
சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!
தில்லைய,ம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம்
அமைத்திருக்கும் இடத்தைப் பற்றிய “உண்மையை
(சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.
1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின்
இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின்
இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.
அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.
பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது
யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது “கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.
பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள்
இறக்கும்படி செய்தால்… அதிலிருந்து
தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக்
கொண்டவன் அவன்.
“தன்னுடைய சுகத்தை எதிலேயுமே மறையாது…” பல உடல்களில்
தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச்
செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.
1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய
மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர்
இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப்
புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால்
அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்…
ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.
அதிலே இரு வகை உண்டு.
உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால்… உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும்
பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும்… இது ஒரு முறை.
அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின்
உடலுக்குள் புகுந்து…
நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது
இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச்
சுருங்கச் செய்து… அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.
இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.
எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன்
சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.
போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய
சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த
உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.
இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான்
மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.
சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து
பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி
அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.
இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன
பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து “தில்லையம்பதியில்… சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!
இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின்
உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.
இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி
வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.
எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான
சந்தர்ப்பத்தை எடுத்து…
ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.
அப்பொழுது மாடு மேய்ப்பவனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.
ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற
பின்… அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.
அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!
அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும்
பொழுது அரசிக்கு அஞ்சியும்
சேனாதிபதிக்கு அஞ்சியும் தான்
இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே வந்தது.
1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய
உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச்
சிந்தனைகள் வருகிறது.
அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை
தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது
நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.
இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச்
சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற
உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.
தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால்
இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.
அவன் சொன்ன தத்துவம்… நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.
ஆதியிலே… பேரண்டத்தில்
விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது.
வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு
ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.
இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின்
தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.
இந்த இடம்…
தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம்
பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா
என்றும் காட்டினார்.
பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது
விஷம்… அதனால் தாக்குண்டு வெப்பமாக
உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை
ஆதிலட்சுமி…!
திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும்
நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப்
பெற முடியும்.
தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த
நிலைகளை உணரப்படும் போது…
எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம்
அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை
மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…?
என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..
மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல
மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் “வாழ்க்கையில்
வரும் தீமைகளை…” நீக்க முடியும்.
அதே சமயத்தில்…
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற
வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும்
பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.
ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.
வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப்
போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல...!
ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக்
கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக
மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் “உயிரே…”
இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன்
அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால்
அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.
ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில்
நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில்
உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.
நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது
தடுப்போம்… உலக மக்களைக் காப்போம்…!
1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு
அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்…
பிறந்த பின் உலகைக்
காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.
இதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம் அதைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க
வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.