நம் உடலில் இருக்கும் 1008 குணங்கள் அது மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? ஒவ்வொரு குணமும் அது எப்படி உருவானது…? என்றும் ஆலயங்களிலே காட்டப்பட்டுள்ளது.
பத்து உணர்வுகள் சேர்த்து ஒரு தெய்வ குணத்தைப் பெறுகின்றது. கோவில்களில் “10 நாள் விழா...” என்று கொண்டாடுவார்கள்... மாடு வாகனம் காளை வாகனம் சர்ப்ப வாகனம் அன்ன வாகனம் என்றெல்லாம் சொல்வார்கள்.
இந்த உடலிலே ஒன்றுக்குள் ஒன்று விழுங்கித் தான் ஒரு குணத்தின் தன்மை உருவானது... அந்தத் தெய்வ குணமாக ஆனது. மனிதனாகும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வைத் தனக்குள் உருவாக்கும் சக்தி பெற்றது என்று தான் இங்கே வருகின்றது.
மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர்கள் என்றும் பஞ்ச பாண்டவர் ஐந்து என்று வந்தாலும்...
1.அரச நிலைகள் கொண்டு கௌரவர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த வலிமை கொண்டு
2.நல்லதை எண்ணினால் அதை விடாதபடி செய்கிறார்கள்.
எல்லாம் கெட்டவர்களாக இருக்கின்றார்கள்.. ஆசைப்பட்டுத் தனக்குள் வளர்த்திருக்கின்றோம்.
நமது உயிர் திரௌபதையாக இருக்கின்றது. ஐந்து புலனறிவு கொண்டு நாம் நுகர்கின்றோம்.
1.தீமைகளை நீக்கிடும் உணர்வை எண்ணி எடுத்து அதை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.கௌரவர்கள் தனக்கு இடைஞ்சலாகிவிடும் என்று உள்ளே புகாதபடி தடுக்கும் போது இந்தப் போர் முறைகள் வருகிறது என்று
3.மகாபாரதத்தில் இப்படித் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்... நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா...?
மகாபாரதப் போர் என்றால் அதை எப்படி எப்படியோ காட்டி விட்டார்கள்...!
கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் அதாவது
1.ஐந்து புலனறிவு கொண்டு ஒரு உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கும்
2.இந்த உடலில் உள்ளுக்குள் (ஏற்கனவே) வளர்த்ததற்கும் இதற்கும் எதிர்மறையாகின்றது.
கோபமான குணங்களை எடுத்துக் கொண்ட பின் அடுத்து ஒரு சாந்தமான நிலைகளை நாம் எண்ணினால் அது விடுகின்றதா...? இல்லை. அந்த உணர்வை விடாதபடி எதிர்த்து நின்று போர் செய்து அதைத் தொலைத்து விடுகின்றது.
ஆகவே நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ இந்தக் கண்கள் அதற்கு உதவி செய்தாலும் அடுத்து இந்தக் கண்கள் அதை எப்படி மாற்றி அமைக்கின்றது...? என்ற நிலையைக் இங்கே காட்டுகின்றார்கள்.
மகாபாரதப் போரைப் பற்றி இன்று எழுதி வைத்திருக்கும் வித்தியாசங்களைப் பார்த்தோம் என்றால் அதிலே திசை திருப்பிய நிலைகளைப் பார்க்கலாம்.
அகஸ்தியன் கண்ட உணர்வைத் தான் வியாசகன் அறிந்து இத்தனை நிலைகளையும் அவன் வெளிப்படுத்தி உள்ளான்.
மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.