினங்களாகக் காட்சியாகக் காண முடிந்தது.

உருவ அமைப்பிலே பாம்பு என்றாலும் அதன் உணர்வின் சக்தி விஷம் என்பதை உணர்த்துவதற்குத் தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

நமது சாஸ்திரங்களில் கூர்மை அவதாரம் என்பதை ஆமையைப் போட்டுக் காட்டுகின்றார்கள். அதே போல் பன்றியைப் போட்டு வராக அவதாரம் என்றும் காட்டுகின்றார்கள்.

1.எந்தெந்த உணர்வுகளைக் கூர்மையாகப் பார்க்கின்றோமோ
2.அதன் உணர்வுகள் தீமைகளிலிருந்து தப்பிடும் உணர்வுகளாக வளர்ச்சி அடைந்து அடைந்து
3.அதற்குத்தக்க பரிணாம வளர்ச்சியாக அடைந்து வந்தோம் என்பதைக் கூர்மை அவதாரத்தில் காட்டியுள்ளார்கள்.

அதே போல் கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமை என்ற உணர்வுகளை நீக்கிடும் சக்தி பெற்றது பன்றி என்றும் தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்திருக்கக்கூடிய நறுமணங்களை நுகர்கின்றது என்பதை உணர்த்துவதற்கு வராக அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.

ஆகவே மனித வாழ்க்கையில்... காலையிலிருந்து இரவு வரை நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்குள் தீமை என்ற உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மையைக் காட்டுவதற்குத் தான் அத்தகைய காட்சிகள் கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். ஆனால் நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் நாம் அதை மாற்றி அமைத்து உயிருடன் ஒன்று ஒளியான நிலைகள் பெற முடியும்.

காட்சிகளுக்கு உண்டான உண்மை நிலைகளை இங்கே விளக்கம் கூறிய பின்... அடுத்தடுத்து உங்களுக்குக் காட்சிகள் வரும் போது
1.அந்த உண்மையின் உணர்வை அறிய நீங்கள் மீண்டும் எண்ணத்தைச் செலுத்தினால்
2.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து நுகர்ந்த உணர்வுகள் எது...? என்பதை அறிய முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுதும் அதை உங்களால் உணர முடியும்.

இந்த உடலுக்குப் பின்...
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று என்றும் பிரகாசமான ஒளியாக
2.எந்தத் தீமையும் நமக்குள் புகாது இருள் சூழா நிலைகள் கொண்டு பாதுகாக்கும் சக்தியாகப் பெற முடியும்.

இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடிய சக்தியாக வளரும். எல்லோரும் அருள் ஞானம் பெறும் நிலைகளுக்கு வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் (ஞானகுரு).

மனிதன் உயர்ந்த நிலை பெறக் காட்டப்பட்ட அஷ்டமி.. நவமியின் உண்மை நிலைகளை மறைத்துவிட்டார்கள்

நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.

அந்த வினைச் செயலின் பதிவு நிலை எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் வான இயலின் தத்துவத்தை அறிந்து கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.

தனக்குப் பின் வந்த தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்...!”

இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி... நவமி...” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது...! என்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே... நவ ஜோதியின் தத்துவமப்பா...!”

ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம்… கெட்ட நேரம்… என்பது இல்லையப்பா...!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது...! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர்.

ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவிஇயலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை... அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

இராசிகள் என்று கூறுகின்றோம். அதன் பொருள் என்ன...?

நாம் பார்க்கும் பால்வெளி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் சுழன்று ஓடுகிறது. அதைப் போல மற்ற சூரியக் குடும்பங்களும் அதிலே சுழல்கிறது. 2000, 1000 என்று குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

நம் சூரியக் குடும்பத்தின் ஓட்டத்தின் கதியில் நம் சூரியக் குடும்பத்தைப் போல் சுழலும் மற்ற குடும்பத்தின் சந்திப்பாக ஒன்றுடன் ஒன்று கலவையாகி அதிலே உயிரணுக்கள் உதித்திடும் தன்மையாக அத்தகைய குணங்களைப் 12 இராசிகள் என்று கூறினார்கள் ஞானிகள்.

பூமியில் பிறப்புக்கு வரும் உயிரணுக்கள் ஜீவாத்மாவாகி (உடல் பெற்று) தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில்
1.விண்ணின் ஆற்றல்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொண்டு
2.பரமாத்மாவாக ஆகும் தத்துவத்தில்
3.சுயப் பிரகாச ஜோதியாக ஆவதின் மூலமே நவஜோதி.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

தெய்வ குணத்தைப் பெறுவோம்... தெய்வ சக்திகளை வளர்ப்போம்.

July 6, 2022

அருளைத் தேடினால் தேவையான பொருள் தானாக வரும்... பொருளைத் தேடினால் வேதனை தான் வரும்

நம் பிரபஞ்சத்தில் உள்ள செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் “சிவப்பு நிறமாகவும்” புதன் கோளை எடுத்துக் கொண்டால் “மஞ்சள் நிறமாகவும்” இருக்கின்றது.

பல நட்சத்திரங்களுடைய கலவைகள் இதனுடன் (புதன் கோளில்) சேர்க்கப்படும் பொழுது உலோகத் தன்மை கொண்ட எத்தனையோ வகையான நிலையில் அது மாற்றிக் கொண்டிருக்கின்றது.

வியாழன் கோளை எடுத்துக் கொண்டால்...
1.நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் சக்திகளைத் தனக்குள் அடக்கி
2.ஒரு பொருளுக்குள் ஊடுருவி அதிலே இணைக்கும் சக்தியைக் கொடுக்கின்றது.

அதிலே வெளிப்படும் ஆவி தன்மைகள் மேகங்களாக மாறுவதைச் சனிக் கோள் தனக்குள் எடுத்து நீராக எப்படி மாற்றிக் கொள்கின்றது...? என்று இப்படி இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபக்கோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மைகள் கொண்டது. எட்டுக் கோள் 10 கோள் 12 கோள் என்று துணைக்கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 24 உபக்கோள்கள் உண்டு. அந்த 24 கோள்களும்
1.27 நட்சத்திரத்தின் சக்திகளை இது கவர்ந்து எடுத்துப் பல பல கலவைகளாகச் சேர்த்துக் கொள்கின்றது.
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகள் வரும்.
3.அதிலே ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்.. இன்னொன்று மறு பக்கம் சுற்றும்.

இன்றும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்குச் சிரமப்படுகின்றனர் அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகின்றதா...! என்ன...? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டே உள்ளார்கள்.

24 கோள்கள் அங்கே சுழன்று கொண்டிருக்கின்றது 27 நட்சத்திரங்களின் உணர்வுகளைக் கவரந்து இதற்குள் ஒரு மிக்சர் ஆகி இந்த உணர்வின் தன்மை “புது விதமான கதிரியக்கமாக” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தனக்குள் உறை பனியாக மாற்றுகின்றதோ வியாழன் கோளும் இதே போன்று உறை பனியாக மாற்றிக் கொள்ளும் செயல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால்
1.எதிர்காலத்தில் இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் அறிய வேண்டும்
2.நான் மட்டுமல்ல... இந்த உண்மைகளை உணர்ந்து நீங்களும் தெளிந்து தெரிந்து
3.இந்த உலகின் இருளை மாய்க்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் பேரழிவு வருகிறது அதிலிருந்து நீங்களும் மீள வேண்டும்... மற்றவர்களையும் மீட்க வேண்டும். “பிறவி இல்லை” என்ற நிலையை நீங்கள் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

இந்த உடலில் இருக்கும் வரை “எந்த நிலையில் இருந்தாலும்” கோடி செல்வங்கள் வைத்திருப்பினும் அந்த செல்வம் நமக்கு உறுதுணையாக இருப்பது இல்லை.

1.உடல் நலம் சரியில்லை என்றால்
2.அந்த செல்வத்தைக் கொண்டு வந்து முன்னாடி வைத்தாலே நமக்கு வெறுப்பு தான் வரும்.

சொத்திலே பாகங்கள் பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் வெறுப்பான உணர்வுகள் வரப்படும் போது அதனால் நோயின் தன்மை ஆகும்பொழுது
1.இதனால் தான் எனக்கு பகைமை ஆனது இதனால் தான் நோயானது என்று
2.பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு வரும்... இந்தக் கிரகத்திலேயே நான் முழிக்க வேண்டாம் என்று வரும்

ஆகவே பொருளைப் பற்றி எண்ணாதபடி அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால் பொருள் மேல் ஆசை வராது.

பொருள் மீது ஆசை இல்லாதபடி அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஆசையை வளர்த்தால் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாது அந்த அருள் சக்திகளை எடுக்கப்படும் போது மனது நிம்மதியாக இருக்கும்.
1.இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவையான
2.போதுமான செல்வங்கள் நிச்சயம் வந்து கொண்டே இருக்கும்

படைத்தவனின் படைப்பான நீங்கள்… படைக்கப்பட்டவனின் படைப்பாக... படைப்பின் படைப்பாக… “படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…”

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.

ஒரு மண்டலம்... “48 நாள்...” என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். ஏன் என்பதை நாம் அறிந்துள்ளோமா...?

நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.

கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.

புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,

இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும்,

விஞ்ஞானத்தின் செயற்கை நிலையால் இக்கலி என்னும் காலத்தில் மீண்டு கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
1.ஆசை என்னும் நிலை கொண்டே ஈஸ்வரபட்டனாகிய நான்
2.இந்தப் பாட நிலை எல்லாம் அருளுகின்றேன்.
3.ஒவ்வொருவரும் இனி வரும் கால நிலையைக் கடத்திடாமல் அருள் பெறுங்கள்.

இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு...!
1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக... படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்...!

July 5, 2022

27 நட்சத்திரங்களின் சக்தியை ஒருங்கிணைத்துப் பெறச் செய்யும் நிலைக்காக உருவாக்கப்பட்டது தான் முருகன் சிலை

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
2.நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி… மாற்றி… விஷத்தையே மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது.

அதே போல் ஒவ்வொரு தாவர இனச் சத்திற்குள்ளும் மனிதனாக உருவாகக் காரணமான “நஞ்சினை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்…” இந்த உணர்வின் சத்துக்கள் உண்டு.

மனிதனுக்கு மூலமாக இருந்த அத்தகைய விஷத்தை வென்றிடும் அருள் சக்தியின் தன்மைகளைச் சாரணையாக முருகன் சிலைக்குள் ஏற்றினான் போகன்.

விஷம் கொண்ட ஜந்துக்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து வரும் போது தன்னைக் கொன்று புசித்திடாத நிலைகள் இருப்பதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனின் தாய் தந்தையர் பல விதமான மூலிகைகளைத் தாங்கள் படுத்திருக்கும் குகைகளின் பக்கத்தில் பரப்பி வைத்திருந்தார்கள்.

அதைக் கருவுற்ற அகஸ்தியனுடைய தாயாரும் நுகர்ந்ததால் அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் சக்தியாக அது பெருகியது.

நஞ்சை மூலமாக வைத்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக (கதிரியக்கங்கள்) தாக்கும் பொழுது மற்றொன்றுக்குள் ஊடுருவி அதை வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது.

தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றதனால்
1.வீரிய சக்தி கொண்ட நட்சத்திரங்களின் மின்னல்களையும் அகஸ்தியன் அடக்கி
2.தனக்குள் அணுவின் தன்மையாக ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை இரண்டாவது நிலைகள் கொண்டு தான் போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நமது பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவானது எப்படி…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சினை வென்றிடும் சக்தியாகப் பெற்றான்.

நவபாஷாணங்களை எடுத்து உருவாக்கி…
1.27 நட்சத்திரங்கள் மின்னலாகத் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்களை நவபாஷாணத்திற்குள் ஊடுருவச் செய்து
2.அதன் வழி கொண்டு 27 நட்சத்திரங்களின் ஒருக்கிணைந்த உணர்வினைப் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை (முருகன்) உருவாக்கினான்.

அது தான் போகன் உருவாக்கிய ஆறாவது அறிவின் சக்தி கொண்ட நிலைகள்.

மனிதரான பின் நாம் எப்படி வந்தோம்…? மனிதனான பின் இத்தனை அறிவையும் நாம் எப்படித் தெரிய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்தான். அதை உணர்வதற்காக நாடு முழுவதற்கும் சென்றான்.

ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் அதனின் அறிவாக எப்படிப் பெறுகின்றனர்…? என்ற நிலையை அறிவதற்காக உலகம் முழுமைக்கும் “ககன மார்க்கமாகச் சென்று…” எல்லாவற்றையும் அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தியைத் தனக்குள் பெற்ற பின் தான் இங்கே முருகன் சிலையை உருவாக்கி அதன் வழியில் நாம் எல்லாம் வழிபடும் நிலையாக
1.ஆறாவது அறிவின் பெருமையை
2.சிலை ரூபமாக வெளிப்படுத்தினான் போகன்.

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்...! மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்

இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்
1.நம் சக்தியை...
2.நம் திறனை...
3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதறவிட்டு...
4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்
5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது. அதாவது
1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்
2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்
3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு
4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்
1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்
2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.
3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.

ஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே... நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்...! தியான நிலையில் இருந்திடுங்கள்...!

இதைப் படிப்போர் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று
1.சகல சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் நமக்குள் வந்து
2.நமக்கு அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே... அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்...!

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்...!” என்ற நிலைக்கேற்ப அந்த மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். பேரருள் பேரொளி பெற்றுப் பேரானந்த நிலையை அடையுங்கள். உங்களால் முடியும்...!

July 4, 2022

உயிரான ஈசனை நேசிப்பதா...? உடலான சிவத்தை நேசிப்பதா...?

இயற்கை எவ்வாறு இயங்குகிறது...? என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் சிலைகளை வடித்து அதற்கென்று காரணப் பெயரை அன்று வைத்தார்கள்

உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்... இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்... ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்... உயிர் எப்படி ஓ... என்று இயக்குகின்றதோ அது போல நுகர்ந்த உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும் என்று காட்டுகின்றார்கள்.

உயிரிலே பட்ட பின் ஓ... என்று பிரணவம் ஒலியை எழுப்புகிறது... சப்தத்தைக் கொடுக்கின்றது. அதே போல் நாம் நுகரும் உணர்வுகள் அதே சப்தத்தைக் கொடுக்கும் என்று பொருள்.

ஆகவே பிரணவம் என்ற நிலையில் உயிர் நாம் நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகிறது. இந்த உணர்வின் தன்மை அணுவாகி அதனின் மலம் தான் நம் உடலாக சிவமாகின்றது. ஆனால்
1.உயிரான ஈசன் வெளியிலே சென்று விட்டால் இந்த உடலான சிவம் சவம் தான்.
2.அதற்கு அப்புறம் ஒன்றும் இயக்கம் இல்லை.

நாம் எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அது அணுக்களாக ஆன பின் இந்த உடலை வளர்க்க அவை தான் உதவியது. ஆகவே அந்த அணுக்கள் தான் இந்த உடலை வளர்த்தது.

இருந்தாலும்... உயிர் வெளியில் போன உடனே
1.அந்த அணுக்கள் உயிரணுக்களாக மாறி உடலின் சத்தை எடுத்துப் புழுக்களாக மாறுகிறது
2.எந்தெந்த உறுப்புகளில் அது வளர்ந்ததோ அதையே உணவாகச் சாப்பிடும் (முக்கியமானது)

உணவாகச் சாப்பிட்டு எல்லாம் தீர்ந்த பின் இந்தப் புழு மடிந்து விடுகின்றது. முதலில் அணுவாக இருக்கின்றது உயிர் போன பிற்பாடு உயிரணுவாக மாறிப் புழுவாகின்றது.

உதாரணமாக நமக்கு வேண்டிய ஒருவர் நோயால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார். அந்த நோயினாலேயே கடைசியில் மடிந்திருப்பார். அவர் மேல் உள்ள பற்றால் ரொம்பப் பிரியமாக நாம் அதைக் கேட்டறிந்திருப்போம்.

ஆனால் அந்த உடலில் விளைந்தது உயிரணுவாகிப் புழுவான பிற்பாடு பிரியமாக எண்ணிய நம் உடலில் வந்து “ஒட்டிக் கொள்ளும்...”
1.அங்கிருந்து காற்றை உறிஞ்சி உடலில் விளையும்... கொசு மாதிரி கூட சிறு உயிர்களாக அதில் தோன்றும்.
2.இது சரும நோயாக வரும்... உடலுக்குள் சென்றுவிட்டால் சர்க்கரைச் சத்தாக வந்துவிடும்
3.இரத்தத்தைக் குடித்துவிட்டு அதனின் மலத்தை வெளிவிடும் போது சீழாக மாறும்...
4.இருக்கிறதை எல்லாம் தின்று குடைந்து கொண்டே போகும்.

இறந்தவர் உடலில் உருவானது... எதன் வழி வளர்ந்ததோ புழு இறந்து விட்டால் மனிதனாக இருக்கும் நாம் எந்தெந்த உணர்வைக் கேட்டு வளர்த்தோமோ “லபக்...” என்று வந்து இங்கே ஒட்டிக் கொள்ளும். அவருக்கு வந்த நோயை இங்கே உருவாக்கி விடும்.

இதைத்தான் மரபு அணு என்று சொல்வது...!

எதன் வழியில் வளர்ந்ததோ... அந்த உணர்வின் இயக்கமாக மரபணுக்கள் தொடர்ந்து... வந்து கொண்டே இருக்கும். அது மடிவதில்லை

அதனால் தான் “ஒரு அசுரன் இறந்தான் என்றால் பல அசுரர்கள் அதிலிருந்து எழுவார்கள்...!” என்று இராமாயணத்தில் சுத்தமாகவே நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

உயிரை ஈசன் என்றும் நுகர்ந்த உணர்வுகள் தான் உடலாகின்றது என்றும் காட்டி
1.இவன் சிவனை நேசிக்கின்றான்... அவன் உயிரை நேசிக்கின்றான்...
2.இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தை இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியானம் என்றாலே… அது தன்னைத்தானே சங்கடப்படுத்திக் கொண்டு செய்யும் நிலை அல்ல

மன நிலையில் பயந்தவர்கள்… தன் நிலையை மறந்து மற்ற நிலைகளின் தன்மையைப் பயந்த நிலையில் ஏற்கும் நிலையை அடையும் தன்மை பெற்று… அதனால் உடல் நிலையும் மன நிலையும் கெடும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்று மண்டலத்தில் எண்ணிலடங்காத நிலைகள் கொண்ட பல உயிரணுக்களும் நல்ல அணுக்கள்... தீமையான அணுக்கள்.. பல ஆவி நிலைகள்... என்று இப்படிப் பல சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தக் காற்று மண்டலத்தில் தான் ஈரப்பசையும் உள்ளது. மேகங்கள் படிந்துள்ளதும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது. இந்தக் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள காற்றில் ஈரப்பசையில்லை அந்த நிலையில் ஓரே சமமான நிலை தான் உண்டு,

காற்று மண்டலத்தில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அந்த நிலையில் அலைந்து கொண்டுள்ள பல ஆவிகள் அதனுடைய செயலைச் செயல்படுத்த முற்படுகின்றன.
1.அத்தகைய ஆவிகள் எந்த உடலை ஏற்கலாம்...? என்ற நிலையில்
2.இடிக்கும்... மழைக்கும்... இருட்டிற்கும்.. பயந்த நிலையில் உள்ளவர்களை
3.அந்தத் துர் ஆவிகள் வந்து அண்டிக் கொள்கிறது.
4.இந்த நிலையில் நம்மை அறியாமலேயே நாம் நம்மை அந்த ஆவியின் நிலைக்குச் செல்லும் தன்மை வந்துவிடுகின்றது.

அப்பொழுது பயம் கொண்ட நிலையில் உள்ளவனுக்குத் தன் எண்ண நிலை அற்றுப் போகிறது. எண்ண நிலை இல்லாததினால் செயல் திறன் மங்கி விடுகின்றது.

சோர்வுத் தன்மைக்கு அடிபணியும் தன்மை வந்து மன நிலை மாறுபட்டு உடல் நிலை கெட்டு தன் வாழ்க்கை நிலையே பெரும் சஞ்சலத்தில் செல்லும் நிலைக்குச் செல்வதெல்லாம் “மன நிலையில் தான்...” என்பது இப்பொழுது புரிந்ததா…? ஒவ்வொரு மனிதருக்கும்...
1.அவரவர் எடுக்கும் சுவாச நிலையும் மன நிலையும் பொறுத்துத்தான்
2.அவர்கள் வாழ்க்கை முறையும் உடல் நிலையும் செல்வ நிலையும் சந்தோஷ நிலையும் சோர்வு நிலை பெறுவதும் எல்லாமே…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து சகல சக்தியும் இந்த உலகினிலே சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நமக்கு அவன் அளித்த சக்தியைக் கொண்டு நம் சக்திக்குகந்த நல்ல அணுக்களையும் மகரிஷிகளின் ஆசியைப் பெறும் தன்மையில் நாம் நம் ஆத்ம ஜெபத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மீக வழியில்...
1.நல் வழி ஒன்றிலேயே நாட்டம் கொண்டு ஜெபிக்கும் பொழுது
2.நல் ஆத்மாக்களின் நல் உறவை நாம் பெற்று நல் மனத்துடன் நாம் இருந்தால்
3.நம்மை எந்தத் தீய சக்திகளும் தீய ஆவிகளும் தீண்டும் தன்மையை அகற்றும் நிலை நமக்கு வந்தடையும்.

நம் எண்ணத்தில் அச்சக்தியின் ஒரே சக்தி நிலை மட்டும் சத்திய நிலையில் இருந்து விட்டால் பயம் அச்சம் என்ற நிலையெல்லாம் வந்து அண்டாது.

நம்மை நாமே பரிசுத்தப்படுத்துவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஜெபம் ஒன்று தான் சகல வித்தையும்...! சகல மந்திரமும்...! மந்திரம்...மாயம்...! எல்லாமே...!
1.அச்சக்தி நிலை பெற்ற சத்தியவானுக்குச் சகல நிலைகளும் தானாக நடந்துவிடும்.
2.எந்த நிலையிலும் சலிப்பிற்கும் சங்கடத்திற்கும் ஆளாகாமல் ஜெப நிலை பெறுங்கள்...! என்பது இந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான்,

இன்று இந்த உலகம் உள்ள நிலையில் ஒவ்வொருவரும் தன் நிலை உணரும் தன்மை அற்றுப் பெரும் சங்கட நிலையில் சலிப்புத் தன்மை கொண்டு வாழுகின்றார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு உன்னத நிலை பெற்று வாழ்ந்திட ஒரே வழி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தியான நிலை தான்.

தியானம் என்றாலே...!
1.தன்னைத்தானே சங்கடப்படுத்திக் கொண்டு செய்யும் நிலையாக எண்ணாமல்
2.தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் எப்பொழுதும் ஒரே நிலை கொண்டு
3.அந்த ஈஸ்வர சக்தி நம்முள்ளே தான் சுற்றிக் கொண்டுள்ளது என்ற நினைவுடன்
4.நாம் எண்ணும் எண்ணத்தில் பரிசுத்தம் கொண்டு வாழ்ந்திட்டாலே
5.இந்த உலகில் சுற்றியுள்ள பல நல்லோரின் ஆசியை நாம் பெறக்கூடிய பாக்கியம் பெறுகின்றோம்
6.எல்லா மெய் ஞானியரின் நல்லாசிகளை நாம் பெறுகின்றோம்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த நிலையில் உண்மையறிந்து அந்தப் பரமாத்மாவின் சக்தி பெற்று பலருக்கும் நல் நிலைகளைப் புகட்டி நல் நிலை கொண்டே நலம் பெற்று வாழ்ந்திடுங்கள்.

July 3, 2022

பிரம்ம குருவான வசிஷ்டரைக் கேட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்

மனிதனான பின் தசரதச் சக்கரவர்த்தி... இந்த உயிர் “பத்தாவது நிலை” அடையக்கூடிய பக்குவம் பெற்றது. இதற்குப் பிரம்ம குருவாக இருப்பவர் யார்...?

வசிஷ்டர்...! வசிஷ்டரைக் கேட்டு விட்டுத் தான் எல்லாம் செய்வார்கள்.

பத்தாவது நிலையை அடையும் நிலையில் இன்று மனிதனாக இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவர நேர்ந்தால் அது வசிஷ்டர் தான்.

அந்தத் துருவ நட்சத்திரம் இருளை நீக்கி ஒளியாக மாற்றியது.
1.நீங்கள் கவர்ந்து கொண்ட அந்தச் சக்தி உங்களுக்குள் பிரம்மமாக உருவாக்குகின்றது... அந்த உணர்வின் அணுவாக.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு எதுவோ அருந்ததி... அதனுடன் இணைந்து உங்களுக்குள் ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இவ்வளவு பெரிய தத்துவத்தை இராமாயணத்தில் இந்த உயிர் என்ன செய்யும்...? என்று தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“வசிஷ்டரும் அருந்ததியும் போல” என்றால் ஒருவர் வேதனைப்படுகின்றார். நாம் பாசமாக என்ன...? ஏது...” என்று விபரங்களைக் கேட்டறிகின்றோம்.

அப்போது வசிஷ்டர். ஆண்பாலாக உடலுக்குள் அந்த வேதனையான உணர்வுகள் உறைகின்றது. அந்த குணத்தின் சக்தி இங்கே வந்தால் அருந்ததி... வேதனை உணர்வைத் தான் உங்களுக்குள் இயக்கும்.

“நளாயினி” என்றால் எந்த உணர்வின் சக்தியாக ஆனதோ இந்தச் சக்தி “உறுதுணையாகத் தான் இருக்கும்” என்று பொருள்.

சாவித்திரி போன்று என்றால் அந்த உணர்வுகள் (வேதனை) விஷத்தின் தன்மையாகவே நம்மை இயக்கும் என்று பொருள்.

ஆனால்...
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டால்
2.நம் உணர்வுகளை எல்லாம் அது ஒளியாக மாற்றும் என்பதை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்களின் உண்மை. ஆனாலும் இதனை அறிய முடியாதபடி காலங்களால் எத்தனையோ நிலைகள் மாறிவிட்டது

மறைந்த உண்மைகளை எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்களை நீங்கள் முழுமையாக அறிய வேண்டும் என்ற நிலையில் இதை குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

விஞ்ஞான உலகில் பேரழிவு வரும் நிலையிலிருந்து
1.உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்
2.அன்பு கலந்த உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள்.
3.அருள் ஞானிகளின் உணர்வை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

அந்த உணர்வைத் தான் உங்களில் இப்போது பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).

பூஜையும்… பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும்… ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல

1.இறை சக்தியைக் கண்டிடவே… இறைவன் பூஜை செய்து விட்டால் இறைவன் அருள் கிட்டுமா…?
2.அந்த இறைவனின் எண்ணம் மட்டுமே இருந்து…
3.அந்த இறைவனே வந்து நமக்கு எல்லா அருளையும் அருள்வான்…! என்று
4.இறைவனையே எண்ணிப் பூஜித்தால் இறைவன் அருள் கிடைக்குமா…?

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பருவம் முதல் எந்த எண்ணத்தை முதலில் பாய்ச்சுகின்றாளோ அந்த எண்ணம் அந்தக் குழந்தைக்குச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு குழந்தை அது பிறந்தது முதல் அந்த இல்லத்தில் உள்ளோரின் எண்ணத்தின் சுவாச நிலைகளை வளர்ந்து வரும் அந்தக் குழந்தைக்கும் நாம் அளிக்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.வளரும் பருவத்திலேயே நல் உணர்வை
2.நாம் அந்தக் குழந்தைக்கு அளிப்பது தான்
3.இறை சக்தியை அதற்கு அளிக்கும் நிலையப்பா…!

இறை சக்தி என்பதைப் பல நாமம் கொண்டு அழைத்து வணங்குகிறோம். அப்படி வணங்கும் பொழுது நம்முள் உள்ள இறைச் சக்தியை
1.நாம் எந்த நிலை கொண்டு நாம் அதன் தன்மையைப் பெற்றுள்ளோமோ
2.அதற்குகந்த சக்தித் தன்மை தான்
3.நாம் அழைத்து வணங்கும் இறை நாமத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம் எண்ணத்தில் பல கலக்கங்களைக் கொண்டு கோப தாப துவேஷ நிலைகளை எல்லாம் நம்மையே சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம்மைச் சாந்தப்படுத்திச் சமநிலைப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் நிலை கொண்டு
1.நாம் அடைந்த இத் தீய நிலைகளை எல்லாம்
2.நம்மையே சுற்றிக் கொண்டுள்ளாமல் இருக்கும் நிலைக்கு
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சாந்த நிலை கொண்டு
4.நம் நிலையில் என்றும் நாம் மாறுபடாமல்
5.சாந்தமான நிலையில் அன்பு கொண்டு வாழ்ந்திடும் வாழ்க்கையே
6.அந்த இறை சக்தியை நாம் பெற்ற வாழ்க்கையாகும்.

பூஜையும் பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும் ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல.

மன அமைதிப்படுத்திட நம் மனதை அன்பு கொண்டு அந்த ஆண்டவனின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கும் பொழுது அந்த நாமத்தின் வழியினிலே
1.“நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலை தான்”
2.பல ஆண்டவனின் நாமத்தை நாம் ஜெபித்துப் பூஜிப்பதுவே…!

ஆண்டவனின் அருளைப் பெற நம்மை நாம் பக்குவப்படுத்துவது என்பது
1.அடித்துத் துவைத்து வெளுக்கும் நிலையல்ல.
2.அறிந்து… அந்த அழுக்கைப் போக்க அலசி எடுக்கும் நிலை தான் நம் நிலைக்கு வரவேண்டும்.

ஆண்டவன் என்னும் எண்ணத்தையே பெரும் ஆர்ப்பாட்டமாகக் கோவில்களுக்குச் சென்று பல பூஜைகளைச் செய்து பெறுவதல்ல அந்த ஆண்டவனின் அன்பு.

நம்மை நாம் அன்புப்படுத்தி அறம் கொண்ட வாழ்க்கை வாழ்வது தான் அந்த இறைவன் அருள் பெறும் இன்ப நிலையாகும். இந்த இன்ப நிலை பெறுவதற்கு
1.தன் வாழ்க்கை நிலையை இன்பமாக்கி
2.இறைவன் அருள் பெறுவதுவே இன்ப நிலை என்றுணர்ந்து
3.அந்த இறை சக்தியின் நிலை பெற்று வாழ்ந்திடுங்கள்.

July 2, 2022

மந்திரவாதிகள் செய்யும் சில தந்திரமான வேலைகள்

அன்று சாங்கிய சாஸ்திரங்களை ஏற்படுத்தினார்கள் அல்லவா... அந்த அரசர்கள்...! அதற்கென்று ஒரு கூலி ஆளை வேலைக்கு வைத்திருப்பான் ஐந்தாம் படை என்பார்கள்.

அது போன்று தான் இன்றும் அந்த வழியில் வந்தவர்கள் மந்திர தந்திர வேலைகள் செய்து கொண்டுள்ளார்கள்.

உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் அதற்கென்று இன்று சாங்கியங்களைச் செய்கிறோம். அதை எல்லாம் செய்து கொண்ட பிற்பாடு தனித்துப் பிரித்து வைத்துக் கொண்ட பின்
1.நம் வீட்டு வாசல் படியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.
2.அதை எடுத்த பின் அதற்கென்று தனித்த இடத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

இறந்தவரின் உடலை எங்கே புதைத்தார்களோ அதைத் தெரிந்து கொள்வார்கள். புதைத்திருந்தால் அந்த இடம் அல்லது சுட்டு (தகனம்) இருந்தால் அந்த இடம். அங்கே செல்வார்கள்.

எந்த தெய்வத்தின் மேல் அவர் பக்தி கொண்டு வாழ்ந்திருந்தாரோ எந்தெந்த வழிகள் அதைப் பின்பற்றி மந்திரம் எல்லாம் சொன்னாரோ அதை வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

இந்த தெய்வத்தின் மீதுதான் அவர் பக்தி கொண்டார் என்ற நிலை வந்தவுடனே இறந்தவர் வீட்டில் அவர்கள் தந்தையை நினைத்துச் சாமி கும்பிடுவார்கள். ஆனால் அவர்கள்
1.சுடுகாட்டில் பாத மண்ணை வைத்து மந்திரத்தை சொல்லி
2.அந்த இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்.

கைவல்யப்படுத்திய பின் பல பல வேலைகளைச் செய்வான். குட்டிச்சாத்தான் ஆக மாற்றுவான்... பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்... ஒரு சிலரின் நோய்களைப் போக்கவும் பயன்படுத்தலாம்.

இதுகள் எல்லாம் செயல்படுத்துவதற்கு... கர்ப்பத்தில் உருவாகும் கரு கலைந்தது (ABORTION) என்றால் அதை எடுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிக்குச் சென்று பிரசவத்தின் போது வரும் பனிக்குட நீரை எடுத்துக் கொள்வார்கள் இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய நிலைகள்.

அதை எடுத்து வைத்துக்கொண்டு மந்திரத்தைச் சொன்ன உடனே இந்த குழந்தையினுடைய (பனிக்குட நீரை எடுத்த குழந்தையின் ஆன்மா) ஆன்மா பிரிந்துவிடும்.

மந்திரத்தால் அதைக் கவர்ந்து கொண்டு சில கரு வித்தைகளை எல்லாம் செய்வார்கள் அதாவது... ஜோதிடங்கள் பார்ப்பது குடும்பங்களைக் கெடுப்பது தனக்கு ஆகாதவர்களுக்கு தீய செயல்களைச் செய்வது... குட்டிசாத்தானாக வைத்து வேலைகளைச் செய்வார்கள்.

ஆகவே
1.இந்த சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்ட குடும்பங்கள் எல்லாம்
2.இப்படி பேயாகப் போய்... நோயாகப் போய்... சர்வ நாசமாக ஆகிப்போகும் நிலைகள் தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

உடலை விட்டுப் போன பிற்பாடு அந்த ஆன்மாக்களுக்கு நாம் இங்கே உணவை வைத்துக் கூப்பிடுவோம். ஆனால் கடைசியில் இன்னொரு உடலுக்குள் சென்று அவஸ்தைப்பட்டு அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டி வரும்.

குடுகுடுப்புக்காரன் வீட்டுக்கு வந்தால் புது துணியைக் கொடுத்தால் வாங்க மாட்டான். பழைய துணிகளைத் தான் கேட்டு வாங்குவான் காரணம் நம் உடலிலிருந்து வெளி வந்த மணம் அதிலே இருக்கும்.

அதை வைத்து மந்திரங்களை ஜெபித்த உடனே
1.இங்கே வீட்டில் நாம் என்னென்ன செய்திருக்கின்றோம்...?
2.வீட்டிற்குள் நாம் மறைத்து வைத்திருக்கக்கூடிய அடுக்குப் பானையில் இருப்பதையும் சொல்ல ஆரம்பிப்பான்.

இப்படி இதை இவனுக்கு ஒரு பிழைப்பாகச் செய்வான். பற்றாக்குறைக்கு ஆகாதவர்கள் யார் என்று தெரிந்து வைத்திருப்பான். அவனே அதாவது செய்துவிட்டு வந்து “உங்களுக்கு ஆகவில்லை...” என்பான்.

காரணம்...
1.இன்னார் தான் உங்களுக்கு இந்தக் கெடுதலைச் செய்தார்கள் என்று சொல்வான்.
2.நாம் அடப்பாவிகளா...! என்போம்.
3.எல்லாம் சொன்ன பின்... வெளியிலே சொல்லக்கூடாது ஆபத்தான விஷயம் என்று
4.நம்மிடம் சத்தியமும் வாங்கிக் கொள்வான். பரிகாரம் என்ற பெயரில் காசையும் வாங்கிக் கொள்வான்.

சிநேகிதமாகச் சொல்வது போல் சொல்லி தலை முடியும் பழைய துணிகளையும் கொடுங்கள் என்று அதையும் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலைமுடி பழைய துணியை வைத்து அதற்கென்ற கருவை வைத்து மணலில் எல்லாவற்றையும் கலந்து சில வீடுகளில் தூவிவிடுவான்.

அந்த மணல் பட்டதென்றால்
1.வீட்டிலிருப்பவருக்குக் கை கால் வராதபடி செய்யும்
2.குழந்தை உருவானால் அந்தக் கருக்களைச் சிதையச் செய்வது.
3.சில இடங்களில் நிறைய இது போன்று செய்வார்கள்.

இந்த மாதிரித்தான் சாங்கியங்களைச் செய்து... காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பி விடலாம் என்று நினைக்கின்றார்கள்...! ஆனால் மோட்சத்திற்குச் செல்ல முடியாது.

1.இந்தச் சாங்கிய சாஸ்திரப்படி அனுப்பினோம் என்றால் நிச்சயம் நரக வேதனைப்படும் நிலைகளுக்குத் தான் செல்ல முடியும்
2.மனிதனல்லாத உயிரினமாகத்தான் உருவாக்குமே தவிர
3.மீண்டும் மனிதனாகக் கூட வரத் தகுதி இல்லாது போய்விடும்.

கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் எவ்வாறு ஜீவன் பெறுகிறது…?

சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் இடங்களில் எல்லாம் உயிர் அணுக்கள் ஜீவன் பெற்று வாழ்கின்றன. பூமியின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

அதே போல் காற்றிலும் பல உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. வான மண்டலத்தில் பல உயிரணுக்கள் பறந்து இக்காற்றினில் வீசிடும் பல உயிரணுக்களையே ஆகாரமாக எடுத்து அந்த நிலையிலேயே முட்டையிடுகின்றது.

அந்த முட்டை மேலிருந்து கீழ் வரும் பொழுது பூமிக்கு வந்து தாக்குவதற்கு முதலிலேயே வான மண்டலத்திலேயே அந்த முட்டை வரும் வேகத்திலேயே வெடித்து குஞ்சு வெளிப்பட்டு அந்தக் குஞ்சு அந்த நிலையிலேயே பறக்கும் நிலை பெற்று உயிர் வாழ்கின்றது.

இப்படி பூமிக்கும் உயிரணுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே வான மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. அதே போல்
1.பூமியிலும் கல்லுக்கடியில் தேரை எப்படி வந்தது…?
2.அந்தத் தேரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் தாயினம் இருந்ததா…?
3.மாம்பழத்திற்குள் வண்டு எந்த நிலை கொண்டு உள்ளே சென்றது…?
4.பூவிலேயே முட்டையிட்டு அந்த முட்டை அதே நிலை கொண்டு உயிர் பெற்றதா…?
5.பூ காயாகிக் கனியாகும் வரை அந்த முட்டை அங்கேயே முட்டையிலிருந்து புழு வந்து வண்டானதா..? என்று எல்லாம் எண்ணுகின்றோம்.

இதன் நிலையை ஆராய்ந்து உண்மை அறிந்தோர் வெளியிடவும் இல்லை. ஆனால் பல மெய் ஞானியர்கள் அறிந்த பேருண்மை இது.

மாம்பழத்தில் வண்டு வந்ததின் உண்மை நிலை அந்த மரத்தில் பூப்பிடித்துக் காயாகும் தருணத்தில் அந்தப் பூவில் உள்ள ஈரப்பசை கொண்டு அக்காய் பிடித்து அது கனியாக ஆவதற்கு முன்
1.அந்தக் காய்க்கு மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் பொழுது
2.அந்த ஒளிக் கதிரிலிருந்து காயில் உள்ள ஈரப்பசையின் சுவாச நிலைக்குகந்த உயிரணு
3.அந்தக் காயிலேயே தான் உற்பத்தியாகின்றது.

சூரிய ஒளி பட்டவுடன் அவ்வுயிரணு ஜீவன் பெற்றுப் புழுவாகி வண்டாகி அந்தக் காயில் உள்ள மாங்கொட்டையின் பருப்பினையே உணவாக ஏற்று மாங்காயின் உள்ளேயே உயிர் வாழ்கின்றது.

அதன் சுவாச நிலைக்கேற்ப ஆகாரமும் அம்மாங்காயிலே தான் அதற்குக் கிடைக்கின்றது. அந்தக் கனியைப் பறித்து அதை அறுத்துப் புசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அந்த வண்டு வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட வண்டிற்கு வேறு நிலையிலுள்ள (வெளி உலக) சுவாசத்தை ஈர்க்கும் தன்மை இல்லாததினால் கனியிலிருந்து வெளிப்பட்ட உடனே அது மடிகின்றது. அதன் சுவாசத்திற்குகந்த ஆகாரம் இல்லை என்றால் அதனால் வாழ்ந்திட முடியாது.

கல்லுக்குள் தேரை வந்ததும் இதே நிலையே.

கல்லிற்குள் இருக்கும் ஈரப்பசையில் கல்லிற்கு மேல் படும் சூரிய ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தில் அங்கேயே ஒரு ஜீவன் உற்பத்தியாகி அது வாழ்ந்து அந்தக் கல்லுக்குள்ளேயே மடிகின்றது.

1.எல்லா உயிரணுக்களுக்கும் தாய் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை இல்லை.
2.தேரை மாம்பழத்தில் உள்ள வண்டு ஈ கொசு எறும்பு விட்டில் பூச்சிகள் ஈசல்கள் பலவிதமான புழுக்கள் இவைகளில் எல்லாம்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை... தாய் தந்தை என்ற நிலையும் இல்லை.
4.சூரிய சக்தியிலிருந்து அந்தந்த நிலைக்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு உயிர் பெற்று வாழ்வதுவே.

இப்படி இயற்கையின் சக்தியிலே பல கோடி உண்மைகள் உள்ளது.

அதற்காகத்தான் நம் முன்னோர்கள் இயற்கையையே ஆண்டவனாகப் பணித்தார்கள்.
1.இந்த இயற்கை தந்த ஆண்டவனைக் கண்டவர்கள் இந்த உலகிலே யாரும் இல்லை.
2.இந்த உலகில் மட்டுமல்ல... சூட்சம நிலை பெற்ற பாக்கியவான்களாலும்...
3.இயற்கை சக்தி தந்த ஆதி அன்னையை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

அவள் தந்த சக்தியையே சூரியனையும் காற்றையும் மழையையும் இவற்றின் அருள் பெற்ற இயற்கை அன்னையையும் என்றென்றும் நாம் எண்ணி வணங்கிடுவோம்... போற்றிடுவோம்...!

இயற்கையின் அன்பு நிலையில் நம்மையும் அன்பு கொண்டு
இயற்கைகளின் இயற்கையையும் (படைப்புகளையும்) அன்பாக்கி
இயற்கை அன்னை தந்த - அந்த இயற்கையில் வந்த நாமும்
இயற்கையுடனே ஒன்றி அன்பு கொண்டே என்றும் வாழ்ந்திடுவோம்.

July 1, 2022

தாக்கும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்க்க வேண்டும்

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் அவனை நேரடியாகத் தாக்கவில்லை என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். காரணம் என்ன…?

அதாவது குகை மீது இருக்கும் பாறையைத் தன் காண்டீபத்தால் தாக்கி வாசலை மூடிவிடுகின்றான்.
1.குகையில் கல்லைப் போட்டு மூடியவுடனே அதற்குள் வாலி அடைபட்டுவிடுகின்றான்… அவன் வளர்ச்சி குன்றுகிறது.
2.அவனைக் கொல்லவில்லை… அவன் செயலாக்கத்தைக் குறைக்கின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

உதாரணமாக… வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இங்கே வாலியாகின்றது. அதே சமயத்தில் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் முன்னாடி நிற்கின்றது.
1.ஆன்மாவில் இருப்பதைத் தான் நாம் சுவாசிக்க முடியும்.
2.சுவாசித்ததைத்தான் உயிர் இயக்கி அதனதன் உணர்ச்சிகளாக நமக்குள் தூண்டும்.
3.அதன் வழியிலே தான் நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே இருக்கும்.

அப்போது அந்த வேதனையான உணர்வலைகள் உள்ளே புகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

பல கோடித் தீமைகளை வென்றவன் தான் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக உருவானது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் அதைச் செலுத்தினோம் என்றால் அதற்கப்புறம் மற்ற தீமைகள் உள்ளே செல்லாது.

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கூட்டப்படும் போது
3.இங்கே வலிமை பெறுகின்றது… மற்றதை ஈர்க்கும் சக்தி குறைகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்ட பின் அந்தச் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதன் வழி நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

அப்படி நினைவைச் செலுத்தினால் நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது.
1.இந்த வலிமை பெறப் பெற இதனின் அழுத்தம் ஆக ஆக
2.வேதனை என்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுவிடுகிறது.

காலையிலிருந்து இரவு வரை நாம் கவர்ந்ததெல்லாம் (சுவாசித்தது)
1.சாதாரணமாக ஒரு சாண் நீளம் உடலைச் சுற்றி நமக்குள் ஆன்மாவாக இருக்கின்றது.
2.அதிலிருக்கும் வேதனை என்ற உணர்வின் தன்மையை மாற்றத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வலுவைக் கூட்டக் கூட்ட
1.ஆன்மாவில் இருக்கும் தீமையான உணர்வுகள் நகர்ந்து நகர்ந்து சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விடுகிறது.
2.நம் பிடிப்பில் இல்லாததால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடுகிறது
3.நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். அதாவது வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான்… அவனை நேரடியாகத் தாக்கவில்லை.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து… சுவாசத்தில் வரும் தீமை புகாதபடி இங்கே அடைக்கப்பட்டு… அந்தச் சக்தி உடலுக்குள் வலிமையான பின் நம் ஆன்மாவிலிருந்து தீமைகளைப் பிரித்துவிடுகிறது… பிளந்து வெளியே தள்ளிவிடுகிறது.

சுவாச நிலையைச் சீர்படுத்தித் தியானித்தால் எதையுமே எளிதில் சமப்படுத்த முடியும்

தியானத்திற்கு வரும் பொழுது “சுவாச நிலை எடுத்துத் தியானம் பெற வேண்டும் என்பது…” நம் எண்ணத்தை முதலில் அச்சுவாச நிலையினால் சமப்படுத்துவதற்காகத்தான்.

தியான நிலைக்கு அமரும் நிலையில் “முதலில் அச்சுவாச நிலையை ஈர்த்துக் கொள்...!” என்று அதனால் தான் சொல்கிறோம்.
1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.

நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று...
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.

அந்த நிலையில் இவ்வுலகம்... இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்... சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்...!”

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.

1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டும்.

பால் ஊட்டத் தாய்.. பாடம் புகட்ட குரு... வாழ்ந்திட மனைவி... வளர்த்திட மக்கள்... என்று ஒன்றுடன் ஒன்றி நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்
1.”நான்” என்ற தனி நிலையில் இல்லாத நாம்
2.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்வதே
3.நம் உயிரணுவிற்கு நாம் சேர்க்கும் அழியாச் சொத்து என்று உணர வேண்டும்.

மெய் வழியில் நாம் செல்லும் நிலையில் நம்மை இயக்கிச் செல்வதுவே
1.அந்தப் பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.”நான்” என்ற நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.