
தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்
1.பூமி தன் துருவப்
பகுதி வழியாக விண்ணிலிருந்து கவர்ந்து
வருவதைத் தன் ஐந்தாவது வயதில் துருவன்
கண்டுணர்ந்து
2.வானஇயல் தத்துவம் புவிஇயலாக மாறுவதைத் தன் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றான்.
அந்தக் கால பாஷையில் அவன் வெளிப்படுத்தும் போது… அதற்காக வேண்டி ஒவ்வொன்றையும் பொருள்களை ஜாடையில்
காட்டி அதைச் சொல்கின்றான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வருகின்றது.
இருந்தாலும் ஐந்து வயது நிரம்பும் போது தன் குழந்தையின் அறிவைக் கண்டு தாய்
தந்தையர் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.
ஆனந்தப்பட்டாலும்… அவர்கள் பூசிக் கொண்ட விஷத்தன்மையான மூலிகைகளினால் உடலில் அணுக்கள் உருவாகி… அது வளர்ச்சி பெற்று விஷத்தின்
தன்மையாக நுகரப்படும் பொழுது அவர்கள்
உடலில் நோயாக மாறுகின்றது.
அகஸ்தியன் தாய் தந்தையர்
உடலில் அந்த விஷத்தன்மைகள் பெருகி மனிதனாக உருவாக்கிய அணுக்களுக்கு எதிர்நிலையாக
ஆகிறது. கடும் வியாதியாக மாறி
அவர்கள் மரணம் அடைகின்றார்கள்.
ஆனால் தாய் கருவிலிருக்கப்படும் பொழுது
1.அகஸ்தியனுக்கு
விஷத்தின் ஆற்றலை மாற்றிடும் அணுக்கள் வளர்ச்சி பெற்று
2.விஷத்தை அடக்கிடும்
சக்தியாகப் பூர்வ புண்ணியமாக அவனுக்குக் கிடைக்கின்றது.
தாய் தந்தையருக்கோ… அவர்கள் உடலில் வளர்ச்சி பெற்ற… மனிதனைத்
தெளிவாகும் அத்தகைய அணுக்களில்
1.விஷத் தாவர இனங்களை ஆவியாக மாற்றிச் சுவாசிக்கப்படும் பொழுது அவர்கள் உடலில் பரவி
2.மிருகங்கள் இந்த
வாசனையை நுகர்ந்தபின் அஞ்சி ஓடியது
போல்
3.இவர்கள் உடலில் அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து நோயாக மாறுகின்றது.
உதாரணமாக ஒரு தாய்
கெமிக்கல்களை வைத்துத் தொழில் செய்கிறது என்று
வைத்துக் கொள்வோம். வேலை செய்யும் போது அங்கிருக்கக்கூடிய விஷத்தன்மைகளைத் தாய் நுகர்கிறது.
1.கருவிலிருக்கும் குழந்தையும் அதை நுகரப்படும்
பொழுது
2.அந்தக் குழந்தை “விஷத்தன்மையைத்
தாங்கும் சக்தியாக” வளர்கிறது.
ஆனால் தாய் நுகர்ந்த
கெமிக்கல் உடலுக்குள் சென்ற பின் தாய்க்குக் கடும் நோயாக ஆகி அது மடியும் தன்மை வருகிறது.
அதே சமயம் தந்தை… இந்தக் கெமிக்கலின் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து அதிலே உருப்பெறும் கருவின் தன்மை
பெண்பால் நிலைகள் கொண்ட சுக்கிலத்துடன் கலக்கப்படும் பொழுது… ஆணில் விளைந்த விஷத்தின் தன்மை அது இரண்டும் கலந்து
கரு முட்டையுடன் இணைக்கப்படும் பொழுது
1.கருவிலே உருப்பெரும் குழந்தை உடலில் விஷத் தன்மை
பெருகி
2.அதற்குக் “கடும் நோயாக இது உருவாகிவிடுகிறது…”
ஏனென்றால் இதனுடன் இணைந்த
உணர்வுகள் கருவாக வளர்க்கப்படுவதற்கு “அந்தக் கெமிக்கல்” உணவு கொடுக்கின்றது… உடலை உருவாக்குகின்றது. ஆக
அந்த விஷத்தன்மை திடப்பொருளாக உடலாக மாற்றப்படும் பொழுது
நோயாகி விடுகின்றது.
தாய் அந்தக் கெமிக்கல் கலந்த உணர்வைத் தான்
சுவாசிக்கப்படும் பொழுது அது தாய் உடலில் நோயாகிறது. கருவிலிருக்கக்கூடிய
குழந்தைக்கு அந்த உணர்வு பட்டபின் நோயாக அது மாறுவதில்லை.
அதே சமயம் ஒரு நோயுற்ற குழந்தை வேதனைப்படுவதைத் தாய் உற்று
நோக்கி அந்த உருவத்தினை நுகர்ந்து பதிவாக்கி
விட்டால் தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணையப்படும் பொழுது அந்த நோயுற்ற உடலில்
விளைந்த உணர்வுகள் சுவாசிக்கப்படும் பொழுது… கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைந்து
விடுகிறது.
1.அந்தக் குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் கருவிலே உருவாகும் குழந்தைக்கும் வந்து விடுகின்றது.
ஏனென்றால் இந்த
மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சொல்கிறேன்.
மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் பொழுது தான்
சுவாசித்த உணர்வுகள் இந்த அணுக்களில் வளரப்பட்டு தாய் கருவிலே விளையப்படும் பொழுது விஷத்தை வெல்லும் சக்தி பெறுகின்றது.
உதாரணமாக தாய் கர்ப்பமாக
இருக்கும் பொழுது தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்தன்மை கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் ஊடுருவி
விடுகின்றது. குழந்தை பிறந்த பின் தேளை வைத்திருந்தாலும் “அந்தத் தேளின் விஷம் குழந்தையைப் பாதிப்பதில்லை…”
அதே போல ஒரு விஷமான
பாம்பு தாயைத் தீண்டிவிட்டால் மருத்துவரிடம் சென்று அந்தத் தாய் பிழைத்து விட்டால் பாம்பினுடைய விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குள் ஊடுருவி… “அந்த விஷத்தை வெல்லும் சக்தியாக அந்தக் குழந்தை பெறுகின்றது பூர்வ புண்ணியமாக…!”
1.பல விதமான நிலைகள்
கொண்டு
2.கருவில் உருவாகும்
சிசுக்களுக்கு இப்படி உருவாகின்றது.
பரிணாம வளர்ச்சியில்
வளரக்கூடியது மற்ற உயிரினங்கள். பரிணாம
வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதனின் உணர்வுக்குள்
விளைந்தது… இன்னொரு உடலுக்குள் புகுந்த பின் வளர்ச்சி அடைந்த நிலையில் “மீண்டும் அது வளர்ச்சியடையும் தொடருக்கு வருகின்றது… விஷத்தின் தன்மை…”
இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ள
வேண்டியது மிகவும் நல்லது.
ஏனென்றால் ஒரு சிலர்
குழந்தையைப் பார்த்த பின் சுறுசுறுப்பாக
இருப்பார்கள். தாய் உற்றுப் பார்க்கப்படும் பொழுது தனக்குள்
இது ஊழ்வினையாக மாறுகின்றது… அணுக்களாக
மாறுகின்றது.
அந்த அணுவின் தன்மை மாற்றப்படும் பொழுது அதன் உணர்வு அதிகமாக
விளைந்து கருவில் விளையும் குழந்தைக்கு வித்தாக மாறுகின்றது.
ஆனால் கண் கொண்டு எந்த மனிதனைத் தாய் உற்றுப் பார்த்ததோ அங்கே விளையும் நோயின்
அணுக்கள் தாயின் உடலில் விளையும்.
தாயின் கருவில் விளையும் சிசுவிற்கு இந்த விஷத் தன்மை வளரப்படும் பொழுது மனிதனால்
உருவாக்கப்பட்ட உணர்வுகள் இங்கே வீரியமடைந்து அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
ஆகவே கருவில் வளரப்படும்
பொழுது அந்தத் தாய் உயர்ந்த ஞானத்தை எடுத்துக்
கொண்டால் உதாரணமாக…
1.யாம் இப்பொழுது போதிக்கும்
உணர்வுகள் அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணின் ஆற்றலை
2.பிரபஞ்சத்தை உற்று
நோக்கி அவன் பெற்ற சக்திகளை
3.தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று கருவிலே நினைவைச் செலுத்தினால்
4.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் கருவில் விளையும் சிசுவிற்குக் கிடைக்கிறது.
அகஸ்தியன் உடலில் உருப்பெற்ற உணர்வுகள் அனைத்தும்
பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டே உள்ளது. அகஸ்தியன் ஒரு உணர்வினை நுகர்ந்த பின் இந்த உணர்வின் எண்ணங்கள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தாயிடம் சொல்கின்றான்.
தான் கற்றுணர்ந்ததைத்
தன் அருகிலிருக்கும் சகாக்களுக்கும்
சொல்லப்படும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகின்றது பல லட்சம் ஆண்டுகளுக்கு
முன்.
1.அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைகின்றது… நேருக்கு
நேர் விளைகின்றது.
2.அக்காலத்தில் அகஸ்தியனைச்
சூழ்ந்து வாழ்ந்தவர்களும் இதே சக்தியைப்
பெறுகின்றார்கள்.
நம் தெருவிலே ஒரு
போக்கிரிப் பையன் இருந்தால் அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவனுடன் பழகக் கூடிய மற்ற பையன்களுக்கும் இணைந்து… அவர்களும் போக்கிரியாக மாறுவார்கள். ஒரு பையன்
கூட நல்ல பையனாக வரமாட்டான்.
குழந்தைப் பருவத்தில் நல்லவனாக இருந்தாலும் ஒருவன்
ரொம்ப சேட்டை செய்கிறான் என்று அதை உற்றுப் பார்த்தால் அவன் செய்யக்கூடிய உணர்வுகளை எல்லாம் நுகரப்படும்
போது இங்கேயும் மாற்றங்கள் ஏற்படும்.
அக்காலங்களில் அகஸ்தியன்
வாழ்ந்த தென்னாடு எல்லாம் கடலுக்குள் சென்று விட்டது. அகஸ்தியன் உருபெற்ற அந்த மலை எல்லாம்
கடலுக்குள் தான் இருக்கின்றது… மேவி விட்ட்து.
அதற்குப் பின் வெளிவந்த பூமி தான் இப்பொழுது நாம் கண்ணிலே காணக்கூடிய
நிலை எல்லாம். அக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கும் பல காட்டுப் பகுதிகளுக்கும்
வந்துள்ளான்.
1.வானுலக ஆற்றலைத் தனக்குள் அவன் எடுத்ததால்
2.தனக்கு நீர் வேண்டும்
நினைக்கும் பொழுது எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ
3.இந்த உணர்வுகள் அந்தப் பாறையில் படுகின்றது… அங்கே நீர் உருவாகின்றது.
மலைப்பகுதியில் சில
பாறைகள் இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் மேகமூட்டமாக மாற்றி அந்த மலைப்பகுதியில்
நீராக மாற்றும் சக்தி வரும்.
சில இடங்களில் மலை உச்சியில் பார்த்தோம் ஒன்றுமே
இருக்காது… நீர் ஊற்றாக அங்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் கீழே தரையிலே சமமான இடத்திலே நீர் இருக்காது.
சில இடங்களில் மேலே வெப்பம்
அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் காந்தப் புலனறிவு சூரியனுடைய கதிரியக்கங்களை அதிகமாகக்
கூட்டினால் அதிலிருந்து எக்கோ வரும். எக்கோ வரக்கூடிய
இடங்களில் மேகங்களை இழுக்காது… கலைத்து
விட்டு விடும். அங்கே நீர் இருக்காது.
ஏனென்றால் அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மைப் போகும்படிச் சொல்லி
1.வானஇயல் ஆற்றல்கள் புவிஇயலுக்கு மாறும் பொழுது
2.மனிதனான பின் மனித நிலையிலிருந்து பதிந்த அந்தக் காந்தப்புலன் எப்படிப் படுகின்றது…?
என்று காட்டுகின்றார்.