ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2025

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 
இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் கைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.
 
ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.
 
நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.
 
பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம்ண்ணி அந்த உணர்வினை  நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு நமக்குள் விளையாது அதை குறைக்கச் செய்யும்.
 
அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.
 
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் - ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.
 
அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.
 
அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
 
உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு  ட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கிச் சுவாசியுங்கள்…”
 
இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.
 
ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.
 
1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.