நாம் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகில் இருக்கக்கூடிய பொருளை எல்லாம் அது காணச் செய்கின்றது.
இதைப் போன்றுதான் நமது உயிர் நமக்குள் ஒளியாக (வெளிச்சமாக) இருக்கின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தைத் தன் ஒளி கொண்டு அந்த உணரவின் குணத்தையும் மணத்தையும் நமக்குள் உணர்த்துகின்றது.. அறியச் செய்கிறது.
அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலைகள் அறியச் செய்கின்றது.
உயிர் நமக்குள் தீபமாக… சுடராக இருந்து நாம் எதை எண்ணுகின்றோமோ... அப்பொருளை நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு “அந்த உணர்ச்சியை ஊட்டி...”
1.உணர்வால் நம்மை அறியச் செய்கிறது
2,மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.
இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் என்ற நினைவுக்குக் கொண்டு வரும் நந்நாள்தான் தீப ஒளித் திருநாள்.
ஒரு அசுரன் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். கிருஷ்ண பரமாத்மா கண்ணனாக உலகத்தில் தோன்றி அந்த அசுரனை வதம் செய்து வென்றான் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்... சாஸ்திரங்களிலும் இது காட்டப்பட்டுள்ளது.
முருகன் வழியில் எடுத்துக் கண்டால் அசுர சக்திகளை அகற்றி சூரபத்மனைக் கொன்று குவித்தான் என்றும் காவியங்கள் உண்டு. ஆனால்
1.அந்தக் காவியங்களில் தப்பில்லை.
1.அதில் உள்ள மூலக் கருத்தினைத் தான் நாம் தவறாகக் கருத்தில் கொண்டு வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.
காரணம் சூரியனை இயக்குவதும் அந்த விஷம் (நஞ்சு) தான். ..!
விஷத்தின் தாக்குதல் இல்லை என்றால் சுழற்சியின் வேகம் இல்லை. ஆனால் சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது நஞ்சினைப் பிளந்து ஒளியின் தன்மையாகப் பெறுகின்றது.
அதாவது…
1.சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது
2.அந்த வெப்பத்தின் நிலைகள் தாங்காது நஞ்சு பிரிந்து விடுகிறது
3.இருந்தாலும் அந்த நஞ்சினால் தான் வெப்பமாக ஆனது.
அதே போலத் தான் நமது உயிரின் துடிப்பிற்கு காரணமே இந்த நஞ்சு தான். நஞ்சின் இயக்கம் இல்லை என்றால் உயிரின் இயக்கமும் இல்லை.
உதாரணமாக ஒரு ரோஜாப்பூ இருக்கிறதென்றால் அதிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
அதை நாம் நுகர்ந்தால் நறுமணமாக இருக்கின்றது. ஆனாலும் அந்த மணத்தை வீசச் செய்வது உணர்த்துவது அதில் உள்ள விஷம் தான்.
சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தம் அல்ட்ரா வயலட் அந்த நஞ்சைக் கவர்ந்துதான் பூமிக்குள் வருகின்றது.
1.எதைக் காந்தம் இழுக்கின்றதோ அது மோதும் வேகத்தில் அங்கே வெப்பம் ஆகின்றது.
2.ஆனால் வெப்பமாகும் பொழுது இரண்டறக் கலக்கின்றது
3.கலந்த பின் அந்த விஷமே அதனின் மணத்தைப் பளீர்... என்று வீசச் செய்கின்றது
ஆகவே இந்த நஞ்சு இல்லை என்றால் உலகம் இல்லை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
ஒருவனுக்கு கோபம் வருகிறது. கோபத்தால் அவன் தவறு செய்கிறான். நாம் பார்க்கின்றோம்... அவன் தவறு செய்கின்றான் என்ற உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது...!
தவறு என்று உணர்கின்றோம்... அப்பொழுது கோபம் வருகின்றது. கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அவன் செய்தது தவறு என்று வரப்படும்போது
1.அங்கே இதே நஞ்சு தான் அவனைத் தவறு செய்ய வைக்கின்றது
2.அவனில் விளைந்த அந்தத் தவறை நாம் நுகரப்படும் பொழுது
3.நம் நல்ல குணத்தை இழக்கச் செய்து நம்மையும் தவறு செய்ய வைக்கின்றது.
அதனால்தான் இரண்யன்
1.எதிலேயுமே எனக்கு இறப்பு இல்லை...
2.என்னுடைய செயல்கள் எனக்கு வலு ஜாஸ்தி என்று சொல்கிறான்.
இதை எல்லாம் மகா ஞானிகள் இயற்கை எப்படி வளர்கிறது...? என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.