ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2020

தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் நல்லதை நமக்குள் இணைப்பதற்கும் உண்டான சக்திகள்


ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் கசப்பான மணத்தைக் கண்டவுடன் ரோஜாப் பூவின் மணங்கள் நகர்ந்து ஓடுகின்றது. ஓடும் போது ஒரு விஷத் தன்மையான தாவரத்திலிருந்து வரும் மணத்திற்குள் மோதியவுடன் தடுக்கப்பட்டு அங்கே சுழலத் தொடங்குகிறது.  

ஏனென்றால்...
1.விஷமே இயக்கமாக ஆனது...
2.”தடுத்து நிறுத்துவதற்கும்... இணைப்பதற்கும்” அந்த விஷமே முக்கியமானது.

உதாரணமாக நோய்க்கு மருந்து கொடுக்கும் போது அதிலே கலக்கப்பட்ட விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் செல்கிறது.

1.நோயை உருவாக்கும் அணுக்களுக்குள் மோதி எதிர்நிலையாகி
2.அங்கே சுழலின் நிலைகள் கொண்டு நல்ல மருந்தினை அங்கே செலுத்தி
3.அந்த நோயிற்குக் காரணமான அணுக்களை அங்கே மாற்றுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செயல்படுத்துகின்றனர்.

போன் டி.பி. (BONE T.B.) வந்துவிட்டால் அதற்கென்ற எதிர்மறையான மருந்துகளை உடலிலே செலுத்தி நோயுற்றவரின் உடலுக்குள் புதுக் கிருமிகளை ஏற்படுத்துகின்றனர்.

ஏனென்றால் அந்த டி.பி.யை உருவாக்கும் அணுக்கள் நல்ல உடலில் உருவான எலும்புக்குள் இருந்து கொண்டு அங்கிருக்கும் ஊனை உணவாக உட்கொள்கிறது. இதனுடைய மலங்கள் பட்டவுடன் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பையே முழுவதாக உருகச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கின்றது டி.பி. அணுக்கள்.

அதே சமயத்தில் அதற்கு எதிர்மறையான மருந்தினை இஞ்செக்சன் செய்யும் பொழுது எதிர்மறையான அணுக்களை உருவாக்கி. எலும்பை உருக்கும் அணுக்களை இது உணவாக எடுக்கின்றது.

உதாரணமாக மனிதனுடைய மலம் வெளியிடும்பொழுது அதிலே நாற்றம் அதிகமாகின்றது. அந்த மலத்துடன் குதிரைச் சாணத்தைக் கலந்தவுடனே அதிலே புதுப் புழு உற்பத்தியாகின்றது. அந்தப் புழுக்கள் மலத்தை எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு வெறும் நீராக மாற்றுகின்றது.

இதைப் போலத்தான் எலும்புருக்கி நோயைக் குறைக்க மருந்தினைக் கொடுக்கும் போது அது எதிர்மறையான கிருமிகளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதனுடன் மிருக நிலைகள் கொண்ட சத்தினையும் பவுடராக்கி மாத்திரையாகக் கொடுப்பார்கள்.

இந்த மருந்தினுடைய மலங்கள் வெளிவிடும் போது டி.பி. அணுக்களுக்கு எதிர்நிலையாகின்றது. அதை உணவாக எடுக்கின்றது. நோயை உருவாக்கும் அணுக்கள் செயலிழக்கின்றது. இது விஞ்ஞான அறிவு.

இதைப் போன்றுதான் அந்த மெய் ஞானியினுடைய உணர்வுகளை தியானத்தின் மூலம் எடுத்து வலுவாக வளர்த்துக் கொண்டால்
1.நம்மை  நைத்துக் கொண்டிருக்கும் தீமையான உணர்வுகளை (நஞ்சினை) வென்றிடும்
2.அந்த எதிர்மறையான உணர்வுகளை நமக்குள் உற்பத்தி செய்யும்.

“இதை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்...”

எதற்காகச் சொல்கிறோம் என்றால்... மனிதனின் வாழ்க்கையில் நாம் அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சதா வேதனைப்படச் செய்யும் நிலைகள் ஆகும் போது அந்தத் தீமைகளையும் துன்பங்களையும் அடக்கிட வேண்டும் என்பதற்குத் தான்..

இன்றைய விஞ்ஞான அறிவு... மருந்தின் மூலம் டி.பி. அணுக்களின் வீரியத்தைத் தணிக்க மருந்தினைக் கொடுத்து அது இடும் மலத்தால் நம் உடல் அழியா வண்ணம் டி.பி. அணுக்களை எப்படி மடியச் செய்கின்றனரோ... அதே போல்
1.இன்றைய உலக நிலையில் காற்றில் பரவி வரும் விஷத் தன்மைகள் நமக்குள் உருவாகாதபடி
2.தடுக்க வேண்டும்... தடுக்க முடியும்...! என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

நல்லது என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றலால் எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் பிறருடைய தீமையின் நிலைகள் நமக்குள் வந்தவுடனே அது எதிர்நிலையான கிருமிகளாக உடலுக்குள் உருவாகின்றது.

பின் அது மன நோயாகி உடல் நோயாகி இந்த மனித வாழ்க்கையையே நலிந்திடச் செய்யும் நிலையாக வந்து விடுகின்றது.

இத்தகைய தீமைகளை வென்றிடத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெறும்படி செய்கிறோம். அந்த ஞானிகளின் உணர்வுகளை வளர்க்கப்படும்போது இதனின் ஆற்றல் பெருகப் பெருக உங்களை நைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தீமைகள் அகலும்.

ஆகவே நீங்கள் நன்மை செய்யும் போது அறியாது உட்புகுந்த அந்தத் தீமைகள் குறையச் செய்வதற்கே இந்த உபதேசம்.

அந்த மெய் ஞானிகள் எப்படி நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினரோ அதைப் போல உங்களுக்குள் அது விளைய வேண்டும்.

நீங்கள் சிரமப்பட்டு... துயரப்பட்டு... உங்களை வேதனைப்படச் செய்து கொண்டிருக்கும் இந்த உணர்வினை அடக்கி.. உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்டும் நிலைகளுக்கே இதைச் சொல்கிறேன்.

நீங்கள் இதன்படி செயல்பட்டு “மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று சொல்லும் போது அதை நான் (ஞானகுரு) கேட்டால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நீங்கள் எல்லோரும் ஆக வேண்டுமென்று நான் எண்ணுகின்றேன்.

குருநாதர் கொடுத்த வாக்கின்படி நான் அதை எனக்குள் விளைய வைத்து இந்த சொல்லின் வாக்கால் உங்களுக்குள் விளையச் செய்கின்றேன்.

இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்...! என்று கண்ணன் சொல்வதாகக்க் காவியங்கள் உண்டு.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ
2.இதே கண் அந்த உணர்வால் தாக்கப்பட்டு... உணர்வின் தன்மை நுகரப்பட்டு
3.அதனின் நிலைகளையே அதுவாக மாற்றுகின்றது.

அதாவது...
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும்போது அதன் உணர்வு எனக்குள் நல்லதாக விளைகின்றது
2.அந்தச் சொல்லின் உணர்வு கொண்டு உங்களுக்குள் நன்மை செய்யும் உணர்வாக இயக்கினாலும்
3.அந்த உணர்வின் தன்மை எனக்குள் மகிழ்ந்த உணர்வாக விளைகின்றது.

இந்த வழியினைத் தான் குருநாதர் என்னைச் செயல்படுத்தச் சொன்னார்.