ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2025

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்


அகஸ்தியன் துருவத்தின் வழி வானுலக ஆற்றலைத் துருவத்தின் வழி நம் பூமி பெறுவதை டைமறித்து அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தறிந்தான்.
 
அந்த உணர்வுகளை நாமும் பெற
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
2.அந்த துருவத்தினை எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
3.நமது பூமி சுழல்வதும்
4.பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகள் பூமி செல்லும் பாதையில் அணுக்களாக இருப்பதை
5.துருவப் பகுதியில் அதை ஈர்க்கும் சக்தியாக வருவது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
6.கண் வழி தான் இந்த நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றச் செய்து
7.அகக்கண் வழிகொண்டு நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.
 
புறக்கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்த்தன் துணை கொண்டு
1.உங்கள் உயிருடன் ஒன்றி க்கண்ணுடன் இணைத்து நினைவினைப் பூமியின் துருவப் பகுதிக்குச் செலுத்தினால்
2.துருவப் பகுதியில் கவரும் அந்த நிலையை பூமி சுழன்று கொண்டிருப்பதையும்
3.இந்த எல்லையிலிருந்து வானுலக ஆற்றலின் சத்து அந்தத் துருவப் பகுதி வழியாக எப்படி வருகிறது…? என்பதும் காட்சியாகத் தெரியும்.
 
அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன் அதன் உணர்வே ஒளியாக மாறும் நிலை அவனுக்கு வருகின்றது.
 
பூமி தான் சுழலும் பாதையில் நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தக் கூடிய உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்குப் பரவி வருவதையும் மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும் நம் பூமியின் துருவத்தின் ஈர்ப்பிற்குள் வருவதையும் உங்களால் கவர முடியும்.
1.நுகரும் பொழுது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்.
2.சிறிது நேரத்தில் நெடி கலந்த நிலைகளும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும் நறுமணம் கொண்ட உணர்வுகளும் வந்து கொண்டே இருக்கும்.
 
உணர்வுகள் உயிருடன் ஒன்றி உடலுக்குள் சென்று நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணங்களிலும் அது மோதும் பொழுது
1.உடலுக்குள் பல அதிசயங்களாக… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
2.ஒரு ஆனந்தமான ஒளி வெளிச்சமாக நமக்குள் வந்து கொண்டிருக்கும் மாறிக் கொண்டே இருக்கும்.
 
சாதாரண எண்ணெயில் ஒரு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினோம் என்றால் அதிலே ஒரு எரிச்சல் கலந்த நிலையாகத் தெரியும். ஒரு பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது எண்ணெயின் சக்தியை ஆவியாக மாற்றி அது குளிர்ந்த ஒளியாக மாற்றும்.
 
தைப் போல
1.இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள் துருவ மகரிஷியின் அருள் உணர்வுடன் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றி விட்டுக் குளிர்ந்த ஒளியாகக் காணுவது போன்று
3.உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் ஒளியின் தொடராகப் பரவும்.
 
உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களில் மீது மோதும் பொழுது
1.அந்த ஞானியின் உணர்வு உங்கள் உடலுக்குள் பளீர்…ர் பளீர்…ர் என்று மகிழ்ச்சி பெறும் உணர்வாகத் தோற்றுவித்துக் கொண்டே வரும்.
2.உடலில் மாற்றங்கள் பெறுவதைக் காணலாம்
 
வெல்டிங் வைக்கப்படும் பொழுது பளீர்…ர் என்று மின் ஒளிகள் வரும்.து  எரிச்சல் கலந்ததாக இருக்கும் ஆனால் பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது அது எப்படிக் குளிர்ந்ததாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் அருள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்து மகிழ்ச்சி பெறும்ணர்வின் அணுக்களாக
2.நம் உடலில் ஒளித்தன்மை படர்வதைக் காணலாம் உணரலாம்.
3.ஒரு சுவை மிக்கதாக மாறி வரும்.
 
புருவ மத்தியில் எண்ணி நினைவினைத் துருவ மகரிஷிகள் பால் செலுத்தி துருவ மகரிஷியின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தப்படும் பொழுது
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டி அதன் மூலம் உட்பொருளைக் காணுவது போன்று உங்கள் உடலுக்குள் வெளிச்சங்கள் ஊடுருவுதையும்
2.ஒவ்வொரு உணர்வின் அலைகள் மோதும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களுக்குள் தோன்றுவதையும்
3.ஒளி கண்ட பின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஆற்றல்மிக்க சக்தியாக இது இணையும்.
4.துருவ மகரிஷியின் உணர்வுகள் உயிருடன் மோதும் பொழுது மெர்குரி போன்று உயிரிலே வெளிச்சம் வரும்.
5.இளம் நீமாக ஒளி அலைகள் புருவ மத்தியில் கண்களுக்குப் புலப்படும்.
 
இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைச் செலுத்தப்படும் பொழுது உடலில் மகிழ்ச்சி பெறும் நிலை உருவாகும்.
 
1.இதற்கு முன்பு அறியாது சேர்ந்த பல தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க இது உதவும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து மன பலம் பெற இது உதவும்.
 
விண்ணுலக ஆற்றல் பூமியின் ஈர்ப்பால் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு நடு மையத்திற்குச் சென்று எப்படி அடைகின்றது…? அதனின் அடர்த்தி மின் அணுக்களாக பூமிக்குள் சென்று குவித்தவுடன் ஒன்றுக்கொன்று மோதும் பொழுது கொதிகலன் எப்படி உண்டாகின்றது…? அதிகமான வெப்பம் அங்கே எப்படி உண்டாகிறது…? என்று குருநாதர் காட்டுகிறார்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு அணுகுண்டைப் போட்ட பின் அணுக்கதிரியக்கங்கள் மற்ற பொருள்களுடன் தன் இனமான நிலைகளுடன் மோதி இது வளர்த்துக் கொண்ட உலோகமானாலும் கல்லானாலும் மண்ணானாலும் அதை ஆவியாக மாற்றி ஒரு புகை மண்டலமாக மாறுகின்றது. மற்றொன்றை அழித்துத் தன் இனமாகப் பெருக்கி அதன்பின் அது மடிந்து விடுகின்றது.
 
இதைப் போன்று தான் நம் பூமிக்குள் வளர்ச்சிகள் அடைகின்றது என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார்.
 
இது அனைத்தையுமே… வானுலக ஆற்றலைத் தன் உடலுக்குள் காணுவது போல தன் உடலுக்குள் இருந்த உணர்வை இந்த மண்ணுலகிலும் (புவியியல்) ஊடுருவிச் செலுத்தித் துருவன் காணுகின்றான். அதிலே தாவர ங்களின் வளர்ச்சியையும் காணுகின்றான்.
 
உயிரணுக்கள் நீர் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உருவாக்கப்பட்டு அதனின் கருமுட்டைகள் புயல் காற்றிலே சிக்கப்பட்டு மேக மண்டலத்துடன் கூடி நிலப்பரப்பில் விழுகப்படும் பொழுது எதன் தன் கலவைகள் அதற்குள் கலந்திருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு இங்கே தரைவாழ் உயிரினங்களாக உருவாகின்றது.
 
ஏனென்றால் இதையெல்லாம் தனித்துத் தனித்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆயுளும் பத்தாது நேரமும் பத்தாது…! சுருக்கமான நிலைகளில் அவர்கள் கண்ட உணர்வினை குருநாதர் காணும்படிச் செய்தார். நீங்களும் அதைக் காணும் நிலைகள் வரும்.
 
துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில் அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி அழியாது பேரின்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாம் அனைவரும் அந்த அழியா நிலைகள் பெறலாம்.
 
இந்த உயிரில் எது இணை சேர்த்து வளர்க்கப்படுகின்றதோ அதை உயிர் அணுத்தன்மையாக மாற்றுகின்றது என்ற நிலையை அறியச் செய்வதற்குத் தான்
1.நம் குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்களும் பெற்று உடலுக்குள் வளர்ச்சியாகி
2.அந்த அணுத் தன்மையாக வளர்த்து அதையே நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.
 
ஆனால் அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும் போது விஷத்தன்மையை அடக்கி அதன் வலுவின் தன்மைகொண்டு மற்றதை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்தது போன்று
1.எல்லோருக்கும் அந்தச் சந்தர்ப்பம் வருவதில்லை.
2.ஒருவரால் உருவாக்கப்பட்டு அதிலே விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டு
3.அதே இன மக்களால் சந்தர்ப்பத்தால் கவரப்பட்டு வெளிவருவது தான்எல்லோரும் அந்த வழியில் செய்ய முடியாது.
 
குருநாதர் எத்தனையோ தவத்தைச் செய்தார். அதன் வழியில் நானும் சென்றேன். அவர் பதிவு செய்த நிலைகளை அறிவதற்காக காடு மேடு அனைத்தும் அலைந்தேன். உண்மையை உணரும்படி செய்தார். எனக்குள் வளரும் நிலையை உருவாக்கினார்.
 
அதே போன்று நீங்கள் எல்லோரும் காட்டிற்குள் சென்றால்… தொழில் செய்வது எங்கே…? சாப்பிடுவது எங்கே…? குடும்பம் எங்கே அப்படி இருக்க முடியும்…? முடியாது…!
 
யாராவது ஒருவர் விளைய வைக்கும் நிலையில் தான் செயல்படுத்த வேண்டும்…”