
இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி
நம்முடைய சுவாச நாளங்களில் இரத்தம் போகும் பாதைகளில் அடைப்புகள்
இருக்கலாம் சந்தர்ப்பத்தில் நாம் சுவாசிக்கும் போது புகையிலை… அதாவது
1.சில புகை பிடிப்பவருடைய அந்தப் புகையை நாம் சுவாசித்து இருந்தாலும்
2.நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட
அவர்கள் பிடிக்கின்றார்கள் என்று எண்ணினால் போதும்
3.சுவாசத்தின் வழி கூடி சுவாசப் பையிற்குள் சென்று இரத்தம் போகும்… அந்த நாளங்களிலே உறைந்து விடும்.
இப்படி உறைந்து விட்டால் அந்தப் பக்கம் இரத்தம் போகவில்லை என்றால்
இன்னொரு பக்கம் போகும். அங்கேயும் அடைபட்டால் அடுத்த பக்கம் போகும்.
இப்படி மூன்று பாகமும் அடைபட்டால் நிரையீரலுக்கோ மற்ற
உறுப்புகளுக்கோ இரத்தம் போகாதபடி இருதய
வலி வருகின்றது நெஞ்சு வலி அதிகமாகின்றது மடியக் கூடச் செய்து விடுகின்றது.
ஆகவே… இருதய வலி இருந்தால் இடுப்பிலே
நான்கு விரலையும் பிடித்து சிறிது நேரம் பின்னுக்குச்
சாய்ந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவாற்றலுடன்
மூச்சை எடுத்து… அடக்கி…
மீண்டும் அந்த மூச்சை விடுங்கள்.
2.மூச்சை இழுங்கள் ஒரு நொடி நிறுத்துங்கள்
3.பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
என்று அந்த மூச்சை வெளியில் விடுங்கள் “மெதுவாக..”
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று சுவாசத்தை எடுத்து
உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும். இரத்த
நாளங்களில் உள்ள அடைப்புகளை அதை நீக்கிவிடும்.
அதிகமான தொல்லையாக இருந்தால் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர்
தியானம் செய்யக்கூடியவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெற வேண்டும் என்று எண்ணுங்கள். விபூதியையோ நீரையோ முன்னாடி வைத்துத் தியானித்து
1.அவருக்கு இருதய வலி நீங்கி இருதயம் சீராக
இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று அதைக் கொடுங்கள்.
2.அதை அவர் குடிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி அவர் பெற வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
3.அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும்
என்று எண்ணுங்கள்.
இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். ஏனென்றால் மகரிஷிகளின் அருள்
சக்திகளைப் பெற்று அவர்களுக்குப்
பாய்ச்சப்படும் பொழுது அது நல்லதாகும்.
இந்தப் பயிற்சிகளை ஒரு ஐந்து நிமிடம் செய்யலாம்.
பயிற்சி முடித்த பின் மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண அலைகளை
உடலுக்குள் அடிக்கடி செலுத்த வேண்டும்.
நம் உடல் அப்பொழுது தூய்மையாகும். பற்று மகரிஷிகள் பால்
செல்கின்றது. உடல் நலம் பெறுவதற்கு இந்த முறைப்படி செய்து
கொண்டோம் என்றால் அது நல்லதாகும். கூட்டுத் தியான்ங்களில் இதைச்
செயல்படுத்துங்கள்; (ஆனால் கர்ப்பமாக இருப்பவர்… ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.)
குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தால் அருள் ஞான நூல்களை
எடுத்து அதிலுள்ள கருத்துக்களைப் படியுங்கள். மகரிஷிகள் அருள்
சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக்
கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
தாய் தந்தையரும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களும் தியானம்
செய்துவிட்டு
1.அந்தக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வளர
வேண்டும் என்று ஆசி கொடுத்தால்
2.அந்த மகரிஷியின் உணர்வுகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
3.குடும்பத்திலே அந்த அருள் ஞானி உருவாவான். இதை நாம்
செயல்படுத்துவோம்.