தியானம் செய்யும் போது தன் உடலுக்குள் பாம்புகள் செல்வதாகக் காட்சிகள் தெரிய வருகின்றது. இதனின் விளக்கம் என்ன...? என்று பார்ப்போம்.
1.சாதாரணமாக நம் உடலுக்குள் பல விதமான விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது...
2.அது ஊடுருவப்படும்போது அதை எல்லாம் நாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
நாகனின் (பாம்பு) உடலில் பல விஷத்தின் தன்மைகள் அதற்குள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத்தன்மைகள் நமக்குள் சென்றாலும் நம் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அங்கே காட்சியாகத் தெரிந்தது
அகண்ட அண்டத்தில் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் விஷம் இல்லாது உணர்வின் இயக்கம் எங்கும் கிடையாது.
பல விதமான விஷங்கள் கூடி நாகரத்தினமாக எப்படி மாறியதோ நமக்குள் பேரருள் என்ற உணர்வினைச் சேர்த்து அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து நாம் நுகரும் உணர்வுகளை ஒளியாக மாற்றும் நிலைகளுகளைத் தான் பாம்பினங்களாகக் காட்சியாகக் காண முடிந்தது.
உருவ அமைப்பிலே பாம்பு என்றாலும் அதன் உணர்வின் சக்தி விஷம் என்பதை உணர்த்துவதற்குத் தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.
நமது சாஸ்திரங்களில் கூர்மை அவதாரம் என்பதை ஆமையைப் போட்டுக் காட்டுகின்றார்கள். அதே போல் பன்றியைப் போட்டு வராக அவதாரம் என்றும் காட்டுகின்றார்கள்.
1.எந்தெந்த உணர்வுகளைக் கூர்மையாகப் பார்க்கின்றோமோ
2.அதன் உணர்வுகள் தீமைகளிலிருந்து தப்பிடும் உணர்வுகளாக வளர்ச்சி அடைந்து அடைந்து
3.அதற்குத்தக்க பரிணாம வளர்ச்சியாக அடைந்து வந்தோம் என்பதைக் கூர்மை அவதாரத்தில் காட்டியுள்ளார்கள்.
அதே போல் கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமை என்ற உணர்வுகளை நீக்கிடும் சக்தி பெற்றது பன்றி என்றும் தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்திருக்கக்கூடிய நறுமணங்களை நுகர்கின்றது என்பதை உணர்த்துவதற்கு வராக அவதாரத்தைக் காட்டுகின்றார்கள்.
ஆகவே மனித வாழ்க்கையில்... காலையிலிருந்து இரவு வரை நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்குள் தீமை என்ற உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மையைக் காட்டுவதற்குத் தான் அத்தகைய காட்சிகள் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். ஆனால் நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது.
இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் நாம் அதை மாற்றி அமைத்து உயிருடன் ஒன்று ஒளியான நிலைகள் பெற முடியும்.
காட்சிகளுக்கு உண்டான உண்மை நிலைகளை இங்கே விளக்கம் கூறிய பின்... அடுத்தடுத்து உங்களுக்குக் காட்சிகள் வரும் போது
1.அந்த உண்மையின் உணர்வை அறிய நீங்கள் மீண்டும் எண்ணத்தைச் செலுத்தினால்
2.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து நுகர்ந்த உணர்வுகள் எது...? என்பதை அறிய முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுதும் அதை உங்களால் உணர முடியும்.
இந்த உடலுக்குப் பின்...
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று என்றும் பிரகாசமான ஒளியாக
2.எந்தத் தீமையும் நமக்குள் புகாது இருள் சூழா நிலைகள் கொண்டு பாதுகாக்கும் சக்தியாகப் பெற முடியும்.
இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடிய சக்தியாக வளரும். எல்லோரும் அருள் ஞானம் பெறும் நிலைகளுக்கு வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் (ஞானகுரு).