
உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்
வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே
சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
 1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி
எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின்
நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!
 
விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய
எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப்
பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.
 
குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும்
துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.
 
குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச்
சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டுச்
சென்றான்…! என்பார்.
 
என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால்
கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன்… அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.
 
1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான்
அவர் சிந்தித்தார்.
  
பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம்… “அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது… இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக்
கொண்டிருந்தேன்.
 
ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது
அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.
  
ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை
எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது
பளீர்.ர்ர்… பளீர்.ர்… என்று மற்ற எல்லாவற்றையும்
தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன
செய்கின்றது…? பார்…!
  
அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக்
கொடுத்துவிட்டார்.
 
உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள்
ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு
ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
 1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை
மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண
மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள்
மகிழ்ச்சியை ஊட்டி
 4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து
அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.
  
குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
 1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின்
இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும்
அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் “செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”
 
மெய் ஒளியின் தன்மை… இயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து
உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.
 
மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி… சிருஷ்டிக்கும் தன்மையாகப்
 1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம்
வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி
மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
 
ஆனால் நமது சாஸ்திர விதிகள் “அம்மி மிதித்து…
அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக்
காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.
 
கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள்
எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.
 
கணவன் மனைவி என்பதே…
1.உயிர் கணவன் ஆகின்றது
 2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது
மனைவியாகின்றது.
 
எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச்
சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச்
சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்பு… அந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல்
பெறுகின்றது.
  
அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே
ஒன்றிய நிலைகள் கொண்டு
 1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
 2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே
சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.