
மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்
போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும்
அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.
  
பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் உருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி
உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்களை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?
  
அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை
விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…?
என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.
 
அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து
பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும்
உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன்
வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று
தெரிந்து… மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி
மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.
 
1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
 2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம்
கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன்
இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து
முருகன் சிலையை உருவாக்கினான்.
 
மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ
தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர
இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான்.
மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.
 
அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி
வைத்திருப்பார்கள்.
 1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே
ஒரு விதமான வெப்பங்கள் வரும்
 2.வியர்வை வரும்… அதிலிருந்து ஆவிகள்
வரும்…!
 
ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து
வெளிப்படும் மணங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.
 
அதே போன்று… மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும்
சக்தியைப் பெற…”
 1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து
“அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி) ஏகும்படிச் செய்கின்றான். ஏனென்றால்
மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.
 
போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை
எண்ணத்தில் எண்ணி “அந்த மகா மகரிஷி காட்டிய அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின்
ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே
பரவுவதும்… அந்த நினைவுடன் விண்ணை
நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும்… இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.
 
1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை
ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.
 
சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய
உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து… படி மீது ஏறி மேலே
செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி
அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம்
எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
 அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே
அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.
 
ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வினை ஏங்கிப்
பருகும்படி செய்து…
 1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத்
தனக்குள் செருகேற்றி
 2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச்
செய்தான்.
 
அதே ஏக்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும்
பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப்
பார்த்தால்
 1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை
நுகரப்படும் பொழுது
 2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை
அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.
 
ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க)
வேண்டும்…!
 
அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள்
பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள்
காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்த ஏக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.
  
போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில்
தன்னைத் தான் அறிந்தான். விண்ணின்
நிலையை உணர்ந்தான்… விண்ணின் ஆற்றலைத்
தனக்குள் பருகினான்.
 
இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை
கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள்
அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை
உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து
வைத்தான்.
 1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும்
நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
 2.தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.
 
நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்
என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக
மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள்
மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.
 
அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில்
நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர்
மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.
 
அதைப் பெறுவதற்கு… தாவர இனச்
சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு
உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.
 
அவன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள்
எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி… அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி… அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு
கொண்டான்…”
 
இது தான் போகன் செய்த நிலைகள்.