
ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்
உங்கள் எல்லோருக்கும்
சக்தி கொடுத்திருக்கின்றேன்.
ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ
தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.
அப்புறம் என்ன
செய்கின்றீர்கள்…?
1.சோர்வான அணுக்களாக
விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.
அதனால்தான் அடிக்கடி ஆத்ம
சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு
அதற்குப் பயிற்சி கொடுப்பது.
1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம
சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…!
என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
கையிலே மண்ணை எடுத்து
வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?
அல்லது கையிலே அழுக்குப்
பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி
இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல்
நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு
சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு
நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!
அந்த மாதிரி… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை
கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள்
கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத்
தடைப்படுத்த முடியும்.
ஏனென்றால்… எப்படித்தான்
இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.
நானே இருக்கின்றேன்… எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும்
சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் “சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக்
கேட்பீர்கள்.
எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள
பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள்.
வேதனை நீங்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
சாமி சொன்ன வாக்கு
உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது
முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை
நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த
கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த
மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.
தபோவனத்தில் இப்பொழுது
தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?
உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால்… அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.
பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…?
பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார்
வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.
1.போ…! உன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம்
நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும்
இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச்
செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.
வாத சம்பந்தப்பட்ட
நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக
இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே
தெரியும்.
இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம்
எல்லாம் “உடல் பற்றுக்கு வந்துவிடும்…”
ஆகையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக
நிறுத்தி விட்டேன்.
1.மகரிஷிகள் அருள்
சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும்
எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம்
நன்றாகும்.