
“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்
ஓ…ம்
ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
1.வெறும் சொல்லாக இல்லாது உயிருடன் ஒன்றி ஒலிகளை எழுப்ப
வேண்டும்
2.நமது நினைவை “உயிருக்குள் செலுத்தி” அதை ஏங்குதல் வேண்டும்.
யாம் உபதேசிப்பதைக் கூர்மையாக நீங்கள் கேட்கின்றீர்கள்… பதிவாகின்றது. அதை உடலுக்குள் உருவாக்க…
தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்ற… ஓ…ம்
ஈஸ்வரா என்று நாம் உயிரோடு ஒன்றி அதைக் கவர்தல் வேண்டும்.
ஓ…ம்
ஈஸ்வரா என்றால் அது நமக்குள் இயங்குகிறது என்று பொருள். என்னை
ஜீவனுள்ளவனாக இயக்கிக் கொண்டுள்ளாய்… நான்
எண்ணுவதை எனக்குள் இயக்குகின்றாய் எனக்குள் உருவாக்குகின்றாய்…! என்பது.
குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும்
அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. ஓ…ம் ஈஸ்வரா குருதேவா
என்று சொல்லும் பொழுதெல்லாம் “புருவ மத்தியிலே… துடிப்பின் நிலைகள் வலு அதிகமாகும்…”
ஆகையினால் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிருடன் நினைவைச்
செலுத்தி இந்தக் குரலை நாம் எழுப்புதல் வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம்
கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்த நினைவோடு நாம் அருள் சக்திகளை
எண்ணி எடுக்க வேண்டும்.
தியானம் இருக்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வின் ஒலி அலையை நினைவுக்குக்
கொண்டு வரும் பொழுது “அந்த
அதிர்வின் நிலைகள்” செயலாகும்.
எத்தனை பேர் சேர்ந்து நாம் இதைச் சேர்ந்து சொல்கின்றோமோ
எத்தனை வகையான குணங்கள் இருந்தாலும்… நம்முடைய நினைவில் இந்த
ஆற்றல் பெருகும்.
அகஸ்தியன் தாய் கருவிலே உருப்பெற்ற உணர்வுகளையும் குழந்தைப்
பருவத்திலே பெற்ற உணர்வுகளையும் உங்களுக்குள்
பதிவாக்குகின்றோம்.
1.அதை நினைவாக்கி மீண்டும் சுவாசிப்பதற்கு முதல் படியாக இதைக் கொண்டு வருகின்றோம்.
2.இதற்கு முன் பரவலாகச் சொல்லி இருந்தாலும் அந்த உண்மை உணர்வுகளைச்
சொல்லி
3.இதிலிருந்து உங்களை வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதை
ஞாபகப்படுத்துகின்றோம்.
அணுவின் ஆற்றலை அறிந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவுக்குக்
கொண்டு வாருங்கள்.
அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற சக்தியும் பிறந்த பின் அவர்
பெற்ற உணர்வலைகளையும்
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாக
தனக்குள் உருப்பெற்றதையும்
3.நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகித் தன்
உணர்வலைகளை தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த “அந்த முதல்
நிலையை…”
4.புருவ மத்தியில் எண்ணி ஏங்கிப் பெறுங்கள்.
அகஸ்திய மாமகரிஷி முதல் நிலைகளில் குழந்தைப் பருவத்தில்
தாய் கருவில் பெற்ற உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கிப் பார்க்கும் பொழுது… சூரியனை உற்றுப்
பார்த்து அதன் இயக்கத்தைக் காணுகின்றார்… உணர்கின்றார்.
1.அதை நாம் பார்க்க வேண்டும்… உணர
வேண்டும்… நுகர வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட சூரியனின் செயலாக்கங்களைக் காண வேண்டும் என்று
புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் புருவ மத்தியில் சூரியனின் மின் அணுக்களின் கதிர்களைப்
பார்க்கலாம்.
உயிரிலே மோதும் பொழுது புருவ மத்தியிலே கனமும்… அந்த ஒளிக்கதிர்களும்… அதை உணரும் சக்தியும் கிடைக்கும்.
நமது பிரபஞ்சத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற இருண்ட
கோள்களின் மீது பட்டு அந்தக் கோள்களும் மின்னணுக்களைப் போன்று தோன்றுவதைக் காணலாம்.
உங்கள் நினைவின் ஆற்றல் இப்போது விண்ணிலே இருக்கின்றது. வானத்தில் நாம் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம் அல்லவா. அதைப் போன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் கோள்களில் தாக்கப்படும்
பொழுது அது மின் அணுக்களாக உங்களுக்குத் தோற்றமளிக்கும்.
1.அன்று அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணை நோக்கிப்
பார்த்தான் அல்லவா…
2.அதே உணர்வுகள் உங்களில் இப்பொழுது தெரியும்.
மறந்திடாது உங்கள் உயிருடன் ஒன்றி…
உயிர் வழியாக விண்ணிலே நினைவைச் செலுத்தி… வான் வீதியிலே
பரவி வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தாக்கி அது மின்னுவதை… இப்பொழுது உங்கள் உடலுக்குள்… நினைவுக்குள்… அந்த உணர்வின் அலைகள் பாயும் பொழுது “காட்சிகளாக…” அதை உணரலாம்.
இரவிலே நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் எப்படி
மின்னுகின்றதோ அதே உணர்வுகள் உங்களுக்குக் காட்சிகளாக அந்த மின்னணுவின் தன்மையைக்
காண முடியும்.
அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு
1.அவன் தனக்குள் பெற்ற மகிழ்ச்சி பெறும் உணர்வுகள்
2.உங்கள் உடலுக்குள் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர்
பெற்றது போன்று மகிழ்ச்சியான உணர்வுகள் தோன்றும்
3.உங்கள் உடல்களில் ஊடுருவி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகத் தோன்றும்.
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.
இப்பொழுது அகண்ட வெளியைப் பார்த்தது போன்று உங்கள் உடலுக்குள்
இந்த உணர்வலைகள் படர்ந்து வருவதை உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் ஒளியின்
சுடராக ஊடுருவதை உணர முடியும்.
சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் எப்படி மற்ற
கோள்களில் படும் பொழுது அது மின்னுகின்றதோ உங்கள் உயிரின் உணர்வுகள் இதன் வழி கொண்டு
உங்கள் உடலுக்குள் அது மின்னுவதைக் காண முடியும். உங்கள் உடலுக்குள் அந்த ஒளியின் சுடர்
தெரியும்.
இப்பொழுது
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… தனக்குள்
விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் பாயச் செய்து
2.நம் குருவின் உணர்வலைகள் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து
கொண்டிருப்பதை
3.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளைப் பெறும் அந்த தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அந்த உணர்வின் அறிவு உங்கள் உடலுக்குள் பதிவாகி
அதனின் நினைவாக
1.நீங்கள் எண்ணும் போதெல்லாம் மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும்
சக்தி பெறுகின்றீர்கள்.
2.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து ஒளிக் கதிர்கள்
உடலுக்குள் பரவுவதை உணர முடியும்… ஒளியின் சரீரம் ஆவது
போன்று…!
அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் பொழுது தாய் தந்தையரைப்
பார்த்து நுகர்ந்த…
1.அவர்கள் உடல்களிலிருந்து வெளி வந்த அந்த பச்சிலை வாசனைகளை
இப்பொழுது நீங்கள் நுகர்வீர்கள்… நுகரும் ஆற்றல் பெறுவீர்கள்.
2.இது உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க உதவும்.
அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தையர் பால் செலுத்தும்
பொழுது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் பொழுது
1.அவன் மகிழ்ச்சி பெற்ற உணர்வுகள் அது எவ்வாறோ அதைப் போன்று
2.அந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று “கடும் தீமைகளை அடக்கி…”
3.மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக… அந்த
மகிழ்ச்சியின் பெருக்காகப் பெருகுவதை உணரலாம்.
நாம் மலைப் பகுதிகளுக்குச் சென்றால் ஆங்காங்கு இருக்கும்
தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று
1.நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் இப்பொழுது அந்த நஞ்சை
வெல்லக்கூடிய மூலிகை மணங்கள் சென்று
2.பல அற்புத மணங்களாக உங்கள் உடல் முழுவதும் படரும்
3.உங்கள் நினைவுகள் அனைத்து மகிழ்ச்சி பெறும்.
அகஸ்தியன் கண்டுணர்ந்த அண்டத்தினை… அதன் அறிவின் தொடராக
அறிந்துணரும் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் பெற்று… அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
இது அனைத்துமே முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்பட்டது…! பதிவாக்கி இருக்கின்றேன்…! ஈர்க்கும் சக்தி வரும் பொழுது நினைவுபடுத்தி
அதை ஏங்கிப் பெறுகின்றீர்கள்… அதை உணர்கின்றீர்கள்.
பாடநூல்களைப் படித்த பின் இன்னதுதான் என்ற நிலையில் ஒரு
பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில் காண்பது போன்று
1.அகஸ்தியன் கண்டதை எல்லாம் நீங்கள் காணும் நிலை
பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்… மாறுவதற்குத் தான் முதல் நிலையாக இதை உங்களுக்குள் கொடுக்கின்றேன்…!